...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 17, 2017

அன்பார்ந்த தோழர்களே !
 கேடேர் சீரமைப்பில் இடமாறுதலில் மேல் முறையிடு செய்த ஊழியர்களுக்கு ,மீண்டும் ஒரு விருப்ப இடங்களை தெரிவு செய்ய சொல்லி நேற்று மதுரை மண்டல அலுவலகம் மூலம் நெல்லையில் விருப்பமனுக்கள் கேட்டு பெறப்பட்டுள்ளது .நமது PMG அவர்களின் இந்த உயரிய உள்ளம் உள்ளபடியே பாராட்டுதற்குரியது .போட்டது போட்டதுதான் --முடிந்தால் இரு -இல்லையென்றால் VR இல் போ என்று கொக்கரித்த மதுரை கோட்டத்தில் இன்று மனிதாபிமானம் பூத்து குலுங்குகிறது --ஊழியர்கள் மனமெல்லாம் குளிர்கிறது .நன்றி PMG அம்மா அவர்களுக்கு .
            HSG II --HSG I OFFCIATING போடுவதில் கோளாறு ஏன் ?
LSG பதவி உயர்வுக்கு பிறகு காலியாக உள்ள HSG I மற்றும் HSG II பதவிகளுக்கு தற்காலிகமாக நிரப்புவதற்கு தென்மண்டலத்தில் கோரப்பட்ட விருப்பமனுக்கள் அப்படியே இருக்கிறது .இதில் சிலகோட்டங்களில் இதுகுறித்து விளக்கங்கள் கேட்டு மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது .நெல்லையிலும் இதுகுறித்து மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .ஆனால் கன்னியாகுமரி கோட்டத்தில் மட்டும் OFFICIATING உத்தரவு ஒருவருக்கு மட்டும் போடப்பட்டுள்ளது .இதில் விசேஷம் என்ன வென்றால் நெல்லைக்கு -கன்னியாகுமரி இரண்டுக்கும் தற்சமயம்  ஒருவர்தான் SSP .நெல்லைக்கு சுண்ணாம்பு --குமரிக்கு வெண்ணையை தடவச்சொன்னது யார் ?யார் ? இது குறித்து மாநில செயலரிடம் ஏற்கனேவே குமரி கோட்ட தோழர்கள் புகார் தெரிவித்துள்ளனர் .மாநில சங்கம் இதுபோன்ற முறைகேடுகளை உடனே களைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment