அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
வேலைநிறுத்த கோரிக்கையும் -அஞ்சல் துறையின் வழக்கமான விளக்கமும்
வருகிற 26.11.2020 அன்று நடைபெறவிருக்கும் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை ஓட்டி நமது NFPE சம்மேளனம் கொடுத்துள்ள வேலைநிறுத்த கோரிக்கைகளுக்கு அஞ்சல் வாரியம் 17.11.2020 அன்று வழக்கமான சம்பிரதாய வேண்டுகோளை விடுத்துள்ளது .கொரானா பெருந்தொற்று காலத்தில் வேலைநிறுத்தம் என்பது அஞ்சல் துறையை வெகுவாக பாதிக்கும் என்பதால் வேலைநிறுத்த முடிவை கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது .ஆனால் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் கொடுத்துள்ள பதிலினை பார்த்தால் அடையாள வேலைநிறுத்தம் போதாது அழுத்தமான போராட்டம் தேவை என்பதை உணர்த்துகிறது ..
வேலைநிறுத்த விளக்க கூட்டம்
நாள் -24.11.2020 செவ்வாய் கிழமை
நேரம் மாலை 6 மணி
இடம் -பாளையம்கோட்டை HO
கூட்டு தலைமை -தோழர்கள் T.அழகுமுத்து கோட்ட தலைவர் அஞ்சல் மூன்று
A.சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் அஞ்சல் நான்கு
வேலைநிறுத்தம் வெற்றிபெற இன்றே தயாராகுவோம் .
முக்கிய செய்திகள்
லக்ஷ்மி விலாஸ் வங்கி காசோலைகளை CHEQUE கலெக்ஷன்க்கு வாங்க வேண்டாம் என அஞ்சல் வாரியம் அறிவுறுத்தியு ள்ளது .ஆகவே துணை /தலைமை அஞ்சலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களை இதை கவண த்தில் கொண்டிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment