...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 31, 2018

   இன்று 31.03.2018 அன்று பணிநிறைவு பெறும் தோழர்களை வாழ்த்துகிறோம் 
நாள் 31.03.2018 
இடம் -வள்ளியூர் அஞ்சலகம் நேரம் மாலை 5 மணி 
 தோழர் E .சுப்ரமணியன் போஸ்ட்மாஸ்டர்SPM வள்ளியூர்  GRADE II 
பணியில் மிகுந்த ஈடுபாடு -நமது NFPE இயக்கத்திலும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியவர் .இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு சிறந்த ஆலோசகராக மிளிர்ந்தவர் .கண்டிப்பும் உண்டு கருணையும் உண்டு .அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம் .
தோழர் சங்கரநாராயணன் PA வள்ளியூர் -ஆரம்பத்தில் தனது பணியை GDS யில் இருந்து தொடங்கி தபால்காரராக வளர்ந்து இன்று PA என தன் நிலையை உயர்திக்கொண்டவர் .தென்பகுதி NFPE இயக்கத்திற்கு கிடைத்திட்ட நங்கூரம் .எந்த புயலுக்கும் அஞ்சாது உறுதி காத்தவர் .எல்லா மாநாடுகளிலும் கலந்து கொண்டு நமக்கு ஆதரவினை அளித்தவர் .அவர்களையும் நாம் வாழ்த்தி வணங்குகிறோம் 
தோழர் ஜெயக்குமார் பன்னிர் தாஸ் -வள்ளியூர் உப கோட்டத்தில் பல நீண்ட காலமாக மெயில் ஓவர்சியர் ஆக பணியாற்றியவர் .எல்லா IP /ASP களிடம் ஒரு நன்மதிப்பை பெற்றவர் .அஞ்சல் நான்கு சங்கத்தின் கோட்ட உதவி தலைவராக பொறுப்பேற்றவர் .தோழரின் பணி ஓய்வு காலமும் சிறக்க வாழ்த்துகிறோம் .
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, March 28, 2018

  27.03.2018 அன்று நடைபெற்ற கோட்ட செயற்குழு முடிவுகள் 







நெல்லை அஞ்சல் மூன்றின் செயற்குழு 27.03.2018 அன்று கோட்ட தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .
 1.நெல்லை கோட்ட சங்கத்தின் 44 வது கோட்ட மாநாடு 22.04.2018 ஞாயிறு அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடத்துவது 
2.மாநாட்டு நன்கொடையாக நமது உறுப்பினர்களிடம் ரூபாய் 200 நன்கொடை பெறுவது என்றும் உறுப்பினர்களுக்கு ரூபாய் 120 மதிப்பிலான 180 பக்க CSI கையேடு மாநாட்டு அன்று வழங்குவது 
3.நெல்லையில் CSI அமுலாக்கம் 22.05.2018 என நிர்ணயிக்க பட்டுள்ளதால் அதனை ஒட்டி ஒரு சில தினங்களுக்கு முன் CSI தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்துவது 
4.உறுப்பினர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு மொத்த உறுப்பினர்கள் 195 (மாநாட்டில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் ) என இறுதி செய்யப்பட்டது .
5.கோட்ட மாநாட்டை புதிய பென்ஷன் திட்ட எதிர்ப்பு மாநாடாக நடத்துவது என்றும் தோழர் P.சேர்முக பாண்டியன் SR .ACCOUNTS OFFICER (R)புது டெல்லி அவர்களை அழைப்பது 
6.தொழிற்சங்கத்தில் மகளிர் பங்கு குறித்து பேசிட நமது அகில இந்திய சங்கத்தின் மகிளா கமிட்டி உறுப்பினர் தோழியர் வளர்மதி கோவை அவர்களை அழைப்பது 
7.CSI அமுலாக்கத்திற்கு பிறகு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நமது மாநில சங்கத்தின் TECHNOLOGY WING பொறுப்பாளர் தோழர் சங்கரநாராயணன்  தூத்துக்குடி அவர்களையும் 
8.கேடர் சீரமைப்பின் அடுத்தப்பட்டியல் -மாநில நிர்வாகத்தின் டார்கெட் குறித்த நெருக்கடிகள் இவைகளை குறித்து நமது மண்டல செயலர் தோழர் சுப்ரமணியன் திண்டுக்கல் -தொழிற்சங்க ஒற்றுமையின் அவசியம் குறித்து மாநில உதவி தலைவர் தோழர் அய்யம் பெருமாள் அவர்களும் உரையாற்ற இசைந்துள்ளார்கள் 
 இதுபோக சென்ற ஆண்டினை போல தோழியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் .
 செயற்குழுவில் தோழியர் பசுமதி APM ACS அவர்கள் கொடுத்த அறிவுரைகளும் ஆதரவும் மாநாட்டின் வெற்றியை நேற்றே உறுதி செய்தது போல் இருந்தது 
 தோழர்களே !தோழியர்களே ! வழக்கம் போல் நமது மாநாட்டை வெற்றி மாநாடாக அமைந்திட இன்றே தயாராகுவோம் .

                    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் 
                    இப்படை தோற்கின் எப்படை வெல்லும் -
 மாநாட்டு வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, March 27, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                                                           கோட்ட சங்க செயற்குழு 
நாம் ஏற்கனேவே அறிவித்தபடி நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு 27.03.2018  மாலை 6 மணியளவில் திருநெல்வேலி தலைமைஅஞ்சலகத்தில் நடைபெறுகிறது  (செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது ).செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, March 26, 2018

                                                         வருந்துகிறோம் 
நமது கோட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர் தோழர் G.நெல்லையப்பன் அவர்களின் அன்பு தாயார் திருமதி G.பழனி வேலம்மாள் (76 ) அவர்கள் 25.03.2018 பிற்பகல் 14.30 மணிக்கு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 26.03.2018 திங்கள் நண்பகல் 12 மணி அளவில் நெல்லை டவுனில் நடைபெறுகிறது .தாயாரை இழந்து வாடும் தோழர் நெல்லையப்பன் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் -NELLAI NFPE 

Saturday, March 24, 2018

                                            முக்கிய செய்திகள் 
IPPB MASTER TARING மற்றும் SMART PHONE DEVICE  TRAING மதுரை PTC யில் தொடங்குகிறது .02.04.2018 முதல் 07.04.2018 வரையிலும் 09.04.2018 முதல் 14.04.2018 வரையும் என இரண்டு BATCH -க்கான பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன இந்த பயிற்சியில் முதற்கட்டமாக ASP/IP கள் பங்கேற்கிறார்கள் .நமது கோட்டத்தில் திருநெல்வேலி Sub Dn ASP அவர்கள் முதல் BATCH க்கு செல்கிறார்கள் .நெல்லை கோட்டத்தில் SMART போன் வசதிதனை அறிமுகப்படுத்திட களக்காடு SO அடையாளம்காட்டப்பட்டுள்ளது .IPPB நெருங்குகிறது கூடவே அச்சம் கலந்த ஆர்வமும் தெரிகிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------------


Friday, March 23, 2018

                                                     முக்கிய செய்திகள் 
வங்கிகளில் பலகோடி மோசடி தொடர்பாகஅரசாங்கம் எடுத்துவரும் அதிரடி முடிவுகளில் அஞ்சல் துறையும் தப்பவில்லை . அஞ்சல் துறையில் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை அஞ்சல் வாரியம் ஏற்றுக்கொண்டு கீழ்கண்ட சில பதவிகளை sensitive /non sensitive என தரம்பிரித்து கொடுத்துள்ளது .அதிலே நமக்கொன்றும் ஆட்சேபனை இருக்காது .இருந்தாலும் அப்படி முக்கிய பதவிகளாக அடையாளங்காட்டப்பட்ட பதவிகளுக்கானTenure என்பதனை 2/3 வருடங்களாக குறைந்திருப்பது மீண்டும் அஞ்சல் எழுத்தர் பிரிவிற்கு ஒரு பெரிய சோதனைக்காலமாக பார்க்கவேண்டியுள்ளது .
அனைத்து குரூப் B &C பதவிகள் C கிளாஸ் -B கிளாஸ் SPM மற்றும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு -SUPERVISOR பணிகள் CBS -PLI -கோட்ட அலுவலக ஸ்டாக் -ஸ்டாப் -விஜிலென்ஸ் -ME -சேமிப்பு பிரிவு கவுண்டர் -செக் CLEARANCE -காசாளர் -மற்றும் கோட்ட அலுவலகங்களில் ஸ்டாப் இடமாறுதல் -RECRUITMENT பிரிவில் இருக்கும் ASP என அனைவரையும் 2/3 வருட கால இடைவெளியில் பணிமாற்றம் செய்யவேண்டும் என்பது 4 வருடங்கள் நிம்மதியாக ஒரு இடத்தில் பணியாற்றலாம் என்ற நம் ஊழியர்களின்  கனவுகள் களைய தொடங்கியுள்ளது .


Wednesday, March 21, 2018

யார் பேச்சை கேட்பது ? யார் பேச்சை கேட்டு நடப்பது ?

CBS CPC 20.03.2018 தனது கடிதத்தில் அஞ்சல் வாரிய அறிவிப்பை சுட்டி காட்டி 5 மணிக்குள் தங்கள் அலுவலக பணிகளை முடித்துவிட்டு EOD வேலையை தொடங்குங்கள் என அறிவுறுத்துகிறது .09.03.2018 விருதாச்சலத்தில் 23.25 வரை வேலை முடியாததை சுட்டிக்காட்டி அந்தந்த கோட்ட கண்காணிப்பாளர்களை அனைவருக்கும் அறிவுறுத்த சொல்லியிருக்கிறது ..15.30 மணிக்கு மேல் BO BAG வந்தால் அதை மறுநாள் கணக்கிற்கு கொண்டுவரவும் சட்டம் சொல்லியிருக்கிறது .PASS BOOK பிரிண்டர் இருக்கும் இடத்தில் PB ENTRY பிரிண்டர் மூலம் தான் போடவேண்டும் என SB உத்தரவு வலியுறுத்துகிறது .ஆனால் இன்று அதையெல்லாம் தாண்டி நிர்வாகமே விதி மீறலுக்கு ஊழியர்களை வற்புறுத்துவது ஏற்புடையது தானா ? இன்று கோட்ட அதிகாரிகளுக்குள்  போட்டி -உப கோட்ட அதிகாரிகளுக்குள்ளோ  போட்டா போட்டி ..ஆரம்பத்தில் SPM -PA -POSTMAN -MTS -GDS என்ற நிலைமாறி இன்று OUTSIDER  களுக்கும் இலக்கு நிர்ணயம் -இல்லையென்றால் ARRANGEMENT கிடையாது ....
என மனசாட்சிதனை கீழே இறக்கி வைத்துவிட்டு டார்கெட் பெயரில் குளிர் காயும் போக்கு தமிழகம் முழுவதும் தடையின்றி நடக்கிறது .
ஒரு சில இடங்களில் ஸ்பான்சர் மூலம் பணம் பி(ப )ரித்து பள்ளி குழந்தைகளுக்கு கணக்குகள் தொடங்குவது ஆரோக்கியமான விஷயம்தான் .வேறொரு இடத்தில் ரூபாய் 50000 MIS கணக்கில் முதலீடு செய்ய வந்தவரை ரூபாய் 100வீதம்  MIS கணக்குகள் பிரித்து தொடங்கப்பட்டதையும் மறந்துவிடக்கூடாது .அஞ்சல் துறையின் நோக்கம் சேமிப்பு திட்டம் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு  சென்றடைய வேண்டுமென்பதே .இலக்குகளுக்காக ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு உயர் அதிகாரிகளை ஏமாற்றுவது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



அன்பார்ந்த தோழர்களே !
                  நெல்லை NFPE தளத்தை காயப்படுத்தாதீர்கள் !Please ........
நெல்லை NFPE வாட்ஸாப்ப் தளத்தில் நமது சங்க செய்திகள் -சங்கஉறுப்பினர்களின் இல்ல விழாக்கள் -கோட்ட சங்கம் எடுத்துள்ள பிரச்சினைகள் -எடுக்கவேண்டிய பிரச்சினைகள் -நிர்வாக செயல்பாடுகள் -மத்திய மாநில சங்க செய்திகள் இவைகளை ஊழியர்களிடம் கொண்டு செல்வதற்காக தொடங்கப்பட்ட உன்னத அமைப்பு .2016 முதல் பல தரப்பட்ட பார்வையாளர்களை கவர்ந்ததின் காரணமாக இதன் மறு பதிவு nfpenellai .blogspot .com என்ற வலைத்தளத்திலும் பிரசுரிக்க படுகிறது .
 NFPE சம்மேளனத்தின் அடிப்படை கொள்கையே அரசியல் -மதம் -மொழி -சாதி -ஏழை -பணக்காரன் -போஸ்ட்மாஸ்டர் -OUT SIDER என பாகுபாடு ஏதுமின்றி அனைவரையும் சமமாக ஏற்றுக்கொள்வதுதான் .ஒவ்வொரு கட்சிக்கும் தனி சங்கம் இருக்கிறது .காங்கிரஸ் ஆதரவாக FNPO பாரதிய ஜனதா ஆதரவாக BPEF ஆரம்பிக்கப்பட்டது .அரசியல் சாயம் கலக்காத இந்த புனித நதியில் தேவையில்லாத கழிவுகளை கலக்காதீர் ! நான் ஒவ்வொருமுறையும் சொல்வதற்கு சங்கடமாக இருக்கிறது .இங்கு பதிவு செய்பவர்களும் -பார்ப்பவர்களும் தனித்தனி கொள்கை சார்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் .தேவையில்லாத விமர்சனங்கள் -விளாசல்கள் -வேண்டாம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் குரூப் அட்மின் -நெல்லை NFPE .

          நன்றி ! நன்றி !கருப்பு பேட்ஜ் போராட்டத்தை நெல்லையில் மாபெரும் வெற்றி பெற வைத்த உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE இன் புரட்சிகரவாழ்த்துக்கள் 
             நமது அஞ்சல் மூன்று மத்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை அரசிடம் தெரிவித்தோம் .பரவலாக அனைத்து பகுதிகளிலும் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் /தோழியர்கள் தங்கள் போராட்ட புகைப்படங்களை நமது நெல்லை NFPE இல் பதிவேற்றியது மிகப்பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது .
குறிப்பாக சங்கர்நகர் மானுர் மேலப்பாளையம் பெருமாள்புரம் மஹாராஜநகர் டவுண் நாங்குநேரி வள்ளியூர் களக்காடு மூலைக்கரைப்பட்டி ராதாபுரம் பெட்டைக்குளம் விஜயநாராயணம் உள்ளிட்ட  அலுவலகதில் இருந்து பதியப்பட்ட புகைப்படங்கள் நெல்லை மற்றும் பாளையம்கோட்டை தலைமைஅஞ்சலக பங்களிப்புகள் நெல்லை NFPE இன் தனி மான்பிணை வெளிக்காட்டியது .இன்றும் ஒருநாள் நடக்கும் கருப்பு பேட்ஜ் இயக்கத்திலும் முழுமையாக பங்கேற்போம் .
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்-SK பாட்சா 

Tuesday, March 20, 2018

       கேடர் சீரமைப்பு இரண்டாம் பட்டியல் மற்றும் அமுலாக்கம் தொடர்பான மாநில அளவிலான கருத்தாய்வு கூட்டம் நேற்று 19.03.2018 அன்று CPMG அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது ஊழியர் தரப்பில் மாநிலசெயலாரும்- பொருளாளரும் -.நிர்வாக தரப்பில் DPS (HOS) மற்றும் APMG Staff அவர்களும் கலந்துகொண்டனர் . .நமது மாநிலச்சங்க செய்திக்குறிப்பின் படி நமது ஆலோசனைகள் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள் .
1.கேடர் இரண்டாம் கட்டம் அமுலாகும் வரை எழுத்தர்களுக்கான RT யை நிறுத்திவைக்க வேண்டும் .
2.04.11.1992 க்கு பிறகானசர்கிள்  சீனியாரிட்டி பட்டியலை வெளியிட்டு சரி செய்ய வேண்டும் 
3.காசாளர் பதவிகளில் பணியாற்றும் LSG ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் இடமாற்றம் செய்திடவேண்டும் .
4.Account பதவிகளை LSG ஆக அடையாளம் காட்டும்பொழுது சீனியர் Accountant விருப்பங்களை கணக்கில் கொள்ளவேண்டும் .அவர்கள் ஏற்கனேவே ஜெனரல் பகுதிக்கு சென்றிருந்தாலும் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் .
5.அனைத்து RULE 38 இடமாறுதல்களை கேடர் அமுலாக்கத்திற்கு முன் பரிசீலிக்க வேண்டும் .
6.NFG பதவிகளை உடனடியாக நிரப்பவேண்டும் .
 குறிப்பாக இந்த ஆண்டு சுழல் மாறுதல் சம்பந்தமாக CPMG அவர்கள் கூடிய விரைவில் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது .
பாதிப்பில்லாத இடமாறுதல்கள் தான் அஞ்சல் எழுத்தர்கள் ஆண்டு தோறும் எதிர்பார்க்கும் முக்கியமான அம்சம் .அதனை நிறைவேற்றிட நாம் உறுதி கொள்வோம் .ஊழியர் நலன் காப்போம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, March 19, 2018

                                                  கோளாறு எங்கே ?
தோழர்களே ! தோழியர்களே !!
அஞ்சலகங்களில் மீண்டும் நெட் ஒர்க் பிரச்சினை 
பத்திரிக்கைகள் பல கட்ட செய்திகளை வெளியிட்டு வருகிறது .அஞ்சல் துறையின் இமேஜ் காற்றிலே பறக்கவிடப்படுகிறது .தடுக்க வேண்டியது யார் ?யார் கையில் அதிகாரம் இருக்கிறது ? IT -MODERNISATION -INDIAPOST 2012 திட்டத்தின் கீழ் TCS /Infosys/  Reliance/ Sify -BSNL -ஏர்டெல் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வெள்ளை அறிக்கையாக அஞ்சல் வாரியம் வெளியிட மத்திய சங்கங்கள் நெருக்கடி கொடுக்க வேண்டும்
சிறு தவறுகளுக்குக் கூட ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் அஞ்சல் துறை அதிகாரிகளும் ,
நிர்வாகமும் பல ஆயிரம் கோடி ஒப்பந்தம் பெற்ற இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தவறு செய்யும்  விஷயத்தில், வாய் பொத்தி மௌனம் சாதிப்பது ஏன் என்பதுகேள்விக் குறியாகவே உள்ளது.
நடக்கின்ற இந்தக் கோளாறுகள் தெரியாத மாதிரி , கீழ்மட்ட அதிகாரிகளோ,
மேளா என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் சேமிப்புக் கணக்குகள் துவக்கச் சொல்லியும் , 
கிராமப்புற அஞ்சல் காப்பீடு பிடிக்கச் சொல்லியும் இலக்கு நிர்ணயம் செய்து அப்பாவி  ஊழியர்களை கடும் துன்பத்திற்கு உள்ளாக்குகின்றனர். 
Mc Camish சரிவர இயங்காத நிலையில் பிடிக்கப்பட்ட கிராமிய அஞ்சல் காப்பீடுகளுக்கு சரிவர பாலிசி கொடுக்க இயலாத சூழலில், பாலிசிதாரர்களுக்கு Aftersales Service ஒழுங்காக அளிக்க இயலாத நிலையில்,
Compatibility இல்லாத நிலையில் CSI மாற்றத்தில்  கணினிகள் இயங்காத மோசமான சூழலில், 
 இப்படியான  கீழ்மட்ட அதிகாரிகளின் கண்மூடிய போக்கு ஊழியர்களுக்கு மிகுந்த  மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
போராட்ட கோரிக்கைகளை மெருகேற்றுவோம் -அகிலஇந்திய அளவில் அழுத்தம் கொடுத்து போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்ட நிலையில் அதன் ஒப்பந்தத்தை முறிக்க அஞ்சல் வாரியம் முன்வரவேண்டும் -கோளாறு எங்கே ? கண்டுபிடிப்போம் .
போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !
                      கருப்பு பேட்ஜ் அணிந்து 20.03.2018 மற்றும் 21.03.2018 இரண்டுநாட்கள் பணியாற்றிட மத்திய சங்கம் அழைப்பு 

நாடு முழுவதும் அஞ்சல் துறை ஊழியர்கள் இரண்டாவது கட்ட போராட்டம் !
                                                   கோரிக்கைகள் 
                  
 1. அவசர கதியில் அல்லாமல், உரிய அடிப்படை  வசதிகளை ஏற்படுத்திய பின்னர் CSI தொழில்நுட்பத்தை இலாக்காவில் புகுத்த வேண்டுதல், 
2. வணிக இலக்கு என்ற பெயரில் ஊழியர்களை கொடுமைப்படுத்
துவதை உடனே நிறுத்த வேண்டுதல், 
3.a) எழுத்தரில் உடனடியாக  காலிப் பணியிடங்களை நிரப்புதல் , 
b)கேடர் சீரமைப்பில் உடன் உயர் பதவிகளை நிரப்புதல், 
4. அஞ்சல் பணிகளை தனியாருக்கு அளிக்கும் திட்டத்தை கைவிடல் ,
5. தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடன் வெளியிட வேண்டுதல் 
உங்கள் அனைவருக்கும் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அனுப்பிவைக்கப்படும் .தோழர்கள் அனைவரும் வருகிற மார்ச் 20 மற்றும் 21 தேதிகளில் அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிட கேட்டு கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல்நான்கு நெல்லை 






Saturday, March 3, 2018

அன்பார்ந்த தோழர்களே !
     நான் 05.03.2018 முதல் 17.03.2018 வரை MACP III பயிற்சிக்காக மதுரை PTC க்கு செல்வதால் இந்த இடைப்பட்ட காலத்திற்கு நமது கோட்ட செயலராக அருமை தம்பி தோழர் G.சிவகுமார் உதவி கோட்டசெயலர் & PA மானுர் அவர்களை நியமித்திருக்கிறேன் .இதற்கான கடிதத்தை கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன் .தாங்கள் அனைவரும் அவருக்கு நல்லதொரு ஒத்துழைப்பை வழங்கும்படி அன்போடு கேட்டு கொள்கிறேன் .நன்றி .
தோழர் G.சிவகுமார் தொலைபேசி எண் 7708538258 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -



NFPE
                         ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                         Tirunelveli Divisional Branch
TIRUNELVELI-627001
--------------------------------------------------------------------------------------------------------
No.P3-ORD / dated at TVL 627001 the 03.03.2018
To

The Sr .Supdt of Pos
Tirunelveli Division
627002

Sir,
            Sub:  Authorisation for functioning as Divisional Secretary of
                    AIPEU GR C, Tirunelveli Divisional Branch –reg

          Ref: Memo No.B3/Training/MACP dated at Tirunelveli-627 002, the 02/03/2018     
--------

With reference to the above the undersigned is going to attend the training at  PTC, Madurai for the period  from 05.03.2018 to 17.03.2018. Hence, Shri. G. Sivakumar PA Manur & Asst. Divisional Secretary of AIPEU GR C is authorised to function as Divisional Secretary for the Period from 05.03.2018 to 17.03.2018.  The required trade union facilities may kindly be extended to him.


Yours faithfully,


[S.K. JACOBRAJ]
DIVISIONAL SECRETARY


கணக்கு பிடிப்பதில் நெருக்கடி -வேலைநேரம் முடிந்தபின்பும் தபால்காரர்களை கணக்குபிடிக்க மீண்டும் வீடுதோறும் செல்லவேண்டும் -கணக்கு தொடங்கமுடியாவிட்டால் நீங்களே உங்கள் பெயரில் கணக்குகளை தொடங்குங்கள் என ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நிர்வாகத்தை கண்டித்து நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றது .குறிப்பாக நெல்லை ஆர்ப்பாட்டத்தில் புதியவர்களுக்கு /இளையவர்களும் களமிறங்கியது பாராட்டுதலுக்குரியது .நெல்லை 
NFPE இன் மான்பை தொடர்ந்து பாதுகாப்போம் .கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் எங்கள் நன்றிகள் .












Thursday, March 1, 2018

                             02.03.2018    ஆர்ப்பாட்டம்    வெல்லட்டும் 
இடம் -பாளை HO நேரம் மாலை 6 மணி 
தோழர்களே !தோழியர்களே !
             இன்றைய ஆர்ப்பாட்ட கோரிக்கை --ஆண்டு இறுதியில் புதிய கணக்குகளை -பாலிசிகளை பிடிக்க சொல்லி பல்வேறு வழிகளில் ஊழியர்களை இலாகா விதிகளுக்கு புறம்பாக செயல்பட தூண்டும் மாநில -மண்டல -கோட்ட -உபகோட்ட நிர்வாகங்களை கண்டித்து எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .ஆர்ப்பாட்டத்தில் நமது தோழர்கள் முழுமையாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
இதுவரை finacle குறைபாடுகளை மட்டுமே பெரிதாக பேசப்பட்டு வந்தநிலையில் Mecamish நிலையும் மிக மோசம் தான் -ஆகவே Mecamish குறைபாடுகள் அதனால் SO முதல் HO வரை ஊழியர்கள் படும் சிரமங்கள் ஏராளம்என்பதால்  Mecamish பிரச்சினையையும் ஒரு கோரிக்கையாக சேர்க்க வேண்டும் என்ற நமது கோரிக்கையையும் சேர்த்து கோரிக்கை பட்டியல் தயாரித்த நமது மாநில சங்கத்திற்கும் -ஒருங்கினைப்பு தலைமைக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் அஞ்சல் மூன்று 
SK .பாட்சா அஞ்சல் நான்கு 
S.செல்வபாரதி SBCO 


   அன்பார்ந்த தோழர்களே !
02.03.2018 நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்வோம் 

தமிழ்மாநில ஒருங்கிணைப்புக்கு குழு சார்பாக தமிழகமெங்கும் 02.03.2018 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் .
                                       அநீதி கண்டு வெகுண்டெழுந்து 
                                       ஆர்ப்பரித்து போராடாமல் 
                                       அநீதி களைய முடியாது 
                                        தேவை இல்லை அனுதாபம் 
                                       தேவை எல்லாம் நீதி தான் --
இது ஒரு புகழ்பெற்ற கோஷங்கள் .கொட்டி முழக்கப்படும் கோஷங்கள் சராசரி ஊழியர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் .கவிஞர் கந்தர்வன் வரிகள் இது 
                                         முதல் சங்கம் -இடை சங்கம் 
                                         கடைச்சங்கம் காலம் போய் 
                                          இது தொழிற்சங்க காலம் 
நம்முன் தொழிலாளிகள் படும் துயரங்களுக்கு எதிராக களம் காண்பது நமது கடமை .ஆம் .நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தை முழு வெற்றி பெற செய்வோம் 
 ----------------------------------------------------------------------------------------------------------------------
                                               நன்றி ! நன்றி !
கோட்ட அலுவலகத்தில் இருந்து வருகிற ஊழியர்களின் நலன் சார்ந்த பண பலன்களை விரைந்து கொடுப்பதில் நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலக கணக்கு பிரிவு ஊழியர்களின் பங்கு மகத்தானது .குறிப்பிட்டு சொல்வதென்றால் சமிபத்தில் வந்த பஞ்சிங் increment உத்தரவை இவ்வளவு விரைவாக கணக்கிட்டு மறு நிர்ணயம் செய்து நிலுவை தொகையினை விரைந்து வழங்கிய நெல்லை -பாளை கணக்கு பிரிவில் பணியாற்றும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE இன் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் ஊழியர் நலன் சார்ந்த சேவைகள் .
தோழமையுடன்
                                      SK .ஜேக்கப் ராஜ்  --SK .பாட்சா கோட்ட செயலர்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------
                                        
                                         
         
அநீதி