...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 16, 2017

அன்பார்ந்த நெல்லை NFPE சங்க உறுப்பினர்களே !
  நமது கோட்ட சங்கம் சார்பாக NELLAI NFPE என்கிற வாட்ஸாப்ப் கடந்த 08 .01.2016 முதல் சிறப்பாக செயல்பட்டுவருகிறது .ஆரம்பத்தில் அஞ்சல் மூன்று உறுப்பினர்கள் மற்றும் இதர கோட்ட நண்பர்கள் இதில் பங்கேற்றனர் .பல தோழர்களின் வேண்டுகோள்களின் படி NELLAI NFPE யில் நமது கோட்ட NFPE உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றால் மட்டும் தான் சுதந்திரமாக நமது சங்க செய்திகள் -குறைகள் -விமர்சனங்கள் இவைகளை பதிவிட முடியும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உறுப்பினர் அல்லாத பல நண்பர்களை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .மேலும் புதிதாக சேர்க்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது .வாட்ஸாப்ப் குரூப்பில் மொத்தம் 256 பேரைத்தான் சேர்க்க முடியும் .நமக்கோ P 3 சங்கத்தில் 260 P 4 சங்கத்தில் 130 NFPE SBCO என சேர்த்தால் 400 யை தாண்டுகிறது .NELLAI NFPE 2 என்ற பெயரில் இதே தகவல்களை தாங்கிய துணை வாட்ஸாப்ப் குரூப் தொடங்க உள்ளோம் என்ற நல்ல செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன் தவறுதலாக நமது உறுப்பினர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அதற்கு நான் உங்களிடம் என் வருத்தத்தை தெரிவித்து கொண்டு புத்தாண்டுக்குள் நமது கோட்ட NFPE உறுப்பினர்கள் 400 பேரையும் இணைத்துக்கொள்வோம் என்ற உறுதியை கூறி கொள்கிறேன் .உங்கள் ஆதரவிற்கும் -ஒத்துழைப்பிற்கும் நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நன்றி 

1 comment: