...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 17, 2015

                                     கட்டாய ஓய்வு --எனும் கசப்பு 

மத்திய அரசின் ஊழியர் &பயிற்சி துறையின் 11.09.2015உத்தரவு படி 30 வருட சேவையை முடித்தவர்கள் அல்லது 50/55 வயதை தாண்டியவர்களை விசாரணை இல்லாமல் பணி ஓய்வு பெறுவதை விளக்குகிறது .அரசு அதிகாரிகளை /ஊழியர்களை பொது நலன் கருதி விசாரணை இல்லாமலே கட்டாய ஓய்வு அளிக்கலாம் என்பதே அந்த உத்தரவின் சாரம் ..

FR--56 விதி -அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை பற்றி கூறுகிறது .ஒரு குருப்  A  அதிகாரி அல்லது குருப்  B அதிகாரி தனது 35 வயதிற்கு முன்பே அரசு பணியில் சேர்ந்தால் அவரை 50 வயதிலும் .35 வயதிற்கு பின்பு பணியில் சேர்ந்தால் 55 வயதிலும் அனுப்பலாம் .

FR56 (a  )  விதி விருப்ப ஓய்வை குறித்து சொல்கிறது .ஒரு அரசு ஊழியர் தன் 50 வயதை அடைந்ததும் தன் சொந்த காரணங்களுக்காக அவராகவே  மூன்று மாத அறிவிப்பு கொடுத்து விட்டு விருப்ப ஓய்வில் செல்லலாம் 
FR(m ) விதி ஓய்வு ஊதிய விதி பொருந்தாத ஊழியர் தன் 30 ஆண்டு சேவை முடித்ததும் விருப்ப ஓய்வு பெறலாம் .
ஓய்வு ஊதிய விதி 48(1)(b ) படி 30 ஆண்டு சேவை முடித்த ஒரு ஊழியரை பொது நலன் கருதி கட்டாய ஓய்வில் அனுப்பலாம் .
                                                                                                        ( தொடரும் ) 
---------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment