அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
26.11.2020 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம்
மத்திய அரசு கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கைகளின் தாக்கத்தினால் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகவாகும் பாதிக்கப்பட்டுவருவதை நாம் இன்று கண்கூடாக பார்த்துவருகிறோம் .அதையும் தாண்டி இன்று மத்தியஅரசின் கொளகை முடிவுகளால் நடைமுறைப்படுத்திட துடிக்கும் திட்டங்களிலானால் நாம் மட்டுமல்ல நமது சந்ததியினரும் பாதிக்கப்பட போவது என்பதும் திண்ணம் .இந்த கொடுமைகளை களைய கடுமையான நடவடிக்ககைகளை நாமும் எடுத்தாக வேண்டும் .ஆம் தொழிலாளியின் முன் இருக்கும் ஒரே ஆயுதம் வேலைநிறுத்தம் மட்டும் தான் .இந்த வேலைநிறுத்தத்தை ஒன்றுபட்ட இயக்கமாக நடந்திடும் போது வேலைநிறுத்தத்தின் தாக்கம் அதிகரிக்கும் போது பல சந்தர்ப்பக்கங்களில் அரசு தனது முடிவை தளர்த்தியிருக்கிறது அல்லது தள்ளிப்போட்டிருக்கிறது .புதிய சலுகைகளை பெறப்போகிறோமோ இல்லையோ பெற்ற சலுகைகளை பேணிப்பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம் .
1.கொரானா வை காரணம் காட்டி மூன்று பஞ்சபடிகள் ஜூலை 2021 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .இதில் நாம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளோம் .
2.அரசு ஊழியர்க்ளுக்கு TOUR TA /TRANSFER TA தவிர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது (இது அதிகாரிகளுக்கு ஏனோ பொருந்தாது )
3.மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வு எனும் பழைய ஆயுதத்தை புதிதாக ஆயத்தம் செய்து வைத்ததைப்போல சுற்றறிக்கையை அனுப்பி ஊழியர்களை அச்சத்தில் வைத்திருப்பது
4.வாரிசு அடிப்படையில் பணிவழங்குவதில் கடைபிடிக்கப்படும் இறுக்கமான நிபந்தனைகள் .நேற்றுகூட நமது கோட்டத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது .
5.அஞ்சல் துறையிலும் முதன்மை சேவைகளை பின்தள்ளிவிட்டு கமிஷன் அடிப்படையில் நடக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது
6.2004 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் எனும் சமூகப்பாதுகாப்பை சீரழித்தது
7.இன்னமும் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள்
8.தொழிற்சங்கங்களை நசுக்கும் வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் -நமக்கு கூட யூனியன் என்பதை அஸோசியேஷன் என மாற்றம் செய்திட கொடுத்துக்கொண்டிருக்கும் நிபந்தனைகள் /நிர்பந்தங்கள்
9.DOPT வரை சென்றும் கூட HSG II மற்றும் HSG I பதிவுயர்வில் ONETIME RELAXATION தள்ளிவைப்பு /அலட்சியம்
10.GDS ஊழியர்களுக்கான WEIGTAGE ,EL சேமிப்பு .பதவிஉயர்வு /மருத்துவ காப்பீடு இவைகளை வழங்குவதில் இழுத்தடிப்பு
இதுபோன்ற நம்மை பாதிக்கின்ற விஷயங்களில் நாம் போராடவில்லை என்றால் வேறு யார் போராடுவார்கள் ? தமிழகம் என்றுமே இதுபோன்ற பொதுவேலைநிறுத்தங்களில் பங்கேற்றிட தயங்கியதில்லை .நமது மாநில சங்கமும்/மாநில செயலரும் வேலைநிறுத்தத்தை பழைய நாட்களை போல வெற்றிகரமாக நடத்திட அழைப்பு விடுத்திருக்கிறார் .
நேற்று பணியில் சேர்ந்த ஊழியர்கள் முதல் நாளை பணி ஓய்வு பெறும் ஊழியர்கள் வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்கலாம் .மேலும் சமீபத்தில் MACP பதவி உயர்வினை பெற்று ஜனவரி 2021 யில் INCREMENT OPTION கொடுத்த ஊழியர்கள் கோட்ட செயலரிடம் அதற்கான விளக்கங்களை கேட்கவும் .
வழக்கம் போல் கடைசி நேரத்தில் நிர்வாகம் கொடுக்கும் வேண்டுகோள்கள் /அச்சுறுத்தல்களை புறக்கணிப்போம் .
வேலைநிறுத்தத்தில் பங்கேற்போம் !அஞ்சல் துறையை பாதுகாப்போம் !
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை