...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 19, 2017

23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்த அறிவிப்பும் --அஞ்சல் துறையின் அமைதியும் 
பொதுவாக அஞ்சல் துறையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நாளிலிருந்தே அஞ்சல் துறையின் அனைத்துமட்டங்களில் உள்ள அதிகாரிகள் ஒருவித பதட்டத்தோடு -பரப்பப்போடு இருந்த காலங்கள் உண்டு .குறிப்பாக 1984 -1988 -1989 அதன்பிறகு 1991 முதல் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு வேலைநிறுத்தங்கள் என நாம் அறிவித்த நாட்களில் அதிகாரிகள் மத்தியில் எழுந்த ஒருவித பீதியை நாம் பார்த்திருக்கிறோம் .ஆனால் சமீபகாலமாக இதுபோன்ற ஒரு எந்த அதிர்வுகளையும் அதிகாரிகளிடம் பார்க்க முடியவில்லை .வேலைநிறுத்தத்தின் நோக்கமே ஊழியர்களின் கொதிப்புகள் -கொந்தளிப்புகள் -கோரிக்கைகளின் மீது தொழிலாளி கொண்டுள்ள பிடிப்புகள் --வேலைநிறுத்தம் வெற்றிபெற அவன் காட்டும் முனைப்புகள் என்ற பழைய அடையாளங்கள் கூட மெல்ல மெல்ல மறைய தொடங்கியுள்ளன .எத்தனைநாள் போராடினால் நமக்கென்ன என்ற எண்ணங்கள் வரத்தொடங்கிவிட்டதோ தெரியவில்லை .ஒப்புக்கு போராடுவோம் என்ற நிலையம் நமக்கு வந்துவிடக்கூடாது .
ஆகவே வேலைநிறுத்தம் என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சியல்ல --இது நமது உரிமை -நமது கடமை -அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா என ஆருடம் பார்க்காமல் களப்பணியாற்றிடுவோம் -வெற்றிக்கனி பறித்திடுவோம் 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் .கோட்டசெயலர் நெல்லை 

0 comments:

Post a Comment