...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 21, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                  நெல்லை NFPE தளத்தை காயப்படுத்தாதீர்கள் !Please ........
நெல்லை NFPE வாட்ஸாப்ப் தளத்தில் நமது சங்க செய்திகள் -சங்கஉறுப்பினர்களின் இல்ல விழாக்கள் -கோட்ட சங்கம் எடுத்துள்ள பிரச்சினைகள் -எடுக்கவேண்டிய பிரச்சினைகள் -நிர்வாக செயல்பாடுகள் -மத்திய மாநில சங்க செய்திகள் இவைகளை ஊழியர்களிடம் கொண்டு செல்வதற்காக தொடங்கப்பட்ட உன்னத அமைப்பு .2016 முதல் பல தரப்பட்ட பார்வையாளர்களை கவர்ந்ததின் காரணமாக இதன் மறு பதிவு nfpenellai .blogspot .com என்ற வலைத்தளத்திலும் பிரசுரிக்க படுகிறது .
 NFPE சம்மேளனத்தின் அடிப்படை கொள்கையே அரசியல் -மதம் -மொழி -சாதி -ஏழை -பணக்காரன் -போஸ்ட்மாஸ்டர் -OUT SIDER என பாகுபாடு ஏதுமின்றி அனைவரையும் சமமாக ஏற்றுக்கொள்வதுதான் .ஒவ்வொரு கட்சிக்கும் தனி சங்கம் இருக்கிறது .காங்கிரஸ் ஆதரவாக FNPO பாரதிய ஜனதா ஆதரவாக BPEF ஆரம்பிக்கப்பட்டது .அரசியல் சாயம் கலக்காத இந்த புனித நதியில் தேவையில்லாத கழிவுகளை கலக்காதீர் ! நான் ஒவ்வொருமுறையும் சொல்வதற்கு சங்கடமாக இருக்கிறது .இங்கு பதிவு செய்பவர்களும் -பார்ப்பவர்களும் தனித்தனி கொள்கை சார்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் .தேவையில்லாத விமர்சனங்கள் -விளாசல்கள் -வேண்டாம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் குரூப் அட்மின் -நெல்லை NFPE .

1 comment:

  1. சரியான அறிவுறுத்தல்.ஊழியர்கள் மத்தியில் சாதி இன மொழி பாகுபாடு ஏதுமில்லை. ஊழியம் செய்யும் போது ஏற்படும் இன்னல்களை களைய மற்றும் மாறாத நீதியை நிலைநாட்ட பாரபட்சம் இன்றி செயல் பட வேண்டியது மட்டுமே தொழிற்சங்க கடைமை

    ReplyDelete