...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 10, 2015

CBS


    

    முன்குறிப்பு: இரட்டை இலக்க எண்ணிக்கையை கடக்கவே ஒரு சில மாநிலங்கள் திணறி கொண்டிருக்கஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலகங்கள் CBS மயமாக்கப் பட்டுக் கொண்டு இருக்கின்றன நமது மாநிலத்தில்.  இலக்கை தாண்டி ACHIEVEபண்ணிக் கொண்டு இருக்கின்றோம் என  அதிகாரிகள் பெருமை பட்டுக் கொள்ளட்டும்.  ஆனால்அந்த சாதனைக்கு சொந்த காரர்களாகிய  நாம் "சுத்துதே! சுத்துதே! என தலை சுற்றிப் போய் வேதனையில் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இந்த மாத இறுதிக்குள்  குறைந்த பட்ச இலக்காக 23அலுவலகங்கள் என்றும் அதிகபட்சம் 4அலுவலகங்கள் நமது கோட்டத்தில் CBS மயமாக்கப் படவேண்டும் என உத்திரவு வந்துள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் அலுவலகம் CBS-க்கு MIGRATION ஆகிவிடலாம். இரவு 8 மணி வரை அலுவலகத்தில் (EOD கொடுக்க!) இருக்க தயாராகி கொள்ளுங்கள் என  எச்சரிக்கை செய்வது நம் கடமை.BE PREPARE! BE PATIENCE!!   "புலி வருகுது! புலி வருகுது!! வேட்டைகார புலி வருகுது! படை நடுங்குது! படை நடுங்குது!!..............(இப்படை தோற்கின்............. என சொன்னது போய் .........கால கொடுமைதானே!)"

      வேலை செய்வதில் என்றுமே நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.  அதிகப்படியாக வேலை செய்வதற்கும் நாம்  சலித்துக் கொண்டதும் இல்லை. ஆனால்,வேலையே செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டு , monitor-யே வெறித்து பார்த்துக் கொண்டு(HSSI, OK என்று அடித்துக் கொண்டே) இரு என்று சொன்னால் எரிச்சல் வருமாவராதா?வெறுப்பும்கோபமும் வருகிறது.  ஆனால்யாரிடம் காட்டுவது என்றுதான் தெரியவில்லை. CBS அலுவலகங்களில்,மாலையில்  இந்த கூத்துதான் நடக்கிறது Yesterday DC closure not yet finished! please wait ...... என நம்மை உட்கார வைத்து விடுகிறார்கள். எப்பொழுது finacle கிடைக்கும் என்றும் தெரியாது.  எப்பொழுது வீட்டிற்கு போவோம் என்பதும் தெரியாது.  மணிக்கு மேல் எந்த அலுவலகத்திலும்எந்தபணபட்டுவாடவும் (TRANSACTION) செய்யப் படுவதில்லை.  பிறகு ஏன் தினமும் உனக்கு மணி ஆகிறது என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்ல முடிவதில்லை. 

   வடிவேலு பாணியில் "BODY STRONG, BASEMENT WEAK" என சொல்வதா?   “OPENING எல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனால், FINISHING ஒன்றும் சரியில்லையே!" என சொல்வதா?  "நல்லாதானே போய்கிட்டு இருந்தது! ஏன் இப்படி.....?” என சொல்வதா தெரியவில்லை.  பல நாட்கள் நன்றாக CONNECTIONகிடைக்கிறது. சில நாட்கள் காலை வாரிவிட்டு விடுகிறது. கடந்த ஒரு வாரமாக நிலைமை ரொம்ப மோசம். பழைய குருடி கதவை திறடி  என்பதா? “ஜான் ஏறினால் முழம் சறுக்கிறது! என்பதா?  “அவசரத்தில் கல்யாணம்! சாவகாசதில் சங்கடம் என்பதா?” என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

         நாம் என்ன சொல்லி புலம்பினாலும்கஷ்டங்களை சொன்னாலும் நிர்வாகத்தின் காதுகளில் அவை போய் சேர்வதாகவே  தெரியவில்லை. "CONNECTION கிடைப்பதில்லை, UPS இல்லை. இரவு வீடு செல்ல வெகு நேரமாகிவிடுகிறது" (மாநிலசங்கம் FINACLE பிரச்சினையை பற்றி CPMG-க்கு   கடிதம் அனுப்பி உள்ளது!) என்று பலமுறை சொன்னபின்பும், "எல்லாம் சரியாகி விடும்.  TOOTING PROBLEM. போக போக சரியாகிவிடும். ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும்  இப்படி கஷ்டமாகத்தான் இருக்கும். பிறகு கஷ்டம் பழகி சரியாகிவிடும்.  அலை இல்லாத கடல் உண்டாகஷ்டம் இல்லாத வேலை உண்டா?எல்லாம் சரியாகிவிடும்"  என்று ஆரம்பத்தில் இருந்து சரியாகிவிடும் என்ற பல்லவியையே திரும்ப திரும்பசொல்லிவருகிறது. ATLEAST, சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது  என்றாவது சொல்லலாம் அல்லவா? “ புதிய COMPUTERS கொடுக்கப்பட இருக்கிறது.  BANDWIDTHகூட்டப் பட இருக்கிறது. SERVER CAPACITY   அதிகரிக்கப் பட இருக்கிறது  (நடக்கிறதோ இல்லையோ!) என்று கூட சொல்லப் படுவதில்லை.  (ஒரு பொய்யாவது சொல்................) 

    அனைத்து அலுவலகங்களையும் CBS மயமாக்கிவிட வேண்டும் என்பதில்  நிர்வாகம் குறியாக இருக்கிறது.  எனவேஅந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகளைபாதிப்புகளை எல்லாம் சுட்டி காட்டுவதில் எந்த பலனும் இல்லை என்று நமக்கு தெரியும். TECHNOLOGI- அவசியம்தான். அதனால்IMPROVEMENT இருக்கிறதுபலன் இருக்கிறது (யாருக்கு?)  என்பது  ஏற்றுக் கொள்ளப் படவேண்டிய உண்மைதான்.  அலுவலகத்திற்கு வர வேண்டிய  அவசியமே இல்லை. வீட்டில் இருந்து கொண்டே உங்கள் வேலையை முடித்து தரலாம் என்று சொன்னால் அது IMPROVEMENT.  ஆனால்வேலையை முடித்தாலும் நான் சொன்னபிறகு  தான் வீட்டிற்கு செல்லவேண்டும்  என அலுவலகத்தில் சும்மாவே (MONITOR-ஐ பார்த்துக் கொண்டே) உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்றால்  அதை PUNISHMENT என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

      வேலையை முடித்தாலும், EOD கொடுப்பதற்கு என்று ஏன்  காத்திருக்க சொல்லுகிறார்கள் என்பது தான் புரியவில்லை.   உங்கள் அலுவலகத்தில் எந்த PENDING (VALIDATION)ம்  இல்லையா?  நீங்கள் போகலாம் என்று DMCC-யில் ஏன் சொல்வதில்லை என்பது புதிர்.  அதைவிட,  எந்தPENDING-ம் இங்கு இல்லைஎன் அலுவலக நேரம் முடிந்துவிட்டதுதேவையில்லாமல்நான் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற துணிச்சலுடன் ஏன் யாருமே (ஊழியர்கள்தொழிற்சங்கம்நிர்வாகம்) சொல்வதில்லை என்பது புரியாத புதிர்.  அதைவிட பெரிய புதிர் இந்த DIVISIONAL SPOC விவகாரம்தான்.  அந்த வேலையை பார்ப்பதற்கு தனியாக ஏதும் ENUMERATION கிடையாதாம்!.INCENTIVE-ம்  கிடையாதாம்!.   வேலை நேரத்திலும் அதை சேர்த்துக் கொள்ள மாட்டார்களாம். இரவு எத்துனை நேரமானாலும் இருந்துஎந்த அலுவலகத்திலும் EOD PENDINGஇல்லை என உறுதி படுத்தி கொண்டு, REPORT செய்துவிட்டு தான் போகவேண்டுமாம் அவர்கள்.  ஒரு கோட்டத்தில்ஒரு PAஅந்த வேலையை பார்க்கிறார். ஓரிடத்தில் ஒரு OA  அந்த வேலையை பார்க்கிறார். ஓரிடத்தில் ஒரு DSM அந்த வேலையை பார்க்கிறார். (சில இடங்களில்  அதிகாரிகள் பார்ப்பதாகக் கூட சொல்லுகிறார்கள்!). இடத்திற்குநேரத்திற்கு தகுந்தாற் போல்  உத்திரவுகள் இடப் படுவது தான் பல பிரச்சினைகளுக்கு காரணம்.  இதையெல்லாம் சுட்டி காட்டினால்குறை சொல்வதாகவிமர்சனம் செய்வதாக,புலம்புவதாக சொல்லிவிடுகிறார்கள்.

         குறைகளைகஷ்டங்களை சொன்னால் அது பலருக்கு புலம்பலாக இருக்கிறது.  தேவை இல்லாமல்எந்த பயனும் இல்லாமல் புலம்புவதாக பலருக்கு எரிச்சல் வந்து விடுகிறது.முன்பெல்லாம்நாம் புலம்பினால்அதை காது கொடுத்துகேட்பதற்கு சிலர் இருந்தார்கள். (நன்றாக புலம்புகிறாய்!(எழுதுகிறாய்)) தட்டி கொடுத்து ஆறுதல் சொல்ல ஓன்று இரண்டு பேர்களாவது    இருந்தார்கள்.   எதெற்கெடுத்தாலும் புலம்புவதை தவிரஇவனுக்கு வேறு வேலையே இல்லை என நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை.இப்போது யாரும் புலம்பலை கண்டு கொள்வதே இல்லை!. திண்டுகல்லில் இருந்து நெருங்கிய நண்பர் ஒருவர் இப்படி MESSAGE அனுப்பி  இருந்தார்."எதெற்கெடுத்தாலும்(எல்லாவற்றிற்கும்) புலம்புவதை (எழுதுவதை) முதலில் நிறுத்து!  IT IS NOT NECESSARY TO REACT EVERYTHING YOU NOTICE."  (நடப்பதை (பார்ப்பதை) எல்லாம் குறை சொல்லவேண்டிய அவசியம் இல்லை!) நண்பர்களே முகம் திருப்பிக் கொண்டு போனால் யாரிடம் நாம் புலம்புவது! நம் புலம்பலை கேட்க கூட நாதியற்று போய் விட்டதே  என்பதல்ல நம் வருத்தம். புலம்பவே(குறை சொல்லவே) கூடாது.  புலம்புவது தவறு. புலம்புவதற்கு உனக்கு உரிமையில்லை  என சொல்லிவிடுவார்களோ என்பது தான் நம் வருத்தம்!.

       நாம் ஒருவர் மட்டும் புலம்புவதால் ஏதும் நின்று விடப் போகிறதா?,  அல்லது நாம் விரும்புவது போல்எதிர்பார்ப்பது போல் ஏதும் நடந்துவிட போகிறதா?  நடப்பது நடக்கத்தான் போகிறது.   "விரும்பியது கிடைக்காவிட்டால்கிடைப்பதை விரும்பு"  என்பது போல் நாமும் "மாங்கு மாங்கு" என்று வேலை பார்க்கத்தான் போகிறோம். அள்ளி தெளித்த அவசர கோலத்தில்அரைகுறை DATA-களோடு நம் புலம்பலை மீறி,  எல்லா அலுவலகங்களும் விரைவில்  CBS ஆகத்தான் போகிறது.  எல்லா அலுவலகங்களும் விரைவில்  CBS ஆவதில் நமக்கு ஒரு (அற்ப) மகிழ்ச்சிஒரு (கேவலமான) மன நிறைவு இருக்கத்தான் செய்கிறது.  ஆம்.  CONNECTIONகிடைக்கவில்லை, EOD ஆகவில்லை. வீட்டிற்கு போகமுடியவில்லை என்று நாம் புலம்பி கொண்டு இருக்க , SANCHAY POST SOFTWARE-ல் வேலை பார்ப்பவர்கள் எல்லாம்எந்த புலம்பலும் இல்லாமல்சங்கடமும் இல்லாமல்சந்தோசமாக வீட்டிற்கு போகிறார்களே என்ற மனக்குறை இருந்தது.  இப்போது அது தீர்ந்துவிடும்.  (அட பாவி!...)

         CBS ஆவதில்   அதிகாரிகளுக்கு கொண்டாட்டம்தான்.  CENT PRESENT VERIFICATION இனி இல்லை. TARGET DATE-க்கு முன்பே, TARGET ACHIEVE பண்ணி விட்டதாக பெருமை பட்டுக் கொள்ளலாம்.  அந்த பெருமையை சொல்லிதனக்கு வேண்டிய சலுகைகளை, TRANSFER -, PROMOTION-ஐ கூட பெற்றுக் கொள்ளலாம். ஆனால்நமக்கு ?     எத்துனைதான் கஷ்டப்பட்டு,கடுமையாக வேலை  பார்த்தாலும், 80 K.M அப்பால் தூக்கி அடிக்கப்படுவதும், 8 மாதங்களே ஓய்வு பெற இருக்கிறது என்றாலும் வலுகட்டாயமாக இடம் மாற்றப் படுவதும்சிறிய தவறுக்கும் பெரிய தண்டனைகள் தரப்படுவதும் ஆகிய கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்!. வேடிக்கை பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்!. இனிமேல், CONNECTION காரணமாக EODகொடுக்கமுடியவில்லை என்ற திண்டாட்டத்தையும் அனுபவிக்கப் போகிறோம். அவ்வளவுதான். ஆம். எல்லோரும் திண்டாடுவோம். FINACLE பேரை சொல்லி, NETWORKஇணைப்பை எண்ணிஎல்லோரும் திண்டாடுவோம்.  சரிசரி! ஊர் வம்பு பேசி ஏன் வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டும்.  வழக்கம் போல்பாடலோடு முடித்துக் கொள்வோம்.  "சொல்லி அழுதால்தீர்ந்துவிடும். சொல்லத்தானே வார்த்தை இல்லை. அதை (கொடுமைகளை) சொல்ல தானே வார்த்தை இல்லை. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே! உனக்கு நீதான்..............."

   குறிப்பு:  பலரும், புலம்பலை(எழுதுவதை) நிறுத்து என்பதால்புலம்புவதை நிறுத்திவிடலாமா? (கஷ்டம்தான்,ஆடின காலும்.........) என நினைத்தோம்.  ஆனால்MCCAMISHவந்தபோதுஅதை பற்றி, "BEWARE OF MCCAMISH" என்று நாம் புலம்பிய  பிறகு ஏதோ ஆறுதல் கிடைத்த மாதிரி இருந்தது. (காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்!). அது போல் இப்போது FINACLE பற்றி புலம்புவதால்ஏதும் தீர்வு கிடைத்து விடாதாஎன்ற நப்பாசைதான்.  மற்றபடிபுலம்பி உங்களை சங்கடப்படுத்த வேண்டும் என சபதம் ஏதும் எடுத்து வந்திருக்கிறோமா என்னஅல்லது புலம்புவதை தவிர  நமக்கு வேறு வேலையே இல்லையா என்னசரி சரி! வேலையே இல்லாதால் புலம்புவதாக சொல்லி விடுவார்கள். எனவே, (போராடாமல்............) வேலையை பார்ப்போம் வாருங்கள்.  "நம் நெஞ்சிலே பாரம்! எதற்காகவோ ஈரம்!கண்ணீரை நாம் மாற்றுவோம். வேதனை தீரலாம்......   ,பிரச்சினைகள் சிறுகதைகஷ்டங்கள் தொடர்கதை....."


  பின்குறிப்பு:   FINANCE IN ORCALE(SOFTWARE) என்கிறFINACLE  விரைவில் எல்லா அலுவலகங்கலிளும் திணிக்கப் படத்தான் போகிறது. ஏனென்றால்அரசுக்கு அதன் திட்டம்தான் பெரிது. அதிகாரிகளுக்கு அவர்களுடைய TARGET-தான் பெரிது. நமக்கு நம்முடைய கஷ்டங்கள் தான் பெரிது!. பொதுமக்களுக்கு....? (யாரவது பொதுமக்களை நினைத்து.....). இந்த கடைகோடியில்கடையனோடையில் இருக்கும் ஒருவன் கன்னியாகுமரியில்  போய் பணத்தை (RD 10 ரூபாய்) கட்டிக் கொள்ளலாம். தேவை என்றால் காஷ்மீரில் போய் பணத்தை (50 ரூபாய் WITHDRAWAL) பெற்றுகொள்ளலாம் என்பதுதான் FINACLE-ன்   சிறப்பம்சம். தினமும் பணத்தை போட்டு, பணத்தை எடுக்கின்றவர்களுக்கு (பணமுதலைகளுக்கு இது சரி!) அரசு பெரியபெரிய திட்டங்களை தீட்டடும். அதிகாரிகள் அதற்கேற்றார் போல் ஆடட்டும்.  ஆனால்அதன் பலன்கள் பொதுமக்களை(ஏழைகளை) போய் சென்று அடைகிறதா?என்பதே நம் கேள்வி.  நாள் முழுவதும் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும்மூன்று வேலை சாப்பாட்டுக்கும்வீட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சியாக வாழ வைப்பதற்கும்  அந்த சம்பளம் காணவில்லை என்றாலும்நாளைக்கு (படிப்புக்கு!,கல்யாணத்திற்கு!) என்று மாதம் 10 ரூபாயாவது  சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, POST OFFICE-ல்  போட்டு வைத்தால் அது பத்திரமாக இருக்கும் என்ற உறுதியோடு ,எப்போது போய் கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள்,எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவனிடம் நாம் என்ன சொல்லப் போகிறோம்.  NETWORK சரியில்லை. நாளைக்கு வா என்றா?அரசின் திட்டங்கள் சரியில்லை. அதிகாரிகளின் ஆட்டம் சகிக்கவில்லை. எங்களுடைய கஷ்டங்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை என புலம்ப போகிறோமா?  அல்லது பணத்தை கொடுத்துவிட்டு போங்கள்எப்போது வேண்டுமானாலும் வந்து வாங்கி கொள்ளுங்கள் என சொல்லப் போகிறோமா? (எதற்குநாங்கள் வீட்டிற்கே  போக வேண்டாம் என்ற நல்ல எண்ணமாஅல்லது ஏன்  பணத்தை கணக்கில் கொண்டுவரவில்லை என்று எங்கள் எல்லோருக்கும் RULE 16 வாங்கி தந்தே தீருவது என்று கங்கணம் ஏதும் கட்டி கொண்டு அலைகிறீர்களாஎன கோபித்து கொண்டாலும்இதற்குதான் - எல்லோருடைய எரிச்சலையும் வாங்கி கட்டிக் கொள்ள  கூடாதே என்பதற்காகத்தான் "எழுதாதே" என சொல்வது என நம் நலம் விரும்பிகள் காதை கடித்தாலும் சொல்ல வந்ததை சொல்லி விட்டோம்!)      என்ன செய்யப் போகிறோம்?
சிந்திக்க வேண்டியதும் முடிவு எடுக்க வேண்டியதும்தீர்ப்பு சொல்லவேண்டியதும் உங்கள் பொறுப்புதானே! உங்கள் கடமைதானே! தீர்வை உங்கள் பொறுப்பில் விட்டுவிட்டுவழக்கம் போல் பாடலோடு நிறைவு செய்கிறோம்.
ஆறு(ஏரு) பெரிதா? இந்த ஊரு(தேரு) பெரிதா? சொல்லடி நெல்லு பெரிதா? பயக சொல்லு பெரிதா?.... பொதுமக்கள் போக்குவரத்து என்ற) ஏரோட்டம் நின்னு போனா... வயிற்றுக்கு.............  

1 comment:

  1. Sanga oodhiyachu nfpe general sec circle sec enna seya porar papom

    ReplyDelete