அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நேற்று (10.11.2020 ) நடைபெற்ற தென்மண்டல அதிகாரிகளுடனான இருமாதந்திர பேட்டியியில் நமது மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களும் தென்மண்டல செயலர் தோழர் .R .கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டனர் .முன்னதாக நமது கோட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக குறிப்பாக திருமதி .பாப்பா திருநெல்வேலி HO அவர்களின் இடமாறுதல் குறித்த மேல்முறையீட் டை விரைந்து முடித்திட வலியுறுத்தினார் .நமது கோட்டத்தில் இருந்து மண்டல அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலில் மறைக்கப்பட்ட உண்மைகளை விளக்கமாக எடுத்துரைத்த பின் மீண்டும் AD STAFF அவர்கள் இதுகுறித்து விரைந்து முடிவெடுக்கப்படும் என்று பதிலளித்தார்கள் .அதேபோல் LSG அக்கௌன்டன்ட் பதவிகளுக்கான கோட்ட ஒதுக்கீட்டை விரைந்து வழங்கிடவும் வலியுறுத்தப்பட்டது .மேலும் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்க்கான 65 KV GENENSET மற்றும் திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் ஆண் ஊழியர்களுக்கான புதிய கழிப்பறை கட்டுவது சம்பந்தமாகவும் வலியுறுத்தப்பட்டது . நமது கோட்ட பிரச்சினைகளை மண்டல அளவில் எடுத்துச்சென்று தீர்விற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவரும் நமது மாநிலசெயலர் சகோதரர் வீரமணிமற்றும் மண்டலச்செயலர் தோழர் .R .கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
மீண்டும் நமது PMG அவர்களுடனான ஒரு இனிய சந்திப்பு
BI -MONTHLY கூட்டம் முடிந்து உணவு இடைவேளைக்கு பிறகு நமது கோட்ட சங்க முன்னணி நிர்வாகிகள் தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட தலைவர் T.அழகுமுத்து மாநில சுப்ரிம் கவுன்சிலர் தோழர் C .வண்ணமுத்து மற்றும் நமது கோட்ட சங்க நிதிச்செயலர் தோழர் D.பிரபாகர் ஆகியோர் நமது PMG அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம் .அடுத்தடுத்து கூட்டங்கள் இருந்தாலும் அதற்கிடையில் நம்மை சந்தித்து தனது நெல்லை கோட்ட பழைய நினைவுகளை மகிழ்வோடு நினைவுகூர்ந்த நமது PMG திரு .G.நடராஜன் IPOS அவர்களுக்கு எனது தனிப்பட்ட முறையிலும் NELLAI NFPE சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நன்றி .தோழமையுடன் SK.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment