...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 30, 2017

அன்புத் தோழர்களுக்கு, வணக்கம். 

நமது NFPE சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று, நமது இலாக்காவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரி இன்று
 ஆர்ப்பாட்டத்தில் 
கலந்துகொண்ட சங்க நிர்வாகிகளுக்கும் ,தோழமை நிர்வாகிகளுக்கும் நன்றி .
அடுத்தகட்டப் போராட்டமான டிசம்பர் 20, 2017 அன்று சென்னையில் CPMG அலுவலக வாயிலில்  நடைபெற உள்ள முழு நாள் தார்ணா போராட்டத்தில் கலந்து கொள்ள இன்றே விடுப்பு விண்ணப்பம் அளித்திடுவீர். பேருந்து அல்லது ரயில் டிக்கெட்டுகளை உடன் முன் பதிவு செய்திடுவீர்.அதே போல் 
12லிருந்து 16 வரை புதுடெல்லியில் நடை பெற உள்ள 5 நாட்கள் பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சரித்திரம் படைக்க இப்போதே ரயில் டிக்கெட் அல்லது Flight ticket உடன் முன்பதிவு செய்யுங்கள். 
Flight ticket இப்போது Book செய்தால் வெறும் ரூ.3200 தான். சங்க வரலாற்றில் உங்கள் பெயரும்  தடம் பதித்திட
உடனே செயல்படுங்கள்.
கடைசி நேரத்தில் டிக்கெட் கண்டிப்பாக கிடைக்காது. 
நம் கோரிக்கை வெல்ல வேண்டுமானால் தயங்காது சங்கம் அமைத்திருக்கும் போர்க்களத்தில் குதியுங்கள். 
நாளைய வெற்றி நமதே  என போர்ப்பரணி பாடுங்கள் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
NFPE அஞ்சல் மூன்று சங்கம், அஞ்சல் நான்கு  
நெல்லை 

Wednesday, November 29, 2017

தூத்துக்குடி கோட்ட அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்ட செயலர் -மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அமைப்பு செயலர் தோழர் சங்கரகுமார் அவர்கள் பணிஓய்வு விழா30.11.2017



சங்கரகுமார் என்ற
சங்க நாதமே !
முத்துநகர் தந்திட்ட
முன்னணி தலைவனே !
பல்வேறு காலகட்டங்களில்
பொறுப்புகளை ஏற்க மறுத்தாய் -ஆனாலும் 
பொறுப்புகளை சுமந்தே நின்றாய்
கள்ளமில்லா நட்பு
களங்கமில்லா மனது -கொள்கை
கலப்பில்லா பிடிப்பு
கர்வங்கள் இல்லா சிரிப்பு
இவைகளெல்லாம் உந்தன் தனி சிறப்பு
இதயமெல்லாம் இளமையின் துடிப்பு

அதிகார வர்க்கங்களின்
சதிகார வலையில் சிக்கியதில்லை
மலிவான விளம்பரத்திற்க்காக
மாற்றார் மேடை ஏறியதில்லை
இளையவர்களை இழுத்துக்கொண்டு
இயக்கம் நடத்தவே துடித்தாய்
இயக்கத்தை இளமையாக்கவே
இளைப்பாறாமலே பயணித்தாய்

அஞ்சாநெஞ்சனின் பாசறையிலே
இறுதிவரை தொடர்ந்தாய்
அவர் தம்பி என தெரிந்ததில் இருந்து
என்னைக்கூட விடாமலே படர்ந்தாய்
முத் துநகருக்கும் நெல்லைக்கு ம் 
இடைவெளியை குறைத்தாய் 
முத்தமிழின் சுவைகூட்டியே
மேடைதோறும் முழங்கினாய் 

உன் பணிநிறைவு நாட்கள் 
சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

NFPE சம்மேளன அழைப்பை ஏற்று நெல்லையில் 29.11.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் .29.11.2017
அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் KG.குருசாமி தலைமை தாங்கினார் .அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர் தோழர் சீனிவாச சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .தோழர் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை தோழர் செல்வபாரதி மாநிலஅமைப்பு செயலர் SBCO தோழர் சிவகுமார் தோழர் G.கிருஷ்ணன் தோழர் சுப்ரமணியன் SC /ST நலச்சங்க செயலர் தோழர் C .வண்ணமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .தோழர் அழகுமுத்து நன்றி கூறினார் .ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நெல்லை NFPE இன் வீர வாழ்த்துக்கள் 





                                         நன்றி ! நன்றி ! நன்றி !
நமது நெல்லை கோட்டத்தில் மாநிலமாநாட்டிற்கு செல்வதற்காக விடுப்பு விண்ணப்பித்த அனைவருக்கும் சிறப்பு விடுப்பு மற்றும் சொந்த விடுப்புகளை  வழங்கியதோடு மட்டுமல்லாமல் அனைத்து Single Handed SPM அனைவருக்கும் REVELING ARRANGEMENT  செய்துகொடுத்து ASP (HOS ) திரு பொன்னையா அவர்களுக்கும் உபகோட்ட ASP கள் திரு .G.செந்தில்குமார் அவர்களுக்கும் திரு .N .குமரன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                மாநில மாநாட்டு நன்கொடை 
மாநில மாநாட்டு நன்கொடையாக முதல்கட்டமாக ரூபாய் 10000 மற்றும் இறுதியாக ரூபாய் 3400 ஆக மொத்தம் ரூபாய் 13400 வழங்கியுள்ளோம் .நன்கொடைகொடுத்த அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றிகள் .குறிப்பாக சங்கர்நகர் ரூபாய் 2200 நாங்குநேரி ரூபாய் 2000 நன்கொடைகளை தந்ததற்கும் எங்கள் நன்றிகள் .
                                  வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------------------

                                அஞ்சல் துறையில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளின் தீர்வினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 
நாள் 29.11.2017 புதன் 
நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர் KG.குருசாமி P 3
முன்னிலை தோழர் A .சீனிவாசசொக்கலிங்கம் P 4
                                                      கோரிக்கைகள் ...
(a ) அஞ்சலக வேலைநாட்களை வாரம் ஐந்து நாட்களாகி எல்லா சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவித்துடுக 
(b ) சேமிப்பு கணக்குகளை வங்கிகளுக்கு தாரைவார்த்தை நிறுத்திடுக 
(c ) புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடுக 
(d ) APS  அஞ்சலகங்களை மூடுவதை நிறுத்திடுக 
(e ) அஞ்சலக சேவையில் தனியாரை அனுமதிக்காதே 
(f ) GDS கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்து 
(g ) CSI மற்றும் RICT அமுலாக்கத்திற்கு முன்பாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடு -புதிய திட்டங்களின் பெயரில் இலக்கை நிர்ணயித்து ஊழியர்களை துன்புறுத்தாதே 
(h ) அனைத்து காலியிடங்களையும் நிரப்பிடுக 
  உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .
                                        போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 





Friday, November 24, 2017

                                                        வருந்துகிறோம் 
திருநெல்வேலி HO வில் பணிபுரியும் தோழியர் JAB .மேரி அவர்களின் மாமியார் திருமதி ஏஞ்சல் மேரி அவர்கள் 24.11.2017 நண்பகல் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் நாளை 25.11.2017 அன்று வீ .கே .புரத்தில் நடைபெறுகிறது .அன்னாரது ஆன்மா அமைதியுற இறைவனை வேண்டுகிறோம் .தாயாரை இழந்துவாடும் அன்புச்சகோதரர் கிறிஸ்டோபர் அவர்களுக்கும் எங்கள் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம் 
                       ------------------------------ நெல்லை NFPE -----------------

                                                நவம்பர் -24
           NFPTE -சம்மேளன நாள் வாழ்த்துக்கள் 
   NFPE யில் உறுப்பினர் என்பதில் 
  எனக்கு பெருமை உண்டு -சில 
  நேரங்களில் கர்வமும் உண்டு 
  காரணம் NFPE மட்டும்தான் 
  ஊழியர்களால் உருவாக்கப்பட்டது 
  தொழிற்சங்க ஜனநாயகத்தில் வார்க்கப்பட்டது 
 அவசரகால அங்கீகார பறிப்பிலும் 
 அசைக்கமுடியா இயக்கமாக நின்றது 
  அரசியல் கலப்படமற்றது 
  அடிமைதனத்தை அனுமதிக்காத து 
  ஆட்சியாளர்களிடம்  அடிபணிந்திராதது 
  அதிகாரிகளிடமும் அஞ்சிடாதது --இங்கு 
  அடிமட்ட உறுப்பினர் கூட 
  அகில இந்திய தலைமையை கேள்விகேட்க உரிமையுண்டு 
  கேட்டது சாதாரண உறுப்பினர் என்றில்லாமல் -மனம் 
  கோணாமல் பதிலளிக்கும் தலைமையும் இங்கு   உண்டு 
   தலமட்ட ஊழியர்களின் விமர்சனங்கள் குறித்து 
   மாபெரும் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறினார் 
  NFPE -ஊழியர்களின் குறைதீர்க்கும் மரம் -
  சிலநேரங்களில் கனிகள் கிடைக்கவில்லை என்றால் 
 விமர்சனம் என்றபெயரில் அவர்கள் கல்லெறிவது 
கனியை பெற தான தவிர 
காயப்படுத்துவதற்கல்ல  
இந்த பக்குவ பேச்சுக்கள் -விமர்சகர்களை 
வெட்கப்பட வைத்ததுண்டு 
போராட்டங்களில் தீர்வு இல்லாமல் இருந்திருக்கலாம் 
போராட்டங்கள் ஒருபோதும் தோற்று போனதில்லை 
மிச்சமிருக்கும் இன்னும் ஒரு நம்பிக்கைதான் 
இயக்கத்தை இளமையாக வைத்திருக்கிறது   
ஆரம்ப நாட்களில் என்னை ஈர்த்த கோஷங்கள் (ஜிந்தாபாத் )
அடிக்கிற காற்று வீசட்டும் 
ஆடிப்புயலே வீசட்டும் 
துடிக்கும் ரத்தம் பேசட்டும் 
துணிந்த நெஞ்சம் நிமிரட்டும் 
கொடிகள் வானில் உயரட்டும் 
கோஷம் விண்ணை பிளக்கட்டும் 
இன்குலாப் ஜிந்தாபாத் 
கோஷம் விண்ணை பிளக்கட்டும் 
கோட்டை கதவுகளை அதிரட்டும் 
 வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Thursday, November 23, 2017

                    மீண்டும் மீண்டும் தபால் துறையில் தனியாரை நுழைக்கும் முயற்சி -யாருக்கு லாபம் ?
அஞ்சல் துறையில் பல்வேறு பணிகளுக்கான முகவர் பணிகளுக்கு விண்ணப்பங்களை தமிழக அஞ்சல் வட்டம் ஒவ்வொரு கோட்டங்கள் மூலம் கோரியுள்ளது .SSLC கல்வி தகுதி -கனிணி கையாளும் திறன் -வலைதள வசதி ஸ்மார்ட்போன் -தனி அலுவலகம் இவைகள் அடிப்படை தகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது .பதிவு தபால் -விரைவு தபால் -பார்சல் பதிவு செய்யவும் பட்டுவாடா செய்யவும் இவர்களுக்கு கமிசன் வழங்கப்படும் .ஏற்கனவே வந்த பஞ்சாயத் டாக் சேவா --லைசென்ஸ் ஏஜென்ட் போன்றவைகளை அறிமுகப்படுத்தி அவைகள் என்ன ஆனது என்பதை நம்மைவிட நிர்வாகம் நன்றாக அறியும் .ஆனாலும் தனியார் மயம் என்ற சிந்தனையை இன்னும் அஞ்சல் துறை கைவிடவில்லை .இது போன்ற முயற்சிகள் தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் பெரியதாக ஊழியர்கள் சங்கங்களிலிடமிருந்து எதிர்ப்புகள் தென்பட்டதாக தெரியவில்லை .
எங்கே போகிறது அஞ்சல் துறை ?
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



      நெல்லை கோட்ட நிர்வாகமே ! 
     திட்டமிடல் ஏதும் இல்லை --கூடுதல் பணிநேரத்திற்கு நிவாரணம் ஏதும் இல்லை --வெறுமெனே வேலைநேரத்தை நீட்டிப்பதால் வியாபாரத்தை பெருக்கமுடியுமா ? அறிவிக்கப்பட்ட அலுவலகங்களில் வேலைப்பளு -ஆட்பற்றாக்குறை      இவைகளை கணக்கில் கொள்ளாமல் அமுல்படுத்துவது நியாயமா ? ஒரு      MTS அல்லது GDS ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றால் இருக்கிற அலுவலகத்தில் எதாவது MTS -GDS ஊழியர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களா ? தேவைப்பட்டால் EXTENSION கவுண்டர் களுக்கு தனியாக தனி டெபுடேஷன் கொடுத்து நடத்தி பாருங்கள் --இங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களின் பணி சுமை    கணக்கிட வேண்டாமா ? 24 மணிநேர சேவையில் இருக்கும் RMS அலுவலக REVENUE என்ன என்பதனை பாருங்கள் .தற்காலிக ஏற்பாடு என்றாலும் மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறோம் 

          

Wednesday, November 22, 2017

அன்பார்ந்த தோழர்களே !
நேற்றைய நமது நெல்லை NFPE வலைத்தளத்தில் பதியப்பட்ட IPPB செய்திகுறித்து நமது முன்னாள் A 3 மாநிலசெயலர் அண்ணன் நேசராஜ் செல்வம் SR .Accounts Officer Telecom பெங்களூரு அவர்களின் பதில் பதிவை பாருங்கள் .CSI உளிட்டஅனைத்து புதிய திட்டங்களும் சமைத்துவைக்கப்பட்ட உணவுக்கு சமானம் .நீங்கள் அதை உண்ணலாம் அல்லது பரிமாறலாம் .மாற்றுவதற்கு இடமில்லை .

IPPB என்பது தற்போது நமது கைமீறிய பரச்னை.இதில் நாம் சொல்வதற்கோ செய்வதற்கோ ஏதுமில்லை. அந்த முன்மொழிவு வந்தவுடன் நாம் கொடுத்த ஒரே கடிதம் இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம் என்பது மட்டுமே. இது போன்ற மொண்ணையான அணுகுமுறைகளால் நாம் இழந்து ஏராளம். சங்கத்தலைமைகளின் அறிவு வறட்சியும் ஒரு காரணம். இது குறித்த ஒரு பணி பயிற்சி பட்டறையில் நான் கலந்து கொண்ட போது நமது சங்கத்தலைவர்கள் பேச்சினை கேட்டபோது இது தெரிந்தது. முடிவில் நமது அஞ்சல் துறை செயலர் சொன்னது இது" CSI and all other progressive initiatives of our department is like a cooked food you need not invited to correct the recipe. You must eat otherwise it will be served to others."
நன்றி .நேசராஜ் சார் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இறந்த GDS ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்காக  10.11.2017 அன்று நடந்த COMMITE ON COMPASSIONATE  ENGAGEMENT கூட்டத்தில் 61 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் 47 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன .மறுக்கப்பட்ட இதர 14 மனுக்களும் போதிய கல்வி தகுதி இல்லை என்பதற்காக மட்டுமே நீராகரிக்கப்பட்டுள்ளன .உப்பு சப்பு காரணங்களை காட்டி மனுக்களை நீராகரிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் மனுக்களை பரிசீலித்து பணிநியமனத்திற்கு ஒப்புதல் அளித்த நமது தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் உயர்மரியாதைக்குரிய சம்பத் IPS அவர்களை வாழ்த்துவோம் 
                                 மண்டலவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் 
சென்னை --12  திருச்சி -22  மதுரை -9   கோவை -4 
ஏற்கனவே திருப்ப்பட்ட விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றபின் விண்ணப்பிக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது .நமது முன்னணி தோழர்கள் இறந்த நம் GDS தோழர்களின் குடும்பங்களுக்கு வழிகாட்டுங்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                               முக்கிய செய்திகள்
பணியிலிருக்கும்போது இறந்த GDS ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு GDS பணிநியமனம் வழங்கிட 10.11.2017 அன்று நடந்த COMMITE ON COMPASSIONATE  ENGAGEMENT தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது .அதன்படி நமது நெல்லை கோட்டத்தில் கீழ்கண்ட தோழர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு பணிவழங்க ஒப்புதல் அளித்துள்ளது
1S ..கோவிந்தகனக ராஜ்   S/O S .சங்கரநாராயணன் GDS
2.S .லீனா டெய்சி   W/O மரிய பெஞ்சமின் ஜோசப் 



Tuesday, November 21, 2017

                                               முக்கிய செய்திகள் 
CCS பென்ஷன் திட்டத்தின் கீழ் வராத ஏனைய ஊழியர்களுக்கான அதாவது தனியார்துறை பொதுத்துறை மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிக்கொடையை(GRATUITY ) உயர்த்த மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது .இந்த உயர்வு மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ள உயர்வின் அடிப்படையில் இருக்கும் .
                             ------------------------------------------
IPPB குறித்த கருத்துக்களை 20.11.2017 குள் அஞ்சல் வாரியத்திடம் அளிக்குமாறு அஞ்சல்துறை தனது 15.11.2017 தேதியிட்டகடிதத்தின் மூலம்  நமது துறையில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று சம்மேளனங்களிடம் அமுலாக்கத்தின் சுருக்கத்தை அனுப்பி 
கருத்துக்களை கேட்டுள்ளது 
1.RN -பராசர் NFPE 
2.D.தியாகராஜன் FNPO
3.SS .மகாதேவ்யையா AIGDSU   
   IPPB க்கென்று தனியாக MD முதல் அலுவலகம் வரை பார்த்து அதெற்கென பணிகள் துரிதகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த கருத்து கேட்புகள் கண்துடைப்பை தவிர வேறென்னதாக இருக்கமுடியும் .
                                                 -------------------------------------------
வாழ்த்துக்களுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, November 20, 2017

                             நெல்லை கோட்ட செய்திகள் 
இந்தமாத மாதாந்திர பேட்டி 30.11.2017 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது .பேட்டியில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகளை 22.11.2017 குள் கோட்ட செயலர்களிடம் தெரிவிக்க கேட்டு கொள்கிறோம் .
                                              தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா 

குறைந்தபட்ச ஊதியம் -பிட்மென்ட் பார்முலா மாற்றம் என்ற செய்தியில் உண்மை இல்லை மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளன பொதுச்செயலர் தோழர் கிருஷ்ணன் அவர்களின் விளக்கம் 
LATEST POSITION REGARDING MINIMUM PAY AND FITMENT FORMULA -- GOVT INFORMED STAFFSIDE NATIONAL COUNCIL JCM THAT INCREASE IN MINIMUM PAY AND FITMENT FORMULA WILL NOT COME UNDER ANOMALY COMMITTEE ITEM.

During the last 2 - 3 months both print and electronic media are continuously reporting that increase in 7th CPC Minimum Pay and Fitment Factor is under serious consideration of the Govt. and National Anomaly Committee will give its recommendation to Govt. and orders for increased Minimum Pay and Fitment Formula will be given effect from April 2018. We are reproducing below a letter from Govt. dated 30.10.2017 addressed to Secretary, Staff Side , National Council JCM  stating that the demand for increase in Minimum Pay and Fitment Formula will not come under the purview of National Anomaly Committee. Further Govt. has not yet constituted the HIGH LEVEL COMMITTEE for increasing Minimum Pay and Fitment Formula as assured by the Group of Ministers including Home Minister Sri Rajnath Singh, Finance Minister Shri Arun Jaitley on 30.06.2016. The so-called Senior Officers Committee has also not discussed this agenda even though staff Side has repeatedly demanded discussion and settlement as per the assurance given by Senior Cabinet Ministers. Now 17 months are over. 32 lakhs Central Govt. Employees and 33 lakhs Pensioners are being continuously betrayed by the NDA Govt.    



M. Krishnan 
Secretary General 
Confederation 
Mob. & Whats App:  09447068125

அன்பார்ந்த தோழர்களே !
       மாநில மாநாடு செல்ல ஆயத்தமாக இருக்கும் நெல்லை தோழர்களின் கவனத்திற்கு நெல்லையில் இருந்து நாம் 24 தோழர்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்திருக்கிறோம் .24.11.2017 நெல்லை விரைவு ரயிலில் புறப்படுகிறோம் .இரவு சரியாக 19.40 க்கு நெல்லையில் இருந்து புறப்படுகிறது .அனைவருக்கும் S 7 கோச் ஒதுக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே முன் பதிவு செய்தவர்களில் இரண்டு தோழர்கள் தங்கள் பயணத்தை ரத்துசெய்திருக்கிறார்கள் .ஆகவே புதிதாக வரவிரும்புகிறவர்கள் எங்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ள படுகிறார்கள் ..மேலும் வேறு யாராவது தங்கள் பயணத்தில் மாற்றம்செய்ய விரும்பினாலும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் .
நன்றி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை .

Thursday, November 16, 2017

                                                      வாழ்த்துகிறோம் 
தோழியர் ஏஞ்சல் எபேனேசர் பட்சப்பூ GDSBPM ALWANERI மூலைக்கரைப்பட்டி அவர்கள் MTS ஆக பணிமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் .தோழியரின் பதவி உயர்வு காலங்கள் சிறக்க நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .வாழ்த்துக்களுடன் 
SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
SK பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Wednesday, November 15, 2017

                  நேர்மைக்கு பெயர்பெற்ற அஞ்சல் துறைக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைப்போம் -
தபால்காரர் -MTS நியமனத்தில் மீண்டும் முறைகேடு --தமிழகம் -மகாராஷ்டிரா என்று பட்டியல் நீளுகிறது --இதுவரை யாரும் கைதுசெய்யப்படாத வினோதம் --மர்மம் நீளுகிறது --
தேர்வுகளை ரத்து செய்தால் மட்டும் போதுமா ? சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?அஞ்சல் துறையின் முதுகெலும்பாக விளங்கும் GDS ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டில் கைவைத்து -இன்று ஊழலுக்கு வழிகொடுத்த நேரடி தபால் காரர் -MTS நியமனத்தை அஞ்சல் வாரியம் சீர் செய்யுமா ?
கடந்த ஆண்டுகளில் GDS பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஏன் ? விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கடைசி நாளுக்கு மறுநாளே முடிவுகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு SMS மூலம் தகவல் வரும் என்ற
அறிவிப்பு என்னானது ? 2015 இல் நடந்த நேரடி  எழுத்தர் தேர்விலும் தேவையற்ற காலதாமதம் ஏன் ?
  லஞ்சம் -லாவண்யம் இல்லா அஞ்சல் துறையில் ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க அணிதிரள்வோம் -ஊழலை வெளிக்கொணர்வோம் -முறையான உண்மையான நியமனத்திற்கு துணை நிற்போம் 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !
 நெல்லை கோட்ட நிர்வாகம் டெபுடேஷன் பிரச்சினையில் காட்டுவது அலட்சியமா ? பாரபட்சமா ?
குமுறும் ஊழியர்கள் -நிர்வாகம் சீர்படுத்துமா ?சீர்படுத்தனுமா ?

   மற்ற கோட்டங்களை ஒப்பிடுப்பார்க்கையில் நமது கோட்டத்தில் ஊழியர்களின் மீது தேவையில்லாத அச்சுறுத்தல்கள் -பழிவாங்கல்கள் -RULE 16 இன் கீழ் தண்டனைகள் என அவ்வளவாக இல்லை .அதனால் தான் நாமும் நிர்வாகத்தோடு ஒருசுமுகமான போக்கை கடைபிடித்து வருகிறோம் .ஆனால் சமீபத்தில் டெபுடேஷன் பிரச்சினையில் சிலபகுதி ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை நம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது .
குறிப்பாக வள்ளியூர் அஞ்சலகம் 12 அலுவலகங்களுக்கு CASH OFFICE ஒரு காலத்தில் HEADOFFICE ஆக மாறுவதற்கான தகுதி படைத்திருந்தது .அப்படி வேலைப்பளுவுள்ள வள்ளியூர் அஞ்சலகத்திற்கு தொடர்ந்து டெபுடேஷன் .மூன்று எழுத்தர்கள் கூட இல்லாமல் வள்ளியூர் அஞ்சலகத்தை இயக்க சொல்லுவது நியாயமா ? ICPETTAI -மானுர் -பணகுடி போன்ற வேலைப்பளு அதிகமுள்ள A கிளாஸ் அலுவகத்தில் எத்தனை நாட்கள் தனிநபர் வேலைபார்த்த கொடுமை தொடர்கிறது -ஆனால் மாறாக மாநகர் பகுதியிலுள்ள சில LSG அலுவலகத்தில் நாற்காலிகள் போட இடமில்லாமல் நிரம்பி வழிகிறது மேலும் ஒரு ஆள் விடுப்புக்கும் அந்த LSG அலுவலகத்திற்கு டெபுடேஷன் கொடுக்கப்படுகிறது .ஒரு அலுவலகத்தில்  DEPUTATION உத்தரவை பார்தவுடன்  VIP களுக்கு  விடுமுறை  கொடுக்கப்படுகிறது .கோட்டநிர்வாகம் எல்லாருக்கும் பொதுவாக நடக்கவேண்டும்.இதுகுறித்து விரிவான புகார் கடிதம் கோட்ட சங்கத்தால் கொடுக்கப்படவுள்ளது .தேவைப்படும்பட்சத்தில் எந்தெந்த அலுவலகங்களில் இருந்து டெபுடேஷன் அனுப்பப்பட்டுவருகிறது எந்தெந்த அலுவலகங்கள் மழை மறை பிரதேசம் போல் டெபுடேஷன் மறை அலுவலகம் என்பதனை தகவல் பெறும் உரிமைச்சட்டம்  மூலம் கேட்டு அடுத்த கட்ட இயக்கங்களை முன்னெடுத்து செல்லப்போகிறோம் .ஆகவே உங்கள் பகுதி பிரச்சினைகளை உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க கேட்டு கொள்கிறேன் .ஊழியர்கள் பிரச்சினைகளை ஆர்வமாகவும் -நம்பிக்கையுடனும் கோட்ட சங்க கவனத்திற்கு கொண்டுவரும் அன்பு தோழர்களுக்கு நன்றி !நன்றி !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, November 14, 2017

கேடர் சீரமைப்பு --லோபோ கமிட்டி பரிந்துரைக்குப்பின் புதிய உத்தரவு --------DoP Order Dated 10.11.2017.
C மற்றும் B அலுவலகங்கள் தவிர ஏனைய பதவிகளை LSG பதவிகளாக மாற்ற சீரான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் 
தொழற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள் முற்றிலும் நிராகரிப்பு 
விடுபட்ட அனைத்து மாநிலத்திலும் 31.12.2017 குள் DPC கூட்டிடவும் --
31..1.2018 குள் இடமாறுதல்கள் அமுல்படுத்திடவும் முடிவு 
 பெரிதாக எதிர்பார்க்க பட்ட LSG பதவிகள் கோட்ட அளவிலான பதவிகளாக மாற்றுவதும் கைவிரிப்பு 
ME --SA பதவிகளையும் LSG ஆக்க மறுப்பு 
காசாளர் பதவிகள் இனி LSG கிடையாது 
மும்பை FOREIGN POST தவிர அனைத்திற்கும் LSG பொதுவிதிகள் பொருந்தும் 
RLO LSG  வரம்பிற்குள் வராது 
கோட்ட அலுவலக ACCOUNTANT மற்றும் ஒரே அலுவலகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ACCOUNTANT பதவிகள் இருந்தால் அவைகளில் ஒன்று LSG ஆக மாற்றப்படும் 















Monday, November 13, 2017

அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நமது NFPE சம்மேளனம் அறிவித்திருக்கும் இயக்கங்கள் வெல்லட்டும் 

28.11.2017 மற்றும் 29.11.2017 இரண்டுநாட்கள் கோட்ட அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் 
20.12.2017 அனைத்து CPMG அலுவலகம் முன்பு தர்ணா 
12.02.2018 முதல் 16.02.2018 வரை ஐந்து நாட்கள் தொடர் தர்ணா -டெல்லி நாடாளுமன்றம் முன்பு
                                        முக்கிய கோரிக்கைகள் 
>GDSகமிட்டி  பரிந்துரையை அமுல்படுத்து 
>அனைத்து காலியிடங்களையும் நிரப்பிடு 
>CSI மற்றும் RICT அமுலாக்கத்திற்குமுன் அனைத்து >உட்கட்டமைப்புகளையும் சரிசெய்திடு .
>அஞ்சல் துறையில் வெளியாட்களை அனுமதிக்காதே 
>புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் 
>அஞ்சலகத்தில் வாரம் 5 நாள் வேலைநாட்களை அமுல்படுத்து 
>சேமிப்பு கணக்குகளை வங்கிகளுக்கு மாற்றுவதை நிறுத்து 
>ARMY POST OFFICE (APS ) மூடும் திட்டத்தை கைவிடு 
உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இயக்கங்கள் வெல்லட்டும் .

போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, November 11, 2017

டெல்லி முற்றுகை போராட்டம் வெல்லட்டும் ! வெல்லட்டும் !
Nov 9,10,11-ஆகிய மூன்று தினங்கள் முற்றுகையில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பங்கேற்று வருகின்றனர் 
#கோரிக்கைகள்;
1)குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000/
2)அனைவருக்கும் சமூக பாதுகாப்பு.அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.3000/பென்ஷன்.
3)விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து. பொது விநியோக முறை பாதுகாப்பு!
4)சங்கம் அமைக்க உரிமை/45-நாட்களில் பதிவு.
5)பொதுத்துறை பாதுகாப்பு.ரயில்வே,காப்பீடு மற்றும் பாதுகாப்பு துறைகளில் தனியார்மயம் கூடாது.
6)தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்திருத்தங்களை கைவிடு!
7)வேலைவாய்ப்புகளை பறிக்காதே/உருவாக்கு!
8)போனஸ்,பி.எப்,ஈ.எஸ்.ஐ-போன்றவைகளுக்கு உச்ச வரம்பை நீக்கு!
9)அங்கன்வாடி போன்ற திட்ட ஊழியர்களை நிரந்தரம் செய்/ "தொழிலாளர்களாக"
(Workers) அங்கீகாரம் செய்!
10)ஒப்பந்தம்/கான்ட்ராக்ட் முறை ஒழிப்பு.சமவேலைக்கு சம ஊதியம்
11)முறைசாரா தொழிலாளர்களை காப்பாற்ற தேசிய நிதியம்.ஜிடிபி-ல் 3% நிதி ஒதுக்கீடு
12)வகுப்புவாதம் எதிர்ப்பு; மக்கள் ஒற்றுமை
ஆகிய 12 அம்ச கோரிக்கைகள்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக ! தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 

திருநெல்வேலி CPC  பிரச்சினையில் கோட்ட சங்க கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த கோட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றி .


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION—GROUP-C
TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MMdated at Palayankottai-627002 the 09.11.2017

To

The Sr. Supdt of POs
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir

              Sub : Shifting of PLI/RPLI case files from the exisiting
                      Record Room – C/o CPC, Tirunelveli HO – reg


              We bring the following to your kind notice for immediate remedial action.
             
              The case files of RPLI/PLI pertaining to CPC, Tirunelveli HO are now kept in the old canteen building.  The SSPOs., may very well knows the condition of the building. Even the civil wing has suggested to demolish the building as there was no feasibility of carry out the repair works in this building.  As it dilapidated condition, staff are afraid of entering the room to search for files.  Often the pieces of ceiling are falling on the heads of the staff.  It is to be added that in the recent rain, the rain water flown inside and all the files in the bottom racks were immersed in the water. 

              Hence, as a permanent measure, the following are suggested.

1.    The SBCO branch may be shifted to the new building in the space behind the counter area.
2.    The file racks may be kept in the SBCO area which is nearer to CPC also.

              We request you to consider the above suggestion to safeguard the records of PLI/RPLI and also the lives of our staff who are attending the work.


Yours faithfully.


[S.K. JACOBRAJ]


Friday, November 10, 2017

Image may contain: 1 person, smiling, text

                                   முக்கிய செய்திகள் 
ஏழாவது சம்பளக்குழு சிபாரிசின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீடு கட்ட முன்பணம்HBA (
HOUSE BUILDING ADVANCE} உயர்த்தப்பட்டுள்ளது .இதன்படி இனி HBA அடிப்டைசம்பளத்தில் 34 மடங்கு எனவும் அதிகபட்சமாக ரூபாய் 25 லட்சம் எனவும் உயர்ந்துள்ளது .புதிய தோழர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் .
இதை முதல் 180 மாதங்களில் அசலாகவும் அடுத்த 60 மாதங்கள் வட்டியாகவும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் .(Government of IndiaMinistry of Housing & Urban Affairs09-November-2017 18:33 IST)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
LSG /HSG II மற்றும் HSG I பதவிகளை OFFICIATING வழங்க மீண்டும் வந்த CPMG அலுவலக உத்தரவு 
LSG பதவிகளுக்கு கிரேடு PAY 2800 பெறுகிற ரெகுலர் PA களும் 
HSG II பதவிகளுக்கு LSG /PA கிரேடு PAY 4200 பெறுகிறவர்களும் 
HSG I பதவிகளுக்கு HSG II அல்லது கிரேடு PAY 4600 வாங்குகிறவர்கள் தகுதியானவர்கள் என உத்தரவு 07.11.2017 அன்று வந்துள்ளது .கோட்ட நிர்வாகம் ஏற்கனவே பெறப்பட்ட விருப்ப கடிதங்களின் அடிப்படையில் கா லியாகவுள்ள HSG II மற்றும் HSG I பதவிகளை நிரப்பிட கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------





Thursday, November 9, 2017

                                                முக்கிய செய்திகள் 
NFPE அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் உறுப்பினர் சந்தா ரூபாய் 75 ஆக உயருகிறது .இதற்கான ஒப்புதலை அஞ்சல் வாரியம் அளித்துள்ளது .இதன்படி உறுப்பினர்களிடம் பெறப்படும் சந்தாத்தொகை கீழ்கண்ட விகிதங்களில் பிரித்து அளிக்கப்படும் .
கோட்ட சங்கத்திற்கு         --35
மாநிலச்சங்கத்திற்கு        - 20
மத்திய சங்கத்திற்கு       -- 16 
சம்மேளனத்திற்கு            --  4 
                                                  ------------------
                                                                75
                                               -------------------
இதன் அடிப்படையில் தான் இனி பகுதிப்பணங்கள் அனுப்பப்படும் .
முன்னதாக இந்தத்தொகை 24.50 (கோட்டம் )  15  (மாநிலம் )8     (மத்திய சங்கம் ) சம்மேளனம் 2.50 .என இருந்தது .
கோட்ட கிளைகள் அனுப்பும் பகுதிப்பணங்கள் அடிப்படையில் தான் மாநில /மத்திய சங்க மாநாடுகளுக்கு பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுகிறார்கள் ..நெல்லையை பொறுத்தவரை நமக்கு நான்கு சார்பாளர்கள் .ஆகவே அந்தந்த பொறுப்பாளர்கள் இந்த புதிய விகிதாசார அடிப்படையில் கோட்டா  தொகையினை செலுத்திட வேண்டும் .அண்ணன் பாலு அவர்களின் பாணியில் சொல்வதென்றால்  கோட்டா தான் நமது தோட்டா .
                                             மாநில மாநாட்டு வரவேற்பு குழுவின் பொதுச்செயலர் தோழர் ராமமூர்த்தி அவர்கள் தந்திருக்கும் செய்தி 
  மாநில மாநாட்டிற்கு வருகிற தோழர்களுக்கு அங்கு தங்கும் வசதிகளை முன்பதிவு செய்துகொள்ள தோழர் G.இளைய ராஜா போஸ்ட்மேன் சிங்கம்பெருமாள் கோயில் அவர்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள் அவர்களது தொலைபேசி எண் 7897569511.நன்றி 
            வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, November 6, 2017

                                         38 வது  மாநில மாநாடு 
நமது தமிழ்மாநில சங்கத்தின் 38 வது மாநில மாநாடு எதிர்வரும் 25.11.2017 முதல் 27.11.2017 வரை செங்கல்பட்டு சிங்கம்பெருமாள் கோயிலில் நடைபெறுவதை தாங்கள் அறீவீர்கள் .மாநில மாநாட்டிற்கு வருபவர்கள் 24.11.2017 முதல் 28.11.2017  வரை ஐந்து நாட்கள் சிறப்பு விடுப்பு /சொந்தவிடுப்பு களை இன்றே விண்ணப்பித்து கோட்ட சங்கத்திற்கு தகவல்களை தெரிவிக்கவும் .கடைசி நேர நெருக்கடிகளை தவிர்ப்பீர் .
நெல்லையில் இருந்து நமது பயண விவரங்கள் 
24.11.2017 நெல்லை எக்ஸ்பிரஸ் நெல்லை TO செங்கல்பட்டு 
27.11.2017 நெல்லை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு TO நெல்லை 
தோழர்கள் ஜேக்கப் ராஜ் வண்ணமுத்து  சுடலையாண்டி பாட்சா அழகுமுத்து பிரபாகர் சங்கர் குருசாமி முத்துமாலை ஞானசேகரன் ஜான் தேவதாஸ் சிவகுமார்  கணபதி ஷியாம் சபரி கைலாஷ் சுடலைமுத்து நமசிவாயம் சாகுல் நெல்லையப்பன் ஆவுடைநாயகம் வள்ளிநாயகம் வேடமாணிக்கம் வள்ளிநாயகம் மற்றும் கலியபெருமாள் 
ஆகியோருக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .மேலும் வரவிரும்புகிறவர்கள் தங்கள் பயணங்களை தாங்களே நிர்ணயம்செய்ய கேட்டுக்கொள்கிறோம் 
முன்னதாக மாநில மாநாட்டிற்கு நன்கொடையாக நெல்லையில் இருந்து முதற்கட்டமாக ரூபாய் 10000 வழங்கியுள்ளோம் .நன்கொடைகளை அள்ளித்தந்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள் 
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
----------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, November 3, 2017

இன்று (03.03.2017)நடைபெறவிருக்கும் தென் மண்டல BI -MONTHLY கூட்டத்தில் விவாதிக்க கொடுத்திருக்கும் பிரச்சினைகள் 

logo       ALL INDIA  POSTAL  EMPLOYEES   UNION  GROUP ‘ C’,  TN,                         
                  D4, Dr.Subbarayan nagar Postal Qtrs., Teynampet, Chennai –600 018.
 P.MOHAN                              J. RAMAMURTHY                       A. VEERAMANI
 PRESIDENT                         CIRCLE  SECRETARY          CIRCLE FIN . SECRETARY                 

No. P3/BMM/SR                                                                                                                            dt. 23.10.2017

To

The Postmaster General,
Southern Region,
Madurai 625 001.

Sir,                              Sub:  Subjects for the bi-monthly meeting with the PMG, SR on  03.11.2017  - Reg.                                                                                                 ….

            The under mentioned item of subjects are proposed to be taken up for discussions with the PMG, SR during the ensuing bi-monthly meeting. The same may kindly be entertained.  The pending subjects may also be taken up for discussions. Sorry for late submission of subjects, Which happened due to continuous Four Monthly Meeting and RJCM meetings on 20 th and 23rd Oct. 2017.

New Subjects:-

1.     Acute shortage of staff  in Sivaganga and Ramanathapuram  Divisions due to irregular assessment of vacancies in previous years and continued Rule 38 tfrs/temporary transfers/ deputations to Regional office etc.  There is mismatch in between the sanctioned and working strength. Further there are many deputations to Regional office / frequent ordering for trainings in bulk, the entire services are much hampered. Hence it is requested to recall the deputationists to these Divisions immediately besides permitting some percentage of outsourcing/eligible willing GDS/Postman/MTS in back office work/ BD activities.

2.     Continued harassment of staff in the name of BD activities at Kovilpatti Division by using unparliamentarily words in BD meetings against the staff by the SSPOs., Kovilpatti Dn., fixing heavy targets even to the indoor staff, while they are attending more than 10-12 hrs office indoor duty in the shortage scenario, refusal of even emergent medical leaves, threatening with APAR entries in open meetings. To add fuel to the fire, two officials were threatened over phone to credit the amount equal to the value of an express parcel, which was booked at Tenkasi HO, without making proper enquiry at the delivery end and ascertaining the fact. Suitable intervention is much requested to rein the situation.

3.     Non consideration of transfer under immunity grounds to the Divisional Secretary, Ramanathapuram Division to any HQ office for long, even at his first tenure of election and non consideration of even local officiating to many seniors because of biased attitude and union favoritism, by posting many juniors, brushing aside the senior requests at Ramanathapuram Division, with unbridled style of functioning, spoiling the conducive atmosphere and working environment. Despite submission of a memorandum by the Circle Union to the PMG, SR two months back on the problems faced at Ramanathapuram and despite after a personal meet by the Circle level office bearer with the Divisional Head to make a congenial atmosphere, nothing is heeded and there is no improvement in dealing with the staff matters. Request for immediate and suitable intervention.


                                                                                                                                                                   …2

                                                                                     ..2..

The under mentioned office bearers will be attending   the meeting.  Necessary arrangements may kindly be made for granting special CL and relief to them.
                       
1. Sri. J. Ramamurthy, Circle Sec., AIPEU Gr. C, TN @D4, Postal Staff Quarters, Teynampet, Chennai -18.
2. Sri. S.K. Jacob Raj, Divl. Sec., AIPEU Gr. C, Tirunelveli Division, @ Palayankottai HPO.

With regards,
 
(J. RAMAMURTHY)

CIRCLE SECRETARY.

Thursday, November 2, 2017

                                  முக்கிய செய்திகள் 
ஏழாவது ஊதியக்குழுவின் தொடர்ச்சியாக குறைபாடுள்ள குழந்தைகளுக்கான CHILDREN EDUCATION ALLOWANCE இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது .இந்த உத்தரவு 01.07.2017 முதல் அமுலுக்கு வருகிறது .இதர நிபந்தனைகள் 11.09.2008 இன் படி தொடர்கிறது .இதனால் ஒருகுழந்தைக்கு அதிகபட்சமாக ரூபாய் 54000 வரை கிடைக்கும் .
-------------------------------------------------------------------------------

JOURNEY TO HEADQUARTERS ON LTC IN RESPECT OF DEPENDENT FAMILY MEMBERS OF THE GOVERNMENT SERVANT - CLARIFICATION REG

Wednesday, November 1, 2017

                                                   முக்கிய செய்திகள் 
ஏழாவது ஊதியக்குழுவின் தொடர்ச்சியாக குறைபாடுள்ள குழந்தைகளுக்கான CHILDREN EDUCATION ALLOWANCE இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது .இந்த உத்தரவு 01.07.2017 முதல் அமுலுக்கு வருகிறது .இதர நிபந்தனைகள் 11.09.2008 இன் படி தொடர்கிறது .இதனால் ஒருகுழந்தைக்கு அதிகபட்சமாக ரூபாய் 54000 வரை கிடைக்கும் .ய 

  CSI குறித்த சென்னை வடகோட்ட சங்கத்தின் கடிதத்தில் இருந்து .......

    ஒரு சாதாரண நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை விற்பதற்க்காக செய்யப்படும் விளம்பர யுக்திகள்அதன்பின் அது சந்தையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு சென்றவுடன் கம்பெனிகளின் கைவிரிப்புகள் போன்றுதான் இன்றைய TCS-நிறுவனமும் செயலாற்றிக்கொண்டிருக்கிறது .CSI அமுலாக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தில் 25.10.2017 தேதி நிலவரப்படி 497 அலுவலகங்கள் CSI ஆக மாறியதில் சுமார் 49 அலுவலகங்களில் மட்டும்தான் DAILYACCOUNT எடுக்க முடிந்திருக்கிறதாம் .மீதமுள்ள 448 அலுவலகங்களில் கணக்குகள் TALLY ஆக நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டுள்ளதாம் .தெலுங்கானா மாநிலத்தில் 200 அலுவலகங்கள் கடந்த 25 நாட்களாக வேலைசெய்ய முடியாமல் மூடப்பட்டிருக்கிறதாம் .மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் அதிகாரிகளே ஒத்துக்கொள்ள தொடங்கிவிட்டார்கள் இது ஒரு பெரிய இழப்பில் போய் முடியும் என்று .
  பொதுமக்களுக்கு எந்தவகையிலும் பயனளிக்காத இத் திட்டத்தை எதிர்த்து போராட்ட பாதையில் செல்லவேண்டும் என நமது பொது செயலருக்கு தெரிவித்திருக்கிறார்கள் .முன்னதாக வேலூர் கோட்ட தோழர்களின் எழுச்சியும் -மாநிலச்சங்கத்தின் முயற்சியும் தமிழகத்தில் அமுலாக்கத்தை தள்ளிபோடவைத்தது என்பதை நினைத்து பார்க்கிறோம் 
வாழ்த்துக்கள் தோழர் செந்தில்குமார் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

தோழர் குணசேகர் தபால்காரர் பாளை அவர்களின் பணிநிறைவு -விழா 
நெல்லை அஞ்சல் நான்கின் முன்னணி தோழரும் -அஞ்சல் நான்கில் மாற்றம் கொண்டுவந்த அண்ணன் RL .குணசேகர் அவர்களின் பணிநிறைவு விழா பாளையில் 31.10.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது .விழாவில் நமது முன்னணி தோழர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் .அண்ணன் குணசேகர் எல்லாவளமும் பெற்று பல்லாண்டுகள் வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது