...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 9, 2017

                                                முக்கிய செய்திகள் 
NFPE அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் உறுப்பினர் சந்தா ரூபாய் 75 ஆக உயருகிறது .இதற்கான ஒப்புதலை அஞ்சல் வாரியம் அளித்துள்ளது .இதன்படி உறுப்பினர்களிடம் பெறப்படும் சந்தாத்தொகை கீழ்கண்ட விகிதங்களில் பிரித்து அளிக்கப்படும் .
கோட்ட சங்கத்திற்கு         --35
மாநிலச்சங்கத்திற்கு        - 20
மத்திய சங்கத்திற்கு       -- 16 
சம்மேளனத்திற்கு            --  4 
                                                  ------------------
                                                                75
                                               -------------------
இதன் அடிப்படையில் தான் இனி பகுதிப்பணங்கள் அனுப்பப்படும் .
முன்னதாக இந்தத்தொகை 24.50 (கோட்டம் )  15  (மாநிலம் )8     (மத்திய சங்கம் ) சம்மேளனம் 2.50 .என இருந்தது .
கோட்ட கிளைகள் அனுப்பும் பகுதிப்பணங்கள் அடிப்படையில் தான் மாநில /மத்திய சங்க மாநாடுகளுக்கு பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுகிறார்கள் ..நெல்லையை பொறுத்தவரை நமக்கு நான்கு சார்பாளர்கள் .ஆகவே அந்தந்த பொறுப்பாளர்கள் இந்த புதிய விகிதாசார அடிப்படையில் கோட்டா  தொகையினை செலுத்திட வேண்டும் .அண்ணன் பாலு அவர்களின் பாணியில் சொல்வதென்றால்  கோட்டா தான் நமது தோட்டா .
                                             மாநில மாநாட்டு வரவேற்பு குழுவின் பொதுச்செயலர் தோழர் ராமமூர்த்தி அவர்கள் தந்திருக்கும் செய்தி 
  மாநில மாநாட்டிற்கு வருகிற தோழர்களுக்கு அங்கு தங்கும் வசதிகளை முன்பதிவு செய்துகொள்ள தோழர் G.இளைய ராஜா போஸ்ட்மேன் சிங்கம்பெருமாள் கோயில் அவர்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள் அவர்களது தொலைபேசி எண் 7897569511.நன்றி 
            வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment