...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 9, 2013


36TH CIRCLE CONFERENCE OF AIPEU GR. C, TN IS PROPOSED ON JUNE 5, 6 AND 7 - 2013


NFPE
அனைத்திந்திய  அஞ்சல் ஊழியர் சங்கம், குரூப் ‘ சி  ‘,
36 ஆவது தமிழ் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு , கும்பகோணம் 612 001.
சுற்றறிக்கை எண் :1                                                                நாள் : 04.04.2013

அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களே !

அன்பு வணக்கம் !. நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் 36 ஆவது தமிழ் மாநில மாநாடு நடத்துவதற்கான பொறுப்பை குடந்தை கோட்ட சங்கத்திற்கு அளித்தமைக்கு  முதன் முதலில்  நமது மாநிலச் சங்கத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரவேற்புக் குழு அமைத்திடும் கூட்டம்

இந்த மாநில மாநாட்டிற்கான வரவேற்புக் குழு அமைத்திடும் கூட்டம் கடந்த 24.03.2013 அன்று காலை சுமார் பத்து மணியளவில் குடந்தை தலைமை அஞ்சலகத்தில் நமது மாநிலச் சங்கத்தால் கூட்டப் பட்டது. கூட்டத்திற்கு நமது மாநிலத் தலைவர் தோழர். J. ஸ்ரீ வெங்க டேஷ் அவர்கள் தலைமை வகிக்க,. நமது அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர்  KVS அவர்கள் முன்னிலையில்  நமது மாநிலச் செயலர் தோழர். J ராம மூர்த்தி  அவர்கள் துவக்கி வைத்தார்கள். கூட்டத்தில் நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் N. சுப்ரமணியன் அவர்களும் , நமது மத்திய மண்டலச் செயலர் தோழர். A. மனோகரன் அவர்களும் , மாநிலச் சங்க அமைப்புச் செயலர்கள் தோழர். திருச்சி N. செல்வன், தோழர், புதுக் கோட்டை  R. குமார் அவர்களும்,  AIPEU GDS(NFPE)  சங்கத்தின் மாநிலச் செயலரும் , அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலருமான தோழர். R. தனராஜ் அவர்களும், சேலம் மேற்கு கோட்டச் செயலாளர் தோழர். சஞ்சீவி அவர்களும்  மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்களும் , சில கிளைகளின் அஞ்சல் நான்கு மற்றும் NFPE GDS சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கூட்டத்தில் மாநில மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராக திரு. R. திருநாவுக்கரசு
 (Founder & Chairman Arasu Engineering College, Kumbakonam, Chairman : Arasu Autos, Arasu
Hyundai, Arasu jewels and Arasu bajaj )
அவர்களும் வரவேற்புக் குழு பொதுச் செயலராக தோழர். S. செல்வன் அவர்களும் வரவேற்புக் குழுவின் துணைப் பொதுச் செயலராக குடந்தை அஞ்சல் மூன்றின் செயலர் தோழர். R. பெருமாள் அவர்களும் , வரவேற்புக் குழுவின் பொருளர் ஆக குடந்தை அஞ்சல் மூன்றின் மூத்த முன்னணித் தோழர் V. ஜோதி அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
கூட்டத்தின் முடிவுகள்

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களும், மத்திய மண்டலத்தின் அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் மாநாட்டை சிறப்பாக நடத்தும் வண்ணம்  பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவித்தார்கள் . பொதுக் கருத்து அடிப்படையில்  நம்முடைய மாநில மாநாட்டினை சிறப்பாக  நடத்திடும் வண்ணம் கீழ்க் கண்ட முடிவுகள்  எடுக்கப் பட்டன.
1. மாநிலச் சங்க முடிவினை ஏற்று, எதிர் வரும் ஜூன் 5 , 6 மற்றும் 7 – 2013  தேதிகளில்
  குடந்தை மாநகரில் அஞ்சல் மூன்றின்  36  ஆவது மாநில மாநாட்டினை சிறப்பாக  
  நடத்துவது.
2. ரயில் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில், நகரின் மத்திய  பகுதியில்
  அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா  திருமண மகாலை மாநாட்டு நிகழ்விடமாக   அமைப்பது.     
3.அதன் அருகாமையிலேயே சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்குவதற்கான
  தங்குமிடங்கள் ஏற்பாடு செய்வது.
4. மாநாட்டின் பொது அரங்கு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிட பல்வேறு
  அரசியல்  மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் , சம்மேளனத்தின் மாபொதுச் செயலர்
  மற்றும் அகில இந்திய சங்கத்தின் பொதுச் செயலராகிய தோழர். M. கிருஷ்ணன்
  உள்ளிட்ட  தலைவர்களை  அழைப்பது.
5. மாநாட்டு சார்பாளர்/ பார்வையாளர் கட்டணம் ரூ. 750/- என நிர்ணயிப்பது .
6. மாநாட்டை சிறப்பாக நடத்திடுதல் பொருட்டு நமது அஞ்சல் மூன்று உறுப்பினர்கள்
  அனைவரிடமிருந்தும் ரூ.200/-  நன்கொடையாக பெறுவது.
7. குடந்தை மற்றும் அதன் அண்டை கோட்டங்களிலிருந்து அதிக அளவில் தோழர்களை
  கொண்டு மாநாட்டுப் பணிக்கான  உட்குழுக்களை அமைப்பது.
8. குடந்தைக்கே பெயரும் பெருமையும் சேர்க்கும் பாரம்பரியமிக்க சைவ உணவு சிறப்பான
  சமயற்கலை வல்லுனர்களைக் கொண்டு அமைப்பது.

குடந்தை மாநகரின் சிறப்பு
குடந்தை நகரம் என்பது  தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டத்தின் முக்கிய நகரமாகும். இது  ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய வர்த்தக நகரமாகும். நகரின் தெற்கே அரசலாறும் வடக்கே  காவிரியும் அமையப் பெற்ற வளமான  பூமி  இது.

மேலும் இது கோயில்களின் நகரம் என்று பெயர் பெற்றது. நகரின் மையப் பகுதியில் நான்கு பெரிய கோயில்களைக் கொண்டுள்ளது .  வடக்கே நடைபெறும் கும்ப மேளா போல 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகா மகம்‘ என்ற திருவிழா இங்கு பிரசித்தி பெற்றது.

குடந்தையை சுற்றிலும் நவக் கிரக தலங்களும், சோழ மன்னன்  ராசராசனால் கட்டப் பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை பெரிய கோயில்,  ராசேந்திர சோழனால் கட்டப் பட்ட கங்கை கொண்ட சோழபுரம், சிற்பக் கலைக்கு பெயர் போன  தாராசுரம் , மிகப் பெரிய திருவிடை மருதூர் திருக்கோயில், தென் திருப்பதி எனப் பெயர்பெற்ற ஒப்பிலியப்பன் கோயில்,தென் பண்டரிபுரம் எனப் பெயர்பெற்ற பாண்டுரங்கன் ஆலயம், ஆறுபடை தலங்களில் ஒன்றான சுவாமிலை முருகன் கோயில் என திரும்பிய இடங்களில் எல்லாம் நூற்றுக் கணக்கில் வரலாற்றுப் பதிவுகள்  அடங்கிய பகுதி இது.

இங்கிருந்து 60 கல் தொலைவில் உலகப்பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயமும் , 50  கல் தொலைவில் தமிழகத்தின் தலை சிறந்த தர்காக்களில் ஒன்றான நாகூர் தர்காவும் அமைந்துள்ளதும்,  அதில் அனைத்து மதத்தினரும் சென்று வழி படுவதும் மத நல்லிணக்கத்திற்கு ஒப்பற்ற எடுத்துக் காட்டாகும். 60  கல் தொலைவில்  தரங்கம்பாடி OZONE  கடற்கரை மற்றும் டேனிஷ் கோட்டையும் அமைந்துள்ளது  சிறப்பாகும் . இதே தூரத்தில் சிலப்பதிகாரத்தின் புகழ் மிக்க "புகார்" நகர் என அழைக்கப்படும் பூம்புகார் நகரும் கடற்கரையும் கோவலன் - கண்ணகி  காப்பிய நாயகர்களை நம் நினைவில்  தரும்.  

மேலும் பல செய்திகளுடன் அடுத்த அறிக்கையில் சந்திப்போம்.உங்கள் அனைவரையும் மாநாட்டிற்கு வருக வருகவென இருகரம் கூப்பி பாசத்துடன் அழைக்கிறோம்.இந்த மாநாடு குடந்தையின் பெயர் சொல்லும் சிறப்பு மாநாடாக அமைந்திட உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் வாழ்த்துக்களையும் பணிவுடன் வேண்டுகிறோம்.
மாநாட்டு வரவேற்பு மற்றும் வாழ்த்துக்களுடன் ,

R. திருநாவுக்கரசு                       S. செல்வன்                               v. ஜோதி
தலைவர்                        பொதுச் செயலர்                      பொருளர்
                                    R. பெருமாள்
                             துணைப் பொதுச் செயலர்,
             மாநில மாநாட்டு வரவேற்புக் குழு , குடந்தை கோட்டம் .
மாநாட்டு வாழ்த்துக்களுடன்
J. ஸ்ரீ வெங்கடேஷ்           J. ராமமுர்த்தி         A. வீரமணி
மாநிலத் தலைவர்        மாநிலச் செயலர்  மாநில நிதிச் செயலர்.

0 comments:

Post a Comment