அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
முக்கிய செய்திகள்
.*வருகிற 26.11.2020 அன்று நடைபெறும் ஒருநாள் பொதுவேலைநிறுத்ததை முன்னிட்டு நமது கோட்ட சங்கங்களின் சார்பாக 23.11.2020 அன்று தென்பகுதியில் 24.11.2020 அன்று மாநகர் பகுதியிலும் வேலைநிறுத்த பிரச்சார பயணங்கள் நடைபெறுகிறது ..வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்வோம் .
*அஞ்சல் துறையில் ரோஸ்டர் முறை பின்பற்றுவது நவம்பர் வரை நீட்டிக்கப்ட்டுள்ளது என்றும் சூழ்நிலைக்குகளுக்கேற்ப அந்தந்த கோட்ட நிர்வாகமே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் அஞ்சல் வாரியம் உத்தரவிட்டுள்ளது .
*Retirement ஆகும் பணியாளரின் service book ஆடிட்க்கு (audit) சரி பார்த்தலுக்கு அனுப்பபடும். service புக்கியில் retirement ஆகும் தேதியில் இருந்து 24 மாதங்களுக்கு முன்னர் இருக்கும் குறைபாடுகள் மட்டும் சுட்டி காட்டி சரி செய்யபட வேண்டும். அதற்கு முந்தைய காலத்தில் உள்ள எதையும் சுட்டி காட்ட வேண்டிய அவசியம் தேவையில்லை என்று 27.07.2020 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T .புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment