...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 8, 2017

வரிகள் குறையவில்லை -
வலியும் தீரவில்லை -
வருமான வரி உச்சவரம்பு மாற்றத்திற்க்கான 
வழியும் தெரியவில்லை 

 தனிமனித வருமான வரி உச்சவரம்பை உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர்கள் இன்னும் வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் .ஆண்டுக்கு ஒருமுறை ஒரு (SEASONAL ) பருவகால கோரிக்கையை போல மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன் மட்டுமே எழுப்பப்படும் கோரிக்கையாக இருந்துவிடக்கூடாது .தனிமனித வரி உச்சவரம்பை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தவேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ள நிலையில் இந்த பிரச்சினையில் மத்திய அரசு மனம் இறங்குமா ? தன் மௌனத்தை கலைக்குமா ?என்று தெரியவில்லை .இதில் மிக அதிகமாக பாதிக்கப்படும் பகுதி யாரென்று பார்த்தால் மாத சம்பளம் பெறும் நடுத்தர அரசு ஊழியர்கள் தான் என்பதுதான் மிக கொடுமையான ஒன்று .அரசு ஊழியர்களை பொறுத்தமட்டில் வருமான வரி மட்டுமல்ல தொழில் வரி போன்ற பல சுமைகள் நம் தோழில் சுமப்பதை ஏற்று கொண்டு பழகிவிட்டோம் .நாம் வரி ஏய்ப்புக்கு முயலவில்லை -வரி பாதுகாப்பிற்கு குரல் கொடுக்கிறோம் -
முட்டினாலே திறக்கப்படாத கதவுகள் எங்கே 
தட்டினால் திறக்க போகிறது ?
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment