...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 2, 2015

ஊதியக்குழு --மாற்றங்கள் --கருத்துக்கள் --குறித்து நீங்களும் அனுப்பலாம் .
 ஈமெயில் முகவரி nfpehq@gmail.com அல்லது   aipeugrc@gmail.com அல்லது  ramniwas.parashar61@ gmail.com.  

                                                    மாநிலசங்க அறிக்கை 

APPOINTMENT OF EMPOWERED COMMITTEE BY MINISTRY OF FINANCE/ DEPT OF EXPENDITURE AND DEPT CALLING VIEWS OF THE RECOGNISED UNIONS

அவசரம் ! அவசியம் !

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்  மீதான   உத்திரவுகளை  பிறப்பிப்பதற்கு முன்னர்  துறை வாரியாக மற்றும்  அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கங்களுடன்  கலந்து பேசி  முடிவுகள் எடுக்க   SECRETARY LEVEL EMPOWERED COMMITTEE அமைக்கப்பட்டுள்ளது.  பரிந்துரைகளின் மீது எழுப்பப்படும் பிரச்சினைகளை பரிசீலனை செய்து  அதன் மீது  முடிவுகளை எடுத்திட மூன்று வார காலம் அவகாசம்  அளிக்கப்பட்டுள்ளது. 

இது  குறித்து மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனம் ஏற்கனவே  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இது  ஏற்கனவே நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதன் முக்கிய  பகுதி கீழே  காணலாம் . 

பொதுக் கோரிக்கைகள் மீது, ஊதியக் குழுவின்  பரிந்துரைகளில் எவ்வாறு மாற்றம் வேண்டும் என்பதை ஊழியர்கள்  அனைவரும்  எதிர்  வரும் 5.12.2015 க்குள் மகா சம்மேளனத்தின்  மாபொதுச்  செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்களுக்கு ஈமெயில்  மூலம் கீழ்க் காணும்  முகவரியில் தெரிவிக்கலாம் .
nfpehq@gmail.com

மேலும்  நம் இலாக்கா மூலமாகவும் இது குறித்து  அனைத்து அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களிடம்  எதிர்வரும் 07.12.2015 க்குள் கருத்து  தெரிவித்திட கேட்கப் பட்டுள்ளது.அந்த  அறிவிப்பின் நகலையும் கீழே  காணலாம் .

எனவே  நம் துறை சார்ந்த  பரிந்துரைகளில்  மாற்றம் வேண்டும் என்று கருதும்  தோழர்கள், எந்தெந்த பரிந்துரைகள்  மீது மாற்றம் வேண்டுமோ, அவை குறித்து   உடனே  நம்முடைய  அஞ்சல் மூன்று பொதுச் செயலர் மற்றும்  சம்மேளன மாபொதுச் செயலரின் ஈமெயில்  முகவரிக்கு  தங்கள் கருத்துக் களை  பதிவு செய்திட  வேண்டுகிறோம். ஈமெயில் முகவரி nfpehq@gmail.com அல்லது   aipeugrc@gmail.com அல்லது  ramniwas.parashar61@ gmail.com.  

காலதாமதமாக  தெரிவிக்கப்படும் கருத்துக்கள்  இலாக்காவுக்கு  உரிய நேரத்தில் கொண்டு செல்ல  இயலாது என்பதை  தயவு செய்து  மனதில் கொள்ள வேண்டுகிறோம்.

ஏற்கனவே தஞ்சாவூர் தோழர் நமச்சிவாயம் அவர்கள் கொடுத்துள்ள ஆலோசனைகளை பார்ப்போம் 

Sir,

    I would like to suggest a simple modification of Grade pay from PA
cadre as like in IPO upgradation. I believe that it may help for some
other ideas to get better pay scale to General line staff please.

            Grade Pay

PA        2400    to   2800

MACP I  2800   to   4200   LSG     PM GR I

MACP II 4200    to  4600   HSG II  PM GR II

MACP III 4600    to 4800   HSG I   PM GR III

நமது கோட்டத்தில் யாராவது கருத்துகளை பதிவு செய்ய விரும்பினால் 03.11.2015 குள்  9442123416 என்ற எண்ணிலும் அல்லதுjacobraj 2011@gmail .com என்ற இ மெயிலிலும்  தொடர்பு கொள்ளலாம் 
                                                           தோழமையுடன்  SKJ 













0 comments:

Post a Comment