...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 6, 2017

                              நெல்லை கோட்ட சங்க புத்தாண்டு டைரி 2018
நமது கோட்ட சங்க வேண்டுகோளை ஏற்று நமது டைரியில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை தோழர் /தோழியர்கள் ஆர்வத்தோடு தெரிவித்துவருகின்றனர் .மேலும் நமது மூத்த தோழர் N .கண்ணன் அவர்கள் கொடுத்த ஆலோசனை ஒன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .இன்னும் நமது இயக்கத்தில் -நமது கோட்டத்தில் பல திறமைமிக்க படைப்பாளிகள் இருக்கிறார்கள் .தொழிற்சங்கம் சம்பந்தமான உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறோம் -
-------------------------------------------------------------------------------------------------------------------------
     இந்திய தபால் துறையின் சிறப்பான சேவை -துக்ளக் இதழில் மூத்த பத்திரிக்கையாளர் திரு .குருமூர்த்தி அவர்களின் புகழாரம் 
கடந்த 01.11.2017 துக்ளக் இதழில் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் நமது அஞ்சல் சேவைகளின் செயல்பாடுகளை குறித்து பாராட்டுகளை தெரிவிக்கும் வண்ணம் ஒரு கட்டுரையை தீட்டியிருந்தார் .இது வாட்ஸாப்ப் -மற்றும் முகநூலில் வந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள் .இது குறித்து நமது துறையை சாராத நண்பர் என்னிடம் அந்த கட்டுரையின் நகலை கொடுத்து சொன்ன விஷயம் என்னை மெய்மறக்க செய்தது .பொதுவாக ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் அவ்வளவு எளிதில் எதையும் -யாரையும் பாராட்ட மாட்டார் .இன்று அவரே அஞ்சல் துறை குறித்து பாராட்டி எழுதியிருப்பது அஞ்சல் துறையின் ஊழியர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் பெருமை -உயர்விருது என்றார் .இதை நமது அதிகாரிகள் அங்கீகரிப்பார்களா ?
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment