அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நேற்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து பல்வேறு ஊழியர்கள் பிரச்சினைகள் குறித்து பேசினோம் .ஒருசில பிரச்சினைகளுக்கு உடனடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது .அதற்காக நமது SSP அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் தோழர் ரமேஷ் அவர்களின் Relief குறித்தும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது .இறுதியாக MMS ஓட்டுனர்களுக்கு கொடுக்கப்பட்ட தேவையற்ற விளக்க கடிதங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .ஓட்டுனர்களை தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் செயல்களை SSP அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் .சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது தங்களுக்கு கீழ் பணிபுரியம் ஊழியர்களை மனிதாபிமானத்தோடு நடத்திடவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் .
26.11.2020 வேலைநிறுத்தம் குறித்த சுற்றறிக்கைகள் இன்று உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் .வருகிற 23.11.2020 மற்றும் 24.11.2020 அன்று கோட்ட அளவிலான அமைப்பு சார்ந்த சுற்றுப்பயணங்கள் நடத்திடவுள்ளோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment