அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
*நமது கோட்ட சங்க பிரச்சினைகளை உடனுக்குடன் மண்டல /மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்கின்ற மாநில சங்கத்திற்கு குறிப்பாக மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்று மட்டும் மூன்று கடிதங்கள் நமது கோட்ட பிரச்சினைகள் குறித்து எழுதப்பட்ட கடிதங்களை உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறோம் .
*நேற்று நமது கோட்ட அலுவலகத்தால் வெளியிடப்பட்ட LSG இடமாறுதல்களில் ஊழியர்களின் விருப்பங்களின் அடிப்படையில் இடமாறுதல்கள் தந்திட்ட கோட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பதவி உயர்வு பெற்று செல்கின்ற அனைத்து தோழர்களையும் /தோழியர்களையும் NELLAI NFPE வாழ்த்துகிறது ..LSG இடமாறுதல்களினால் ஏற்பட்டிற்குக்கும் இடங்களுக்கு உடனே T/S ஊழியர்களை விருப்பத்தின் அடிப்படையில் பணியாற்றிட அனுமதிக்கவேண்டும் என் நேற்று நமது ASP(HOS ) அவர்களை சந்தித்து கேட்டுள்ளோம் .இன்று அதற்கான உத்தரவுகள் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .
*நமது கோட்ட சங்க உறுப்பினர் தோழியர் JAB .மேரி PA மேலப்பாளையம் அவர்க்ளின் கணவர் திரு .கிறிஸ்டோபர் (இந்தியன் வங்கி) அவர்க்ளின் இசை பயணத்தை ஆதரிப்போம் .அவர்களின் இசையினை கேட்க
https://www.youtube.com/channel/UCWhEYsNhbuWHNKH3xSLCalw என்ற YOUTUBE சேனலுக்கு SUBSCRIBE செய்து ஆதரவு தந்திடுவோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment