...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 19, 2016

                                         ஊழியர் குறைதீர்ப்பு நாள் --
18.01.2016 அன்று மதியம் 1.30 மணிக்கு வந்தது ஈமெயில் -4 மணிக்கு பறந்தது பதில் மெயில் 
நெல்லையில் யாருக்கும் எந்த குறைகளும்  இல்லை என்று --
               
Staff  Adalat என்பது ஊழியர்களுக்கு தங்கள் குறைகளுக்கு பரிகாரம் தேடி கொள்ள நிர்வாகம் கொடுக்கும் ஒரு அரிய வாய்ப்பு ? .அதுவும் மாநில அ ளவில் என்றால் அது ஒரு உச்சமட்ட அமைப்புதான் .அதற்கு ஊழியர்களிடம் குறைகளை கேட்டு அந்தந்த Postmaster களுக்கு 18.01.2016 மதியம் 1.30 மணிக்குகோட்ட  அலுவலகத்தில் இருந்து  email வருகிறது .18.01.2016 அன்றே  4மணிக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் (GDS உட்பட ) இந்த செய்தியை அறிவித்து அவர்களிடம் குறைகள் இருந்தால் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டுமாம் .Sifi network கிடைக்காமல் புறநகர் பகுதியில் அவதிப்படும் SPM தோழர் /தோழியர்கள் .Finacle அலுவலகத்திலும் லேசெர் பிரிண்டர் இல்லாமல் அனைத்து file களையும் PDF க்கு மாற்றி  அனுப்பும் கூடுதல் வேலை சுமை..நாள் ஒன்றுக்கு எத்தனை மணி நேரம் FINACLE கிடைக்கவில்லை என்பதை ஆதாரபூர்வமாக நிருபிக்கவேண்டிய ஒரு வாய்ப்பு .
  GDS பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால ஊதியம் (Welfare fund) வழங்குவதில்  தாமதம் --பணி நிறைவு பெற்ற GDS ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய முதிர்வு கால தொகை ,இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்த ஊழியர்களின்  ஏக்கங்கள் ,LSG பட்டியலில் உள்ள தவறான  seniority .நிரந்தர பணி ஆணை (Conformation ) இல்லாமல் கஷ்டப்படும் ஊழியர்களின் துயரங்கள்தினமும் 16 மணி நேரம் வேலை பார்க்கும் DMMS ஓட்டுனர்கள்   போன்ற பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு வடிகாலாக இது இருந்திருக்கும் .இனியாவது நிர்வாகம் ஒப்புக்கு Adalat நடத்தாமால் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக நடத்த கேட்டு கொள்கிறோம் .

                     இப்படி ஒரு வாய்ப்பு வந்தது   எத்தனை பேருக்கு தெரியும் ! 


Holding of Staff Adalat-reg.


Inbox
x

Jan 18 (1 day ago)
to ambaipm, me, tirunelveliho, Viraraghavapur., Agasthiyarpatti, Alwarkurichi, Ambalavanapuram, Ambasamudram, Ambsamudram, Anuvijaytownsh., Bramadesam, Burkitmanagaram, Cheranmahadevi, Dalapathisamud., Dohnavur, Eruvadi, Gandhinagar, Gangaikondan, Gopalasamudram, icpettai, Idayankudi, Idinthakarai, Ittamozhy, Jawaharnagar, Kadayam
Sir/Madam
​The greivances if any (except on disciplinary matters) from the staff, which need to be decided/disposed of at Circle level, may be called for immediately from among the staff including  GDS and ​
​forward a representation ​
​to reach ​
​this office today 1600 hours  and also intimate through mail.




Senior Superintendent of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002.

0 comments:

Post a Comment