அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
26.11.2020 ஒருநாள் வேலைநிறுத்தம் --
மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுதிருக்கும் நாடுதழுவிய ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிட நமது NFPE சம்மேளனமும் அழைப்புவிடுத்திருந்தது தாங்கள் அறிந்ததே .அதனை தொடர்ந்து நமது துறையில் GDS ஊழியர்களின் AIGDSU சங்கமும் இறுதியாக FNPO சங்கமும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்திருக்கிறது .12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த பொதுவேலைநிறுத்ததில் நமது அஞ்சல் பகுதியில் உள்ள 10 கோரிகைகளும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.ஆகவே நமது உறுப்பினர்கள் இந்த பொதுவேலைநிறுத்தத்தில் பங்கேற்றிடுவோம் .
பொதுக்கோரிக்கைகள்
1.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் .கடைசிமாத ஊதியத்தில் 50 சதம் குறைந்தபட்ச பென்ஷன் என்பதை உறுதிப்படுத்து !
2. ஊழியர்சங்கங்களின் தகுதியை குறைக்கும் ASSOCCIATION முடிவை கைவிடு!
3.நிறுத்திவைக்கப்பட்ட பஞ்சபடியை வழங்கிடு !
4. ஆள் நியமன தடை சட்டத்தை ரத்துசெய் !
5.அஞ்சல் பாதுகாப்பு ரயில்வேயில் கார்ப்பரேஷன் மற்றும் தனியார் முயற்சியை கைவிடு !
6.GDS ஊழியர்களுக்கு சிவில் அந்தஸ்தை வழங்கிடு !
7.கோவிட்-19 கால விடுப்புகளை சிறப்பு விடுப்புகளாக அறிவித்திடு !
8.கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் உள்ள 5 சத கட்டுப்பாட்டை நீக்கிடு !
9.5 கட்ட பதவி உயர்வினை வழங்கிடு
10.தொழிற்சங்கத்திற்கு வழங்கப்பட்டுவந்த JCM அமைப்பை முறையாக நடத்திடு !
PART -B பகுதி கோரிக்கைகள்
1.கோவிட் -19 காலத்திற்கான சிறப்பு விடுப்பு -கொரானா பாதிப்பில் இறந்த ஊழியர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 10 லட்சம் -குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையிலான வேலை வழங்கிட வேண்டும் ..ரோஸ்டர் முறையை தொடர்ந்திட வேண்டும்
2.PSD/CSD இணைப்பு -ஒழிப்பு திட்டத்தை கைவிடு !
3.போஸ்டல் கணக்கு அலுவலர்களை Decentralization மற்றும் SBCO ஊழியர்களை PA கேடருடன் இணைக்கும் முயற்சியை கைவிடு !
4.IPPB மற்றும் ஆதார் பணிகளுக்கு கொடுக்கும் இலக்கை நிறுத்திடு !
5.Common Service Centres திட்டத்தை நிறுத்திடு !
6.வெளியாட்களை OUTSOURCE முறையில் பணியமர்த்தாதே !
7.தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பினை பழைய முறையில் நடத்திடு !
8.கமலேஷ் சந்திரா கமிட்டியில் உள்ள பயனுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்து !
9.கேடர் சீரமைப்பை அனைத்து பிரிவிலும் அமுல்படுத்து !
10.அஞ்சல் RMS அலுவலகங்களுக்கு வாரம் 5 நாட்கள் வேலைநாட்களாக மாற்றிடு
அஞ்சல் பகுதிகளில் இந்த வேலைநிறுத்தத்தை சிறப்பாக நடத்திடுவோம் .
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலாளர்கள் நெல்லை
0 comments:
Post a Comment