...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 13, 2017

                                                             செய்திகள் 
பல லட்சங்களை தாண்டும் அரியர்ஸ் தொகை 
அஞ்சலக ஆய்வாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தகுதி ஊதியம் ரூபாய் 4200 இல் இருந்து ரூபாய் 4600 ஆக 01.01.2006 முதல் உயர்த்தப்பட்டதை நாம் ஏற்கனேவே வெளியிட்டிருந்தோம் .24.10.2017 தேதியிட்ட உத்தரவு படி கணக்கிட்டு பார்த்ததில் ஒவ்வொரு ASP தோழர்களுக்கும் நிலுவை தொகையாக பல லட்சங்கள் வருகிறதாம் .ஊதியக்குழு இல்லாமல் பணியில் இருக்கும் ஒரு பிரிவினர் பல லட்சங்களை நிலுவையாக பெறுவது அஞ்சல் துறையில் இதுதான் முதல் முறையாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நமது  கோட்டத்திற்கு RULE 38 கீழ் பணிமாற்றம் பெற்று வந்த ஊழியர்களின் சீனியாரிட்டி நிர்ணயிப்பதற்க்காக நேற்று கோட்ட அலுவலகத்தில் இருந்து மூன்று தலைமை அஞ்சலகங்களுக்கும் பட்டியல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது .தோழர்கள் தங்கள் தகவல்களை சரிபார்த்து கொள்ளளவும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
                                        மாநில சங்க தகவல் 
12.12.2017 அன்று நமது தென்மண்டல இயக்குனர் அவர்களை மாநில சங்கத்தின் தென் மண்டல நிர்வாகிகள் மாநில செயலருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது மாநில சங்க கவனத்திற்கு நம்மால் கொண்டு சென்ற CPC சம்பந்தமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக மாநில செயலர் தெரிவித்திருந்தார் .மேலும் விரைவில் தென் மண்டல அளவிலான கோட்ட /கிளை செயலர்களின் கூட்டம் நடைபெறும் என்ற தகவல்களையும் தந்துள்ளார்கள் .அதற்காக நெல்லை கோட்டத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------------
                


0 comments:

Post a Comment