...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 24, 2017

                                                நவம்பர் -24
           NFPTE -சம்மேளன நாள் வாழ்த்துக்கள் 
   NFPE யில் உறுப்பினர் என்பதில் 
  எனக்கு பெருமை உண்டு -சில 
  நேரங்களில் கர்வமும் உண்டு 
  காரணம் NFPE மட்டும்தான் 
  ஊழியர்களால் உருவாக்கப்பட்டது 
  தொழிற்சங்க ஜனநாயகத்தில் வார்க்கப்பட்டது 
 அவசரகால அங்கீகார பறிப்பிலும் 
 அசைக்கமுடியா இயக்கமாக நின்றது 
  அரசியல் கலப்படமற்றது 
  அடிமைதனத்தை அனுமதிக்காத து 
  ஆட்சியாளர்களிடம்  அடிபணிந்திராதது 
  அதிகாரிகளிடமும் அஞ்சிடாதது --இங்கு 
  அடிமட்ட உறுப்பினர் கூட 
  அகில இந்திய தலைமையை கேள்விகேட்க உரிமையுண்டு 
  கேட்டது சாதாரண உறுப்பினர் என்றில்லாமல் -மனம் 
  கோணாமல் பதிலளிக்கும் தலைமையும் இங்கு   உண்டு 
   தலமட்ட ஊழியர்களின் விமர்சனங்கள் குறித்து 
   மாபெரும் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறினார் 
  NFPE -ஊழியர்களின் குறைதீர்க்கும் மரம் -
  சிலநேரங்களில் கனிகள் கிடைக்கவில்லை என்றால் 
 விமர்சனம் என்றபெயரில் அவர்கள் கல்லெறிவது 
கனியை பெற தான தவிர 
காயப்படுத்துவதற்கல்ல  
இந்த பக்குவ பேச்சுக்கள் -விமர்சகர்களை 
வெட்கப்பட வைத்ததுண்டு 
போராட்டங்களில் தீர்வு இல்லாமல் இருந்திருக்கலாம் 
போராட்டங்கள் ஒருபோதும் தோற்று போனதில்லை 
மிச்சமிருக்கும் இன்னும் ஒரு நம்பிக்கைதான் 
இயக்கத்தை இளமையாக வைத்திருக்கிறது   
ஆரம்ப நாட்களில் என்னை ஈர்த்த கோஷங்கள் (ஜிந்தாபாத் )
அடிக்கிற காற்று வீசட்டும் 
ஆடிப்புயலே வீசட்டும் 
துடிக்கும் ரத்தம் பேசட்டும் 
துணிந்த நெஞ்சம் நிமிரட்டும் 
கொடிகள் வானில் உயரட்டும் 
கோஷம் விண்ணை பிளக்கட்டும் 
இன்குலாப் ஜிந்தாபாத் 
கோஷம் விண்ணை பிளக்கட்டும் 
கோட்டை கதவுகளை அதிரட்டும் 
 வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


0 comments:

Post a Comment