...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 29, 2013


 MADRAS BENCH GRANTED STAY ON MINUS BALANCE RECOVERY

'MINUS BALANCE' ,   'AGENT FRAUD CASE'  மற்றும்    'BPM FRAUD CASE' களில்  நம்முடைய அதிகாரிகள்  இலாக்கா சட்ட விதிகளை மீறி  சாதாரண அப்பாவி ஊழியர்களின் மீது சகட்டு மேனிக்கு  சம்பளத்தில்  'RECOVERY' செய்ய உத்திரவிடுகின்றனர்.  இது தவறு என்பதை சட்ட விதிகளை சுட்டிக் காட்டி  நாம் அவ்வப்போது  உயர் அதிகாரிகளுக்கு 
 தெரிவித்து வருகிறோம். 

அப்படித் தெரிவித்தாலும்  அந்த நேரத்தில் மட்டும் அவர்கள் தலையிட்டு  தற்காலிகமாக நிறுத்திட உத்திரவுகள் இடுகிறார்கள். அதே போல சம்பந்தப் பட்ட ஊழியர்களுக்கு  அவர்களின்  பங்கு குறித்து அறிய  அந்த நேரத்தில் மட்டும்  அதற்கான  ஆவணங்களை பரிசீலனை செய்ய  அறிவுறுத்தப் படுகிறார்கள். 

ஆனால்  மீண்டும் மீண்டும் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள்  அவர்கள் செய்வதையே தான் செய்து வருகிறார்கள். அப்பாவி  ஊழியர்கள் மீது  தேவையில்லாமல் 'RECOVERY'  செய்திட உத்திரவு இடுகிறார்கள். தற்போது சென்னை மத்திய கோட்டத்தில்  இந்தப் பிரச்சினை மீது உரிய சட்டவிதிகளை சுட்டிக் காட்டி  'RECOVERY'  உத்திரவை நிறுத்திட PMG CCR  அவர்களிடம்  கடிதம் அளித்துப்  பேசினோம்.  

அடுத்த கட்டமாக  பாதிக்கப் பட்ட ஊழியர் ஒருவர் மூலம்  நீதிமன்றத்தை நாடி  இந்த உத்திரவை நிறுத்திட தடை ஆணையும்  பெற்றுள்ளோம்  கோட்ட / கிளைச் செயலர்கள், அவர்கள் பகுதியில் இப்படி சட்ட விரோதமாக ஏதேனும்   RECOVERY  பிரச்சினை இருப்பின்  சம்பத்தப் பட்ட ஊழியர் மூலம்  முதலில் , நமது மாநிலச் சங்க கடிதத்தில் காட்டப் பட்டுள்ள  சட்ட விதிகளைச் சுட்டிக் காட்டி  REPRESENTATION  அனுப்பச் சொல்லவும் . 

அதனையும் மீறி  தன்னிச்சையாக  RECOVERY  உத்திரவு இடப்பட்டால்  உடன் நீதி மன்றத்தை நாட  உதவி புரிய வேண்டுகிறோம் . மாநிலச் சங்கம் இதற்கான உதவிகளைச் செய்ய  காத்திருக்கிறது. 
மாநிலச் சங்கத்தின் கடித நகலையும்  நீதி மன்றத் தடையாணை நகலையும் கீழே பார்க்கவும். 

0 comments:

Post a Comment