...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 22, 2017

                                                   முக்கிய செய்திகள் 
RICT பெயர் மாறுகிறது -இனிமேல்   DARPAN ஆகிறது        
 (Digital Advancement of Rural Post Office for A New India)  நேற்று இதை தொடங்கி வைத்து பேசிய நமது அமைச்சர் மான்புமிகு மனோஜ் சின்கா கிராப்புறங்களில் அஞ்சல் சேவையின் தரத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டஅளவு நிதி சேர்த்தலும் நிறைவேறும் என்றார் 
-------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அசைய சொத்து மதிப்புகளை 31.1.2018       குள் தாக்கல் செய்ய வேண்டுமாம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------.
தமிழகத்தில் நடைபெற்ற GDS ஆன்லைன் தேர்வு முடிவுகள் நேற்று தேர்வான நபர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் பல தளத்தில் இருந்து வந்தன .தேர்வு செய்யப்பட்ட நபருக்கு தகவல் SMS   மூலம் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரம் கழித்துதான் சம்பந்தப்பட்ட  APPOINTING AUTHORITY க்கு தெரிவிக்கப்படும் .நேற்று வந்த தகவல் உண்மையாக இருப்பின் இன்று தெரிந்துவிடும் .
------------------------------------------------------------------------------------------------------------------------     GDS கமிட்டி பரிந்துரைகள் அடுத்த வாரம் மந்திரிசபையில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது .அப்படி எடுக்கப்பட்டால் அதற்கடுத்த வாரமே  ஒப்புதல் கிடைக்கவும் சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாக தலைநகர் செய்திகள் கூறுகின்றன .
------------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை கோட்ட சங்கத்தின் 2018 டைரி பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன .ஆரம்பத்தில் (2007 ல்) 200 எண்ணிக்கையில் தொடங்கி இன்று 450  யை தொட்டிருக்கிறது .ஒத்துழைப்பு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment