...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 16, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                               26.11.2020 வேலைநிறுத்தம் வெல்லட்டும்

மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ள 26.11.2020  பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்போம் .அஞ்சல் துறையில் NFPE- FNPO மற்றும் AIGDSU சங்கங்கள் தனித்தனியாக வேலைநிறுத்த அறிவிப்பை அஞ்சல் வாரியத்திற்கு கொடுத்து பொதுவேலைநிறுத்ததோடு தங்களது பகுதி கோரிக்கைகளையம் இணைத்து போராட்ட அறிவிப்பை அறிவித்துள்ளது ..நாடு கடைபிடித்துவந்த கலப்பு பொருளாதார முறை கைவிடப்பட்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 1990 முதல்  கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகளை எதிர்த்து 1991 முதல் 2020 வரை 19 பொதுவேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன .மத்திய அரசு துறையில் நமது அஞ்சல் துறையை தவிர வேறு எந்த துறையும் இதுபோன்ற பொதுவேலைநிறுத்ததில் முழுமையக பங்கேற்றிடவில்லை .ரயில்வே துறையில் கூட பொதுவேலைநிறுத்ததின் தடம் கூட இன்னும் பதியவில்லை .ஆகவே பொதுவேலைநிறுத்தங்களில் தொடர்ந்து முழுமையாக பங்கேற்ற பெருமை நமக்கிருந்தாலும் இந்த பொதுவேலைநிறுத்ததோடு நின்று விடாமல் நமது துறைசார்ந்த கோரிக்கைகளை முன்னெடுத்து போராடிடவேண்டும் என்று நமது சம்மேளன மற்றும் அகிலஇந்திய தலைமையை வலியுறுதுவதிலும் நமது தமிழ்மாநில சங்கம் என்றும் தயங்கியதில்லை .ஆரம்பத்தில் NFPE சம்மேளனம் மட்டுமே தனித்து போராட்டங்களை நடத்திவந்தது .அதன்பிறகு FNPO சங்கமம் இந்த பொதுவேலைநிறுத்ததில் பங்கேற்று வருகிறது .இன்று AIGDSU சங்கமும் போராட்டத்தில் பங்கேற்கிறது .இந்த பின்னணியில் 26.11.2020 பொதுவேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம் .நமது கோட்டத்தில் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கங்களின் சார்பாக வேலைநிறுத்த சுற்றுப்பயணம் வருகிற 23.11.2020 தென்பகுதியிலும் 24.11.2020 அன்று நெல்லை மாநகர் பகுதிகளிலும் நடைபெற திட்டமிட்டுள்ளோம் .வரவிரும்புகிற தோழர்கள் கோட்ட செயலர்களிடம் தெரிவிக்கவும் .

நன்றி .போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                      

0 comments:

Post a Comment