...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 29, 2015

                                     ECS எனும் இன்னுமொரு சவால் 

ஒருபுறம் அஞ்சல் துறையில் அதிகாரிகள் முதல் அடிப்படை ஊழியர்கள் வரை புதிய கணக்குகளை தொடங்க படாதபாடு பட்டு வருகிறார்கள் .ஒரு கணக்கு முடிந்தால் இரண்டு கணக்கை தொடங்க வேண்டும் என்ற எழுதாத சட்டத்தை நம் மீது திணித்து வருகிறார்கள் .ஆனால் சமிபத்திய தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியத்தை ECS முறையில் வழங்க தொடங்கி இருக்கிறது .இதனால் OUT OF ACCOUNT இல் பிடித்தம் செய்ய வழி  இல்லையாம் .பள்ளிகள் ,கல்லூரிகள் ,அரசு அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் இதுவரை சிறப்பாக நடைபெற்று வந்த PRSS எனும் சேமிப்பு திட்டம் கைவிடப்பட்டு .அனைத்து PASSBOOK களும் சம்பந்தபட்ட நபர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டு வருகிறது .
                வேலை பளு ஒரு புறம் --வேதனை மறுபுறம்  .

           விளைவு உதாரனமாக ராதாபுர ம் ,.நாங்குநேரி  , போன்ற தாலுகா தலைமையகத்தில் மிக அதிகமான SINGLE RD DEPOSIT அதிகரிக்கிறது .இது இன்றைய நிலையில் FINACLE அலுவலகத்தில் சாத்திய படுமா என்று பார்க்கவேண்டும் .( ராதாபுரத்தில் 4000 RD கணக்குகள் இருக்கிறதாம் அதில் 3000 க்கு மேல் PRSS கணக்குகளாம் )
 மறுபுறம் மூன்று ஆண்டுகள் முடிந்த கணக்குகளை கொத்து கொத்தாக முடித்து கொண்டு போகிறார்கள்.தினமும் எத்தனை புது கணக்குகள்   தொடங்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலாக தினமும் எத்தனை கணக்குகள் முடிக்கபட்ட்து என்பதே இன்றைய நிலையாக மாறிவருகிறது .
                     அஞ்சலக     உயர் அதிகாரிகள் இது குறித்து மாநில அரசு அதிகாரிகளிடம் பேசி ECS மென்பொருளில் மாற்றம் கொண்டு வர முயர்ச்சிப்பர்களா ? நாமும் இந்த பிரட்சினைகளை நமது தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் 
                                  அன்று OAP 
                                   இன்று RDBULK 
                                  இவைகளுக்கு நடுவே எங்கிருந்து 
                                  அஞ்சலகத்தில் லாபம்  ஈட்டுவது? 
                                   இன்னும் எத்தனை நாளைக்கு 
                                   பொய்கணக்கை காட்டுவது? 
                                    வேகமாய் முடிந்து வரும் நிலையில் 
                                   கணக்கை எப்படி கூட்டுவது ?
                                                                                                      தோழமையுடன் 
                                                                                                         SK .ஜேக்கப்ராஜ் 
                                    

0 comments:

Post a Comment