...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, March 19, 2018

                                                  கோளாறு எங்கே ?
தோழர்களே ! தோழியர்களே !!
அஞ்சலகங்களில் மீண்டும் நெட் ஒர்க் பிரச்சினை 
பத்திரிக்கைகள் பல கட்ட செய்திகளை வெளியிட்டு வருகிறது .அஞ்சல் துறையின் இமேஜ் காற்றிலே பறக்கவிடப்படுகிறது .தடுக்க வேண்டியது யார் ?யார் கையில் அதிகாரம் இருக்கிறது ? IT -MODERNISATION -INDIAPOST 2012 திட்டத்தின் கீழ் TCS /Infosys/  Reliance/ Sify -BSNL -ஏர்டெல் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வெள்ளை அறிக்கையாக அஞ்சல் வாரியம் வெளியிட மத்திய சங்கங்கள் நெருக்கடி கொடுக்க வேண்டும்
சிறு தவறுகளுக்குக் கூட ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் அஞ்சல் துறை அதிகாரிகளும் ,
நிர்வாகமும் பல ஆயிரம் கோடி ஒப்பந்தம் பெற்ற இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தவறு செய்யும்  விஷயத்தில், வாய் பொத்தி மௌனம் சாதிப்பது ஏன் என்பதுகேள்விக் குறியாகவே உள்ளது.
நடக்கின்ற இந்தக் கோளாறுகள் தெரியாத மாதிரி , கீழ்மட்ட அதிகாரிகளோ,
மேளா என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் சேமிப்புக் கணக்குகள் துவக்கச் சொல்லியும் , 
கிராமப்புற அஞ்சல் காப்பீடு பிடிக்கச் சொல்லியும் இலக்கு நிர்ணயம் செய்து அப்பாவி  ஊழியர்களை கடும் துன்பத்திற்கு உள்ளாக்குகின்றனர். 
Mc Camish சரிவர இயங்காத நிலையில் பிடிக்கப்பட்ட கிராமிய அஞ்சல் காப்பீடுகளுக்கு சரிவர பாலிசி கொடுக்க இயலாத சூழலில், பாலிசிதாரர்களுக்கு Aftersales Service ஒழுங்காக அளிக்க இயலாத நிலையில்,
Compatibility இல்லாத நிலையில் CSI மாற்றத்தில்  கணினிகள் இயங்காத மோசமான சூழலில், 
 இப்படியான  கீழ்மட்ட அதிகாரிகளின் கண்மூடிய போக்கு ஊழியர்களுக்கு மிகுந்த  மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
போராட்ட கோரிக்கைகளை மெருகேற்றுவோம் -அகிலஇந்திய அளவில் அழுத்தம் கொடுத்து போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்ட நிலையில் அதன் ஒப்பந்தத்தை முறிக்க அஞ்சல் வாரியம் முன்வரவேண்டும் -கோளாறு எங்கே ? கண்டுபிடிப்போம் .
போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

0 comments:

Post a Comment