...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 11, 2017

 கடையடைப்பு நடத்துகிற காலமல்ல -படையெடுப்பு நடத்துகிற காலம் இது -சம்மேளன அறைகூவல் வெல்லட்டும் 

NFPE சம்மேளன அறைகூவலை 
ஏற்று இரண்டாவது கட்ட போராட்டம் !
சென்னையை நோக்கி புறப்படுவீர் ! 
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நமது சம்மேளன அறை கூவலை ஏற்று நமது இலாக்காவில் தீர்க்கப்பட வேண்டிய 

GDS ஊதியக்குழு உடன் அமல் படுத்துதல், உறுப்பினர் சரிபார்ப்பு, கேசுவல் ஊழியர் பிரச்னைகள்,  வாரத்திற்கு ஐந்து நாள் வேலை, CSI/RICT பிரச்னைகளில் நமது கோரிக்கைகள் ஏற்க வேண்டுதல், கேடர் சீரமைப்பில் நமது  தரப்பு கோரிக்கையை ஏற்க வேண்டுதல்,புதிய பென்சன் திட்டம் ரத்து செய்தல், 7 ஆவது ஊதியக்குழு கோரிக்கைகள், காலிப் பணியிடங்களை உடனை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளையும் கோரிக்கைகளாக உள்ளடக்கி, இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் உள்ள CPMG அலுவலகங்கள் முன்பாக 
===================================
எதிர்வரும் டிசம்பர் திங்கள் 20 ந்தேதி
மாபெரும் முழு நாள் தார்ணா போராட்டம்
நடைபெற உள்ளது. 
===================================
தமிழகத்தில் சென்னையில் அண்ணா சாலை CPMG அலுவலக வளாகத்தில் எதிர்வரும் 20.12.2017 அன்று காலை 10.00 மணி தொடங்கி மாலை 5.00 மணிவரை NFPE ன் அனைத்து உறுப்பு சங்கங்களையும் உள்ளடக்கி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற ஐந்து நாட்கள் தொடர் தார்ணாவுக்கு முன்னதான இந்தப் போராட்டம் மிகப் பெரிய வீச்சினை ஏற்படுத்திட வேண்டும்.
புறப்படுவீர் ! போராட்ட களம் நோக்கி !
இது அநீதிக் கெதிரான போராட்டம் !
நம் ஜீவாதாரக் கோரிக்கைகளை 
வென்றெடுக்கப் போராட்டம்! 
NFPE -நெல்லை 


0 comments:

Post a Comment