...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, December 26, 2017

                         தோழர்கள் -தோழியர்கள் -அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 
                                             முக்கிய செய்திகள் 
                தமிழகத்தில் CSI அமுலாக்கம் ஜனவரி முதல் படிப்படியாக அமுலாகிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------
கேடர் சீரமைப்பின் அடுத்தப்பட்டியலுக்கு முன்பாக மாநில அளவில் பணிமூப்பு பட்டியல் சரிபார்க்கும் பணி மாநிலநிர்வாக அலுவலகத்தில் அந்தந்த கோட்ட அலுவலக அதிகாரிகளை நேரில் வரவழைத்து சரிபார்க்கப்பட்டு வருகிறது 
----------------------------------------------------------------------------------------------------------------------
    விருதுநகர் சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை கிளைகளின் மாநாடு 31.12.2017அன்று விருதுநகர் டவுன் அஞ்சலகத்தில் நடைபெறுகிறது .மாநாட்டில் தோழர்கள் சுந்தரமூர்த்தி நமது மண்டலச்செயலர் தோழர் சுப்ரமணியன் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர் .மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம் 
-------------------------------------------------------------------------------------------------------------------------
தென் மண்டல அ டுத்த BI -MONTHLY மீட்டிங் 10.01.2018  அன்று மதுரையில் நடைபெறுகிறது .நெல்லை  கோட்டத்தின் சார்பாக திருநெல்வேலி HO விற்கு ஆண்கள் கழிப்பறை புதிதாக கட்டுவதற்கு மாநில நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கிய ஒப்புதலை அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு SUBJECT மாநில சங்கத்திற்கு அனுப்பியிருக்கிறோம் . 
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் 
                                   SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா 
---------------------------------------------------------------------------------------------------------------------

                                                   செய்திகள் ...சில
அன்பார்ந்த தோழர்களே !
             எனக்கு (ஜேக்கப் ராஜ் )நாளைமுதல் 27.12.2017 முதல் 29.12.2017 வரை மதுரையில் CSI பயிற்சி இருப்பதால் 29.12.2017 சென்னை தர்ணாவிற்கு என்னால் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது .ஆகவே நமது கோட்டத்தில் இருந்து 29.12.2017 சென்னை தர்ணாவிற்கு செல்ல முன்பதிவு செய்திருந்த தோழர்கள் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் தலைமையில் பங்கேற்கிறார்கள் .அஞ்சல் ஊழியர்களின் பணிகளை களவாடி தனியார் ஏஜென்சிகளிடம் விற்க என்னியுள்ள அரசு மற்றும் அஞ்சல் நிர்வாகத்தின்  Outsourcing Potal Agency திட்டத்தை முறியடிப்போம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
                                 இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல 
புத்தாண்டு டைரி பணிகள் நிறைவு பெற்று விட்டன .01.01.2018 அன்று நிச்சயம் நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் சேரும் வகையில் அனுப்பப்படும் .இதற்காக ஒத்துழைப்பு கொடுத்த அம்பை -PSD மற்றும் SBCO (NFPE ) அனைவருக்கும் நன்றி .தொடர்ந்து 10ஆண்டுகளாக வெளியிட உதவிய அனைத்து தோழமைக்கும் எங்கள் நன்றிகள் ...
-------------------------------------------------------------------------------------------------------------------------
                                                   நன்றி .....நன்றி 
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை உள்ள சுத்தியோடு பரிமாறிக்கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் மற்றும்  மேலிட தொழிற்சங்க தலைவர்களுக்கும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறேன் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------------


Saturday, December 23, 2017

                                              முக்கிய செய்திகள் 
தோழர்கள் /தோழியர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 
----------------------------------------------------------------------------------------------------------------------
                  மாநில அளவில் இருக்கும் காலியிடங்களை  மதிப்பீடு செய்ய மாநில அளவில் அமைக்கப்பட்ட   கமிட்டியில் ஊழியர் தரப்பு பிரதிநிதியாக RJCM ஊழியர்தரப்பு தலைவரான நமது மாநிலசெயலர் இடம் பெற்றிருக்கிறார்   .இது மாநில அளவில் உள்ள SANCTIONED STRENGTH மற்றும் WORKING STRENGTH இடையிலான ACTUAL வேறுபாட்டினை உறுதிப்படுத்த நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு .தமிழகத்தில் மூன்று சங்கங்கள் இருந்தாலும் NFPE க்கு மட்டும் இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது நமக்கு கிடைத்த வெற்றியே !
-------------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் துறையை IT \Modernisation திட்டத்தின் கீழ் நவீனப்படுத்த ரூபாய் 1400 கோடி ஒதுக்கீடு .இதன்மூலம் நாட்டிலுள்ள 1.29 லட்சம் BO களில் பணிபுரியும் BPM களுக்கு டெக்னாலஜி தீர்வு கிடைக்கும் என்றும் -BO களின் தரம் அதிகரிக்கும் என்றும் நமது அமைச்சர் அவர்கள்  DARPAN அறிமுக விழாவில் குறிப்பிட்டுள்ளார் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட GDS ஒன்லைன் முடிவுகள் நேற்று அதிகாரபூர்வமாக வெளிடப்பட்டுள்ளன .தேர்வான அனைவரும் பெற்ற மதிப்பெண்களை சராசரியாக 98 விழுக்காடுகள் .அதாவது பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 490 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, December 22, 2017

                                                   முக்கிய செய்திகள் 
RICT பெயர் மாறுகிறது -இனிமேல்   DARPAN ஆகிறது        
 (Digital Advancement of Rural Post Office for A New India)  நேற்று இதை தொடங்கி வைத்து பேசிய நமது அமைச்சர் மான்புமிகு மனோஜ் சின்கா கிராப்புறங்களில் அஞ்சல் சேவையின் தரத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டஅளவு நிதி சேர்த்தலும் நிறைவேறும் என்றார் 
-------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அசைய சொத்து மதிப்புகளை 31.1.2018       குள் தாக்கல் செய்ய வேண்டுமாம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------.
தமிழகத்தில் நடைபெற்ற GDS ஆன்லைன் தேர்வு முடிவுகள் நேற்று தேர்வான நபர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் பல தளத்தில் இருந்து வந்தன .தேர்வு செய்யப்பட்ட நபருக்கு தகவல் SMS   மூலம் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரம் கழித்துதான் சம்பந்தப்பட்ட  APPOINTING AUTHORITY க்கு தெரிவிக்கப்படும் .நேற்று வந்த தகவல் உண்மையாக இருப்பின் இன்று தெரிந்துவிடும் .
------------------------------------------------------------------------------------------------------------------------     GDS கமிட்டி பரிந்துரைகள் அடுத்த வாரம் மந்திரிசபையில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது .அப்படி எடுக்கப்பட்டால் அதற்கடுத்த வாரமே  ஒப்புதல் கிடைக்கவும் சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாக தலைநகர் செய்திகள் கூறுகின்றன .
------------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை கோட்ட சங்கத்தின் 2018 டைரி பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன .ஆரம்பத்தில் (2007 ல்) 200 எண்ணிக்கையில் தொடங்கி இன்று 450  யை தொட்டிருக்கிறது .ஒத்துழைப்பு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, December 21, 2017

                                                   முக்கிய செய்திகள் 
SSC அறிவித்திருந்த அஞ்சல் எழுத் தருக்கான விண்ணப்ப தேதி 20.12.2017 என்பது 27.12.2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .முன்னதாக .தவறவிட்டவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
நமது மத்திய சங்க செயற்குழு பீகார் -பாட்னாவில் பெப்ருவரி 2018 -27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறுகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------
அனாமலி கமிட்டிக்கு NJCM எழுதியுள்ள பதில் 
குறைந்தபட்ச ஊதியம் --இதை நிர்ணயம் செய்ததில் DR.அஃராய்டு பார்முலா முற்றிலுமாக பின்பற்றப்படாமல் விலகி சென்றுள்ளது .
ஆண்டு ஊதிய உயர்விலும் எல்லா நிலைகளிலும் 3% பின்பற்றப்படவில்லை 
அலவன்ஸ் குறித்த அமுலாக்க தேதி என்பது 01.01.2016 முதல் இருக்க வேண்டும் 
01.01.2016 கான பஞ்சபடி வழங்கப்பட்டிருக்க வேண்டும் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
2015 கான PA /SA தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5054 பேருக்கான மாநில ஒதுக்கீடு வெயிடப்பட்டுள்ளது .தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட பெயர்களில் பெரும்பாலான பெயர்கள் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களாக தெரிகிறது .நிறுத்திவைக்கப்பட்ட தபால்காரர் தேர்வை இது நினைவுபடுத்துகிறது .
 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, December 20, 2017

அன்பார்ந்த தோழர்களே !
                                        NELLAI NFPE- II என்ற புதிய மற்றும் இரண்டாவது Whatsapp குரூப் நமது கோட்டசங்கத்தின் சார்பாக துவக்கப்பட்டுள்ளது .மீதமுள்ள தோழர்கள் அனைவரும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் .தொடர்ந்து தங்கள் ஆதரவுகளை முழுமையாக தந்தருளும் படி கேட்டு கொள்கிறோம் .
                                         பணிநிறைவு வாழ்த்துக்கள் 
இன்று(20.12.2017 ) தன் விருப்ப ஓய்வில் செல்லும் தோழர் வெங்கட்ராமன் supervisor SBCO திருநெல்வேலி HO அவர்களை நெல்லை NFPE வாழ்த்துகிறது .
                                                  டைரி 2018 
இந்த ஆண்டின் டைரி தயாரிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது .இந்தஆண்டு புதிதாக SBCO NFPE தோழர்களும் இடம்பெறுகிறார்கள் .ஏற்கனவே PSD திருநெல்வேலி நம்மோடு இனைந்து பணியாற்றுகிறார்கள் .இந்த பரந்த ஒற்றுமை தொடர விரும்புகிறோம் .
                                                   29.12.2017 சென்னை தர்ணா நெல்லையில் இருந்து 10 தோழர்கள் கலந்து கொள்கிறார்கள் 
                                               --------------------------------------------------
                              கோடைக்கால சுற்றுலா 
சிம்லா -டெல்லி -ஆக்ரா -குலுமணாலி சுற்றுலா 14.05.2018 முதல் 12 நாட்கள் 
                   -------------------------------------
வடகிழக்கு மாநிலங்கள் டார்ஜிலிங் கொல்கத்தா சுற்றுலா மே மாதம் இருக்கிறது .குடும்பத்தோடு செல்ல விரும்புகிறவர்கள் தோழர் K.செல்ல கண்ணன் அவர்களை நேரிடையாக தொடர்புகொள்ளலாம் 9894481344--9443157359 
                                                --------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, December 18, 2017

                                                               முக்கிய செய்திகள் 
கேடர் சீரமைப்பிற்க்கான இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் பணி மாநில நிர்வாகத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளது .இந்த முறை சீனியாரிட்டி நிர்ணயம் செய்வதற்கு ஊழியர்கள் நியமனத்தின் போது அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்த  ஆண்டில் நிர்ணயிக்கப்படுகிறது (Marks Secured for the selection of PA Post ) அதனால் தான் நமது கோட்டத்தில் RULE 38 யில் வந்த ஊழியர்களின் பட்டியல் -விவரங்கள் தனியாக கோரப்பட்டிருந்தன .அநேகமாக இந்தமாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என்று தெரிகிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் எழுத்தர் -தபால் காரர் -MTS இவர்களுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியினை  உயர்த்துவதற்கான வரைவு திட்டத்தை அஞ்சல் வாரியம் அளித்துள்ளது .இதற்கான ஆலோசனைகள் /கருத்துக்களை வழங்குவோர் 30 நாட்களுக்குள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .கருத்துக்களை Asst Director (SPN) 
Deartment of Posts Dak Bhawan Sansad Marg New Delhi -11001 என்ற முகவரிக்கு அனுப்பவும் .கல்வி தரத்தை உயர்த்தும் போது அதற்கு ஈடாக சம்பள உயர்வு இருப்பது தான் சரியாக இருக்கமுடியும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
IPPB க்கு நமது பகுதியில் இருந்து Deputation கேட்டிருப்பது ஏற்புடையது தானா ? என்பது குறித்து நமது மத்திய சங்கத்தின் நிலைப்பாட்டை தெரிந்த பின் நமது கருத்துக்களை பதிய வேண்டிய அவசியம் இருக்கிறது .பொறுத்திருந்து பார்ப்போம் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 

Saturday, December 16, 2017

                                                     முக்கிய செய்திகள் 
IPPB க்கு ஆள் கேட்கிறது அஞ்சல் வாரியம் -டெபுடேஷன் மற்றும் பாரின் சர்வீஸ் அடிப்படையில் ஊழியர்கள் அனுப்பப்படவிருக்கிறார்கள்முதற்கட்டமாக 500 ரெகுலர் ஊழியர்களும் 650 GDS ஊழியர்களும் IPPB க்கு  அனுப்ப படுகிறார்கள் .கீழ்கண்ட அறிவிப்புகள் இதோ 
   This is about deputation of 500 regular employees and 650 GDS to IPPB. The schedule of application is as below:

The important dates are as follows: Activities

Dates
On-line registration including Edit/ Modification of Application by candidates
December 15, 2017 to January 05, 2018
Online Payment of Application Fees
December 15, 2017 to January 05, 2018
Download of Admit cards for online examination
January 12, 2018
Date of Online Examination (tentative)
January 20, 2018 – for Manager (Area Sales) and for Asst Manager (Area Operations)
January 21, 2018 – for Territory Officer


The link to access the application is as follow:

http://ibps.sifyitest.com/ippbdopnov17/


Click here to view - Advertisement for deputation from DoP 

Click here to view - Notification - Deputation to IPPB 

அன்பார்ந்த நெல்லை NFPE சங்க உறுப்பினர்களே !
  நமது கோட்ட சங்கம் சார்பாக NELLAI NFPE என்கிற வாட்ஸாப்ப் கடந்த 08 .01.2016 முதல் சிறப்பாக செயல்பட்டுவருகிறது .ஆரம்பத்தில் அஞ்சல் மூன்று உறுப்பினர்கள் மற்றும் இதர கோட்ட நண்பர்கள் இதில் பங்கேற்றனர் .பல தோழர்களின் வேண்டுகோள்களின் படி NELLAI NFPE யில் நமது கோட்ட NFPE உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றால் மட்டும் தான் சுதந்திரமாக நமது சங்க செய்திகள் -குறைகள் -விமர்சனங்கள் இவைகளை பதிவிட முடியும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உறுப்பினர் அல்லாத பல நண்பர்களை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .மேலும் புதிதாக சேர்க்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது .வாட்ஸாப்ப் குரூப்பில் மொத்தம் 256 பேரைத்தான் சேர்க்க முடியும் .நமக்கோ P 3 சங்கத்தில் 260 P 4 சங்கத்தில் 130 NFPE SBCO என சேர்த்தால் 400 யை தாண்டுகிறது .NELLAI NFPE 2 என்ற பெயரில் இதே தகவல்களை தாங்கிய துணை வாட்ஸாப்ப் குரூப் தொடங்க உள்ளோம் என்ற நல்ல செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன் தவறுதலாக நமது உறுப்பினர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அதற்கு நான் உங்களிடம் என் வருத்தத்தை தெரிவித்து கொண்டு புத்தாண்டுக்குள் நமது கோட்ட NFPE உறுப்பினர்கள் 400 பேரையும் இணைத்துக்கொள்வோம் என்ற உறுதியை கூறி கொள்கிறேன் .உங்கள் ஆதரவிற்கும் -ஒத்துழைப்பிற்கும் நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நன்றி 

Friday, December 15, 2017

                            மகிழ்ச்சி செய்தி 
அன்பார்ந்த தோழர்களே !
GDS கமிட்டி அறிக்கைக்கு நிதி அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது .கமிட்டி மீதான அஞ்சல் வாரியம் என்ன பரிந்துரைத்ததோ அதை அப்படியே நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது மிக பெரிய முன்னேறமாகும் .திங்கள கிழமை இந்த அறிக்கை மத்திய அமைச்சக ஒப்புதலுக்கு செல்கிறது .எப்படியும் ஜனவரி இறுதிக்குள் GDS கமிட்டி அமுலாகும் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                  முக்கிய செய்திகள் 
குறைந்தபட்ச சம்பளஉயர்வு மற்றும் பிட்மென்ட் பார்முலா மாற்றம் இவைகள் அனாமலி வரம்பிற்குள் வராது என DOPT கைவிரிப்பு -இந்நிலையில் இது குறித்து விவாதிக்க புது டெல்லியில் இன்று (14.12.2017) NJCM STAFFSIDE  கூட்டம் நடைபெறுகிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
புதிய பென்ஷன் திட்டத்தில் இருந்து ரயில்வே துறைக்கு விலக்கு அளிக்க ரயில்வே சங்கம் மீண்டும் வலியுறுத்தல் 
திசை மாறுகிறதாமத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை ? 
 In this connection,we  desires to reiterate that ‘Pension is very sensitive issue so far as Railways is concerned, due to the reason that the Railway employees have been working at remote places, stations located in jungle areas and have been facing all odds foregoing basic necessities of life, similar to the Defence Forces Personnel, safeguarding the Nation’s Borders, and are involved fully in ensuring uninterrupted flow of Railway Traffic. The Railway employees in their day-to-day working face war like situations to ensure that movement of trains is not adversely affected under any circumstances and in the process they get killed on duty as confirmed by the High Level Safety Review Committee (BLSRC) headed by Shri Anil Kakodkar (Chapter 11-2.3).
--------------------------------------------------------------------------------------------------------------குளிர் கால கூட்ட தொடரில் ஏழைகளை நடுங்க வைக்கும் FRDI மசோதா ?
\வங்கி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதிச் சட்டம், 2017-ஐ வரும் குளிர்காலக் கூட்டத்தில் கொண்டு வர இருப்பதால் முன்பு வங்கி கணக்கில் டெபாசிட் செய்த பணத்திற்கு என்ன மாதிரியான பாதுகாப்புகள் இருந்தனவோ அதில் இருந்து எந்த மாற்றம் இல்லை என்று நிதி அமைச்சகம் சென்ற வாரம் கூறி இருக்கிறது  
எனவே முன்பு இருந்தது போன்று பணம் டெபாசிட் செய்துள்ளவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தில் எந்தக் குறைகளும் மாற்றமும் இல்லாமல் எப்ஆர்டிஐ மசோதாவின் கீழ் பணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Thursday, December 14, 2017

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்து கொடுக்கும் என்பது இது தானா ?

அஞ்சலக ஆய்வாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தகுதி ஊதியம் ரூபாய் 4200 இல் இருந்து ரூபாய் 4600 ஆக 01.01.2006 முதல் உயர்த்தப்பட்டதை நாம் ஏற்கனேவே வெளியிட்டிருந்தோம் 
இதில் தகுதி ஊதியம் மட்டும் உயர்த்துவதா ?அல்லது தகுதி ஊதியதிற்க்கான ஊதியத்தையே மாற்றி நிர்ணயம் செய்வதா என்ற வாத -பிரதி வாதங்கள் முடிக்கப்பட்டு அரியஸ் தொகை கணக்கிடப்பட்டுள்ளதாம் .அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் வரை ஒவ்வொரு ASP /அன்றைய IP களுக்கு கிடைக்கிறதாம் .நிலுவை தொகையை கணக்கிட்டு பார்த்த பல தலைமை அஞ்சலக அதிகாரிகளுக்கு தலை சுற்றுகிறதாம் -
.ஊதியக்குழு இல்லாமல் பணியில் இருக்கும் ஒரு பிரிவினர் பல லட்சங்களை நிலுவையாக பெறுவது அஞ்சல் துறையில் இதுதான் முதல் முறையாம்.
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, December 13, 2017

                                                             செய்திகள் 
பல லட்சங்களை தாண்டும் அரியர்ஸ் தொகை 
அஞ்சலக ஆய்வாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தகுதி ஊதியம் ரூபாய் 4200 இல் இருந்து ரூபாய் 4600 ஆக 01.01.2006 முதல் உயர்த்தப்பட்டதை நாம் ஏற்கனேவே வெளியிட்டிருந்தோம் .24.10.2017 தேதியிட்ட உத்தரவு படி கணக்கிட்டு பார்த்ததில் ஒவ்வொரு ASP தோழர்களுக்கும் நிலுவை தொகையாக பல லட்சங்கள் வருகிறதாம் .ஊதியக்குழு இல்லாமல் பணியில் இருக்கும் ஒரு பிரிவினர் பல லட்சங்களை நிலுவையாக பெறுவது அஞ்சல் துறையில் இதுதான் முதல் முறையாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நமது  கோட்டத்திற்கு RULE 38 கீழ் பணிமாற்றம் பெற்று வந்த ஊழியர்களின் சீனியாரிட்டி நிர்ணயிப்பதற்க்காக நேற்று கோட்ட அலுவலகத்தில் இருந்து மூன்று தலைமை அஞ்சலகங்களுக்கும் பட்டியல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது .தோழர்கள் தங்கள் தகவல்களை சரிபார்த்து கொள்ளளவும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
                                        மாநில சங்க தகவல் 
12.12.2017 அன்று நமது தென்மண்டல இயக்குனர் அவர்களை மாநில சங்கத்தின் தென் மண்டல நிர்வாகிகள் மாநில செயலருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது மாநில சங்க கவனத்திற்கு நம்மால் கொண்டு சென்ற CPC சம்பந்தமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக மாநில செயலர் தெரிவித்திருந்தார் .மேலும் விரைவில் தென் மண்டல அளவிலான கோட்ட /கிளை செயலர்களின் கூட்டம் நடைபெறும் என்ற தகவல்களையும் தந்துள்ளார்கள் .அதற்காக நெல்லை கோட்டத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------------
                


Monday, December 11, 2017

 கடையடைப்பு நடத்துகிற காலமல்ல -படையெடுப்பு நடத்துகிற காலம் இது -சம்மேளன அறைகூவல் வெல்லட்டும் 

NFPE சம்மேளன அறைகூவலை 
ஏற்று இரண்டாவது கட்ட போராட்டம் !
சென்னையை நோக்கி புறப்படுவீர் ! 
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நமது சம்மேளன அறை கூவலை ஏற்று நமது இலாக்காவில் தீர்க்கப்பட வேண்டிய 

GDS ஊதியக்குழு உடன் அமல் படுத்துதல், உறுப்பினர் சரிபார்ப்பு, கேசுவல் ஊழியர் பிரச்னைகள்,  வாரத்திற்கு ஐந்து நாள் வேலை, CSI/RICT பிரச்னைகளில் நமது கோரிக்கைகள் ஏற்க வேண்டுதல், கேடர் சீரமைப்பில் நமது  தரப்பு கோரிக்கையை ஏற்க வேண்டுதல்,புதிய பென்சன் திட்டம் ரத்து செய்தல், 7 ஆவது ஊதியக்குழு கோரிக்கைகள், காலிப் பணியிடங்களை உடனை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளையும் கோரிக்கைகளாக உள்ளடக்கி, இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் உள்ள CPMG அலுவலகங்கள் முன்பாக 
===================================
எதிர்வரும் டிசம்பர் திங்கள் 20 ந்தேதி
மாபெரும் முழு நாள் தார்ணா போராட்டம்
நடைபெற உள்ளது. 
===================================
தமிழகத்தில் சென்னையில் அண்ணா சாலை CPMG அலுவலக வளாகத்தில் எதிர்வரும் 20.12.2017 அன்று காலை 10.00 மணி தொடங்கி மாலை 5.00 மணிவரை NFPE ன் அனைத்து உறுப்பு சங்கங்களையும் உள்ளடக்கி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற ஐந்து நாட்கள் தொடர் தார்ணாவுக்கு முன்னதான இந்தப் போராட்டம் மிகப் பெரிய வீச்சினை ஏற்படுத்திட வேண்டும்.
புறப்படுவீர் ! போராட்ட களம் நோக்கி !
இது அநீதிக் கெதிரான போராட்டம் !
நம் ஜீவாதாரக் கோரிக்கைகளை 
வென்றெடுக்கப் போராட்டம்! 
NFPE -நெல்லை 


Saturday, December 9, 2017

                                            முக்கிய செய்திகள் 
1.அஞ்சல் துறை அறிவித்துள்ள அடுத்த காலத்திற்கான   தங்கபத்திரம் விற்பனை 2017--டிசம்பர் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது .ஒருகிராம் ரூபாய் 2890 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .வழக்கம் போல் ஒவ்வொரு கோட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்க பட்டிருக்கும் .வெளி வாடிக்கையாளர்களை அனுகி தங்க பத்திரங்களை விற்கும் ஆரோக்கியமான முயற்சிகளை மேற்கொள்ளவும் -இதற்கான விரிவான விளம்பரங்களை மேற்கொண்டு இலக்கை எட்ட அந்தந்த கோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்புகள் .
2.ஆதார் -பான் கார்டுகளை சேமிப்பு கணக்குகளுடன் இணைக்க காலவரம்பு 31.03.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
3.CSI அமுலாக்கத்தில் நிர்வாகம் அதிக முனைப்புகளை காட்டி வருகிறது .எட்டு அலுவலகங்களுக்கு ஒருவர்என்ற அடிப்படையில்   யூசர் -சேம்பியன் பயிற்சிகளை 9 நாட்கள் மதுரையில்  11.12.2017 முதல் தொடங்கப்படுகிறது .
4.ஜனவரி 2018 பஞ்சப்படி 2 சதமாக இருக்கும் என தெரிகிறது .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, December 8, 2017

வரிகள் குறையவில்லை -
வலியும் தீரவில்லை -
வருமான வரி உச்சவரம்பு மாற்றத்திற்க்கான 
வழியும் தெரியவில்லை 

 தனிமனித வருமான வரி உச்சவரம்பை உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர்கள் இன்னும் வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் .ஆண்டுக்கு ஒருமுறை ஒரு (SEASONAL ) பருவகால கோரிக்கையை போல மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன் மட்டுமே எழுப்பப்படும் கோரிக்கையாக இருந்துவிடக்கூடாது .தனிமனித வரி உச்சவரம்பை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தவேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ள நிலையில் இந்த பிரச்சினையில் மத்திய அரசு மனம் இறங்குமா ? தன் மௌனத்தை கலைக்குமா ?என்று தெரியவில்லை .இதில் மிக அதிகமாக பாதிக்கப்படும் பகுதி யாரென்று பார்த்தால் மாத சம்பளம் பெறும் நடுத்தர அரசு ஊழியர்கள் தான் என்பதுதான் மிக கொடுமையான ஒன்று .அரசு ஊழியர்களை பொறுத்தமட்டில் வருமான வரி மட்டுமல்ல தொழில் வரி போன்ற பல சுமைகள் நம் தோழில் சுமப்பதை ஏற்று கொண்டு பழகிவிட்டோம் .நாம் வரி ஏய்ப்புக்கு முயலவில்லை -வரி பாதுகாப்பிற்கு குரல் கொடுக்கிறோம் -
முட்டினாலே திறக்கப்படாத கதவுகள் எங்கே 
தட்டினால் திறக்க போகிறது ?
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, December 7, 2017

                                           நெல்லை கோட்ட செய்திகள்
HSG II OFFCIATING நேற்று இரண்டு இடங்களுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது .PALAAYAMKOTTAI BPC க்கு தோழர் P. சுப்ரமணியன் அவர்களும் SPM ALWARKURICHI க்கு தோழர் R.V.தியாகராஜ பாண்டியன் அவர்களுக்கும் OFFICATING வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது .இன்னும் விடுபட்ட இடங்களுக்கும் தோழர்களின் விருப்ப விண்ணப்பங்கங்களின் அடிப்படையில் OFFICIATING வாய்ப்புகள் வழங்க கோட்ட நிர்வாகத்தை கேட்டு கொள்கிறோம் .
கண்காணிப்பாளர் அவர்களுடன் நேற்றைய சந்திப்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது .
1.மாவட்ட ஆட்சியர் அவர்களின் சமீபத்திய உத்தரவான  தினக்கூலி ரூபாய் 320 என்பதனை நமது அலுவலகங்களில் பணியாற்றும் OUTSIDER அனைவருக்கும் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது .
2.MS UNIVERSITY UPS பேட்டரிகளை விரைந்து  மாற்றி கொடுத்ததற்கு நன்றிகளை தெரிவித்தோம் .
3.கடந்த 22.10.2017 அன்று மின்னல் தாக்கி முற்றிலும் சேதமடைந்த முக்கூடல் அலுவலக NET இனைப்பை விரைந்து சீர்படுத்தவும் -இன்றுவரை அனைத்து பணிகளையும் அடுத்த அலுவலகம் தேடி சென்று சிரமப்படும் முக்கூடல் ஊழியர்களின் சிரமங்களை சீர்செய்யவும் கேட்டு கொள்கிறோம் .
                                              வாழ்த்துக்கள் 
பஞ்சாப் மாநிலம் லக்னோ நகரில் நடந்த அகிலஇந்திய அஞ்சல் ஊழியர்களுக்கான வலு தூக்கும் பிரிவில் தங்கப்பதக்கமும் பளு தூக்கும் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்ற நம் தோழர் மணிகண்டன் PA திருநெல்வேலி HO அவர்களை வாழ்த்துவோம் .நேற்று அவர்களை நமது கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்தியது நமக்கெல்லாம் பெருமை .தொடரட்டும் நெல்லை கோட்ட வீரர்களின் வெற்றி பயணம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
                                      

Wednesday, December 6, 2017

                              நெல்லை கோட்ட சங்க புத்தாண்டு டைரி 2018
நமது கோட்ட சங்க வேண்டுகோளை ஏற்று நமது டைரியில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை தோழர் /தோழியர்கள் ஆர்வத்தோடு தெரிவித்துவருகின்றனர் .மேலும் நமது மூத்த தோழர் N .கண்ணன் அவர்கள் கொடுத்த ஆலோசனை ஒன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .இன்னும் நமது இயக்கத்தில் -நமது கோட்டத்தில் பல திறமைமிக்க படைப்பாளிகள் இருக்கிறார்கள் .தொழிற்சங்கம் சம்பந்தமான உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறோம் -
-------------------------------------------------------------------------------------------------------------------------
     இந்திய தபால் துறையின் சிறப்பான சேவை -துக்ளக் இதழில் மூத்த பத்திரிக்கையாளர் திரு .குருமூர்த்தி அவர்களின் புகழாரம் 
கடந்த 01.11.2017 துக்ளக் இதழில் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் நமது அஞ்சல் சேவைகளின் செயல்பாடுகளை குறித்து பாராட்டுகளை தெரிவிக்கும் வண்ணம் ஒரு கட்டுரையை தீட்டியிருந்தார் .இது வாட்ஸாப்ப் -மற்றும் முகநூலில் வந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள் .இது குறித்து நமது துறையை சாராத நண்பர் என்னிடம் அந்த கட்டுரையின் நகலை கொடுத்து சொன்ன விஷயம் என்னை மெய்மறக்க செய்தது .பொதுவாக ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் அவ்வளவு எளிதில் எதையும் -யாரையும் பாராட்ட மாட்டார் .இன்று அவரே அஞ்சல் துறை குறித்து பாராட்டி எழுதியிருப்பது அஞ்சல் துறையின் ஊழியர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் பெருமை -உயர்விருது என்றார் .இதை நமது அதிகாரிகள் அங்கீகரிப்பார்களா ?
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, December 5, 2017

அன்பார்ந்த தோழர்களே ! நெல்லை கோட்ட சங்கம் சார்பாக வெளியிடப்படும் 2018 புத்தாண்டு டைரியில் உங்கள் தொலைபேசி எண்களில் திருத்தம் -மாற்றங்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .இது பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது --உங்கள் படைப்புகளும் வரவேற்க படுகிறது --SKJ 

                                   நெல்லை கோட்ட செய்திகள் 
GDS கமிட்டி இன்றைய நிலை ---
GDS கமிட்டி குறித்த கோப்புகள் DEPARTMENT OF PERSONNE L& TRAINING க்கு 01.12.2017 அன்று அனுப்பப்பட்டுள்ளது .DOPT ஒப்புதலுக்கு பிறகு நிதியமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பப்படும் .2018 ஜனவரியிலாவது  GDS கமிட்டி அமுலாகும் என்ற எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது .
-----------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் நிலுவையில் உள்ள Increment for bunching of stages குறித்து இலாகாவின் 09.10.2017 தேதியிட்ட கடிதங்களையும் அதன் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட சில கோட்டங்களின் உத்தரவையும் கோட்ட அலுவலகத்தில் நேற்று சமர்பித்துள்ளோம் .ஓரிரு நாட்களில் பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு உரிய உத்தரவு கிடைக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு -ஜெய்ப்பூர் வர விரும்பும் தோழர்களின் கவனத்திற்கு .
நெல்லையில் இருந்து 05.03.2017 அன்று புறப்பட்டு சென்னையில் இருந்து 06.08.2017 அன்று இரவு ஜெய்ப்பூர் விரைவுவண்டியில் சென்று 08.03.2017 அன்று ஜெய்ப்பூர் செல்கிறோம் .
வரும்பொழுது 11.03.2017 அன்று ஜெய்ப்பூரில் இருந்துகிளம்பி 13.03.2017அன்று சென்னைக்கும் 14.03.2017 அன்று நெல்லைக்கு வருகிறோம் .பயண கட்டணம் 900+900+=1800 
சார்பாளர் கட்டணம் 1500 தனி .
வரவிரும்பும் தோழர்கள் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் SK .பாட்சா அவர்களிடம் ரயில் கட்டணத்தை உடனே செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் ..SK .பாட்சா 
-------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, December 4, 2017

                         GDS குறித்த மர்மங்கள் விலகுவது எப்போது ?

நாடு முழுவதிலும் 8153 GDS பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றன .ஏற்கனவே தமிழகத்தில் ஆன்லைன் மூலம் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஆகஸ்ட் 2017 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டும் இன்று வரை அதன்முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏன்  என்று தெரியவில்லை .
GDS நியமனங்களில் இந்த இழுத்தடிப்பிற்கு என்ன காரணம் ?
GDS கமிட்டி இன்றைய நிலை என்ன ? நிதியமைச்சகத்திற்கு சென்ற கோப்புகள் என்னவானது ?
GDS உறுப்பினர் சரிபார்ப்பு நடவடிக்கைகள் ரத்து செய்ய படவேண்டிய அவசியம் என்ன ? 
 வாழ்க்கையின் 
அடித்தட்டில் ஜீவிக்கும் GDS பிரச்சினைகளில் அரசு காட்டும் அலட்சியம் தீர்வது எப்போ ? எப்போ ?
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 




 



Friday, December 1, 2017

அன்பார்ந்த தோழர்களே !
  நேற்று 30.11.2017 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் இருந்து ......
1.2015 முதல் பணியில் சேர்ந்த எழுத்தர்களுக்கு conformation உத்தரவு வழங்குவது குறித்து பேசுகையில் சுமார் 29 ஊழியர்களுக்கு நிரந்தர உத்தரவு வழங்கப்படவில்லை என்றாலும் இதுவரை சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனே conformation உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கப்பட்டது 
2.C கிளாஸ் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற UPS பேட்டரிகள் படிப்படியாக மாற்றப்படும் என்றும் தற்சமயம் 10 அலுவலகங்களுக்கு புதிய பேட்டரிகள் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
3.HSG II மற்றும் HSG I OFFICIATING யில் முதற்கட்டமாக இரண்டு பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .விடுபட்ட ஊழியர்களுக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
4.சமீபத்தில் வந்த உத்தரவுப்படி SPEEDPOST வேலைநேரத்தை நீட்டிப்பதில் தனியாக அதற்கென PA ஒருவரை வேலைநேரத்தை மாற்றி பணியாற்ற அனுமதிக்கப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது .
5.வேலை பளு அதிகமுள்ள அலுவலகங்களில் இருந்து டெபுடேஷன் தவிர்க்கப்படும் .( மூன்றடைப்பு .பொட்டல் புதூர்  வள்ளியூர் )
6.அம்பாசமுத்திரம் ASP குறித்த புகார்களை SSP அவர்களே நேரடியாக விசாரிப்பதாகவும் OFFICIATING பிரச்சினையில் கோட்டம் முழுவதும் ஒரே முறை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது 
7.மாவட்ட ஆட்சியரின் உத்தரவு படி குறைந்தபட்ச கூலி ரூபாய் 320 OUTSIDER களுக்கு வழங்க அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
8.விடுபட்ட MACP பதவி உயர்வு குறித்து மறு DPC யில் சேர்க்கப்படவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
மற்றவை எழுத்துபூர்வமான பதில் வந்த பிறகு ...
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை