...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 24, 2017

 23.08.2017  ஒருநாள் வேலைநிறுத்தம் நெல்லையில் மாபெரும் வெற்றி !
பங்கேற்றவர்களுக்கு நன்றி !நன்றி !
அன்பார்ந்த தோழர்களே !
   10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நமது NFPE சம்மேளனம் நடத்திய ஒருநாள் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி .குறிப்பாக நமது நெல்லைக்கோட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் --தோழியர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
கோட்ட அலுவலகம் முழுவதும் வேலைநிறுத்தம் 
நமது நெல்லை கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை செய்தனர் .
திருநெல்வேலி PSD மூடல் 
நீண்ட இடைவெளிக்கு பிறகு திருநெல்வேலி PSD 100 சத போராட்டத்தை தந்தது .
புதிய /இளைய தோழர்களின் பங்களிப்பு 
அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கில் உள்ள அனைத்து புதிய தோழர்களும் --இளைய தோழர்களும் மிக ஆர்வமாக பங்கேற்று நமக்கு புதிய நம்பிக்கையை தந்தனர் .
தோழிர்கள் பங்கும் சிறப்பானதே !
இந்த வேலைநிறுத்தத்தில் தோழியர்களின் பங்கு மிகச்சிறப்பாக இருந்தது .குறிப்பாக இன்ச்சார்ஜ் இல் உள்ள அனைத்து தோழியார்களும் முதல்நாள் அன்றே வேலைநிறுத்தம் செய்யபோவதாக கோட்ட அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க கொடுக்க முதல் நாளே நமது போராட்டத்தின் வெற்றி தெரிய ஆரம்பித்தது .
மூத்ததோழர்களும் முக்கிய பங்காற்றினார் 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பணிஓய்வுக்கு சில மாதங்களே உள்ளன என்ற சூழலிலும் மிக ஆர்வமாக பங்கேற்ற மூத்ததோழர்களுக்கும் நெல்லை NFPE நன்றியை தெரிவித்துக்கொள்கிறது 
                            மாநில செயலருக்கு நன்றி 
நேற்றைய பரபரப்பான சூழலிலும் நமது கோட்ட முன்னணி தோழர் ஒருவரின் பிரச்சினையை குறித்து நமது PMG அவர்களிடம் தொலைபேசியில் பேசி -மிக நம்பிக்கையான பதிலை பெற்று தந்த மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நெல்லை NFPE நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது .
 வேலைநிறுத்தம் குறித்து என்னுடைய 25 ஆண்டுகால அனுபவத்தில் இருந்து .......
அன்று முதல் இன்றுவரை வேலைநிறுத்தம் செய்பவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் ..சாக்கு -போக்கு சொல்கிறவர்கள் --வேலைநிறுத்தம் நடக்கும் போது முன்கூட்டியே அலுவலகம் வந்து தங்கள் விசுவாசத்தை காட்டுபவர்கள் இன்றும் அப்படித்தான் இருக்கிறார்கள் --அவர்கள் அப்படித்தான்  --
புலிவேசம் போட்டவரிடம் 
பரதத்தை  எதிர்பார்க்க கூடாது 
காகித  பூக்களிடம் நறுமணம் குறித்து 
பேச  கூடாது 
கானல் நீரிடம் --தாகம் தீர்க்க 
கையேந்த கூடாது 
அட்டையிடம் போய் -ரத்ததானம் குறித்து 
விளக்க கூடாது --
அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ்             SK .பாட்சா நெல்லை 

0 comments:

Post a Comment