...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 16, 2017

                      அர்த்தமுள்ள சுதந்திர தினவிழா  கொண்டாட்டங்கள் 
முற்போக்கு கொள்கை கொண்ட தொழிற்சங்க காந்தி -கோவை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலாளர்எபெனேசர் காந்தி  அவர்களின் வழிகாட்டுதலில் கோவை பகுதி அணைக்கட்டு கிராம மக்களுக்கு கோவை அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பாக 75 SSA கணக்குகளை தொடங்கிக்கொடுத்துள்ளனர் .இவ்விழாவில் நமது PMG அம்மையார் திருமதி .சாராதா  சம்பத் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .மேலும் மகிளா கமிட்டி உறுப்பினர் தோழியர் வளர்மதி அவர்களுக்கும் PMG அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள் .இதுதான் தொழிற்சங்க அங்கீகாரம் .வாழ்த்துக்கள் 
---------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லையில் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK பாட்சா அவர்களின் ஏற்பாட்டில் காண்மியா பள்ளிவாசல்பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்   கொடைவள்ளல்  ரொட்டேரியன் மயில் .பாலசுப்ரமணியன் .திருநெல்வேலி ASP திரு .G.செந்தில்குமார் மற்றும் நமது அமைப்பு செயலர் தோழர் S.முத்துமாலை ஆகியோர் கலந்துகொண்டு அப்பகுதிமக்களிடம் அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் குறித்து பிரச்சாரங்கள் செய்தனர் .முன்னதாக பாலமடை பகுதியில் 300 சேமிப்புக்கணக்குகளை தொடங்கிய தோழர் S.முத்துமாலை அவர்களுக்கும் பாராட்டுதல்கள தெரிவிக்கப்பட்டது .
இது கட்டாயத்தால் நடந்ததல்ல --தன்னார்வத்தால் நடந்தது --இச்சேவை தொடர வாழ்த்துக்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
--------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment