...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 18, 2016

                                        புதிய பென்ஷன் திட்டம் 
           இன்னும் எத்தனை நாளைக்கு இதை புதியது என்பது .இதற்கும் வயது 12 ஆகிறது ..மத்திய அரசு 10.10.2003 அன்று Pension Fund Regulatory and Development Authority (PFRDA) என்ற புதிய அமைப்பை தொடங்கியது (.இந்த காலகட்டத்தில் நமக்கு பிரதமர் திரு .அடல் பிஹாரி வாஜ்பாய் நிதியமைச்சர் ஜஸ்வந்சிங்)  .முதலாவதாக 01.04.2004 முதல் அரசு பணியில் சேருபவகர்களுக்காக   கொண்டுவரப்பட்ட இத் திட்டம் 01.05.2009 முதல் அனைத்து பிரஜைகளுக்காகவும் விரிவு படுத்தப்பட்டது .வயது( 18-55) (இந்த காலகட்டத்தில் நமக்கு பிரதமர் திரு .மன்மோகன் சிங் நிதியமைச்சர் பிரனாப்முகர்ஜி) .60 சதம் பணி ஓய்வின் போதும் 40 சதம்  வாழ்நாள் ஓய்வூதியமாகவும் தரப்படும் என்றார்கள் .உங்கள் பகுதியில் 2014 க்கு பிறகு புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்கள் எத்தனை பேர் ? ஓய்வூதியம் வாங்குவது எத்தனை பேர் ?
     புதிய பென்ஷன் சந்திக்கும் இரண்டாவது ஊதிய குழு இது .புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்கின்ற நமது கோரிக்கையும் பழசாகி போனதா ?ஆட்சியாளர்களுக்கு பழக்கமாகி போனதா ?
2004 இல் அறிமுகப்படுத்தும்போது எல்லோருக்கும் பழைய பென்ஷன் இருந்தது .நமது கோட்டத்தில் 2014 படி எழுத்தர்கள் மட்டும் DGL படி 305 பேர் .அதில் 30 பேர் NPS திட்டத்தில் இருக்கிறார்கள் . இன்று நாடு முழுவதும்  சுமார் 27 சதம் ஊழியர்கள் NPS இல் இருக்கிறார்கள் .உறுதி  செய்யபடாத ஓய்வூதியம் வாங்க போகிறார்கள் ? என்ன செய்ய போகிறோம் !புதிய பென்ஷன் அறிமுகம் படுத்தப்பட்ட பல நாடுகளில் குறைந்த அளவு  பென்ஷன் எவ்வளவு என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள் !இங்கே கொடுப்பவனுக்கும் தெரியாது ?வாங்குகிறவனுக்கும் புரியாது ?  நாம் எங்கே போகிறோம் ?
                                                                                சிந்திப்பீர்!  
                                                                           தோழமையுடன் 
                                                           SK . ஜேக்கப்ராஜ் 
- External website that opens in a new window .

0 comments:

Post a Comment