...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 1, 2018

   அன்பார்ந்த தோழர்களே !
02.03.2018 நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்வோம் 

தமிழ்மாநில ஒருங்கிணைப்புக்கு குழு சார்பாக தமிழகமெங்கும் 02.03.2018 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் .
                                       அநீதி கண்டு வெகுண்டெழுந்து 
                                       ஆர்ப்பரித்து போராடாமல் 
                                       அநீதி களைய முடியாது 
                                        தேவை இல்லை அனுதாபம் 
                                       தேவை எல்லாம் நீதி தான் --
இது ஒரு புகழ்பெற்ற கோஷங்கள் .கொட்டி முழக்கப்படும் கோஷங்கள் சராசரி ஊழியர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் .கவிஞர் கந்தர்வன் வரிகள் இது 
                                         முதல் சங்கம் -இடை சங்கம் 
                                         கடைச்சங்கம் காலம் போய் 
                                          இது தொழிற்சங்க காலம் 
நம்முன் தொழிலாளிகள் படும் துயரங்களுக்கு எதிராக களம் காண்பது நமது கடமை .ஆம் .நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தை முழு வெற்றி பெற செய்வோம் 
 ----------------------------------------------------------------------------------------------------------------------
                                               நன்றி ! நன்றி !
கோட்ட அலுவலகத்தில் இருந்து வருகிற ஊழியர்களின் நலன் சார்ந்த பண பலன்களை விரைந்து கொடுப்பதில் நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலக கணக்கு பிரிவு ஊழியர்களின் பங்கு மகத்தானது .குறிப்பிட்டு சொல்வதென்றால் சமிபத்தில் வந்த பஞ்சிங் increment உத்தரவை இவ்வளவு விரைவாக கணக்கிட்டு மறு நிர்ணயம் செய்து நிலுவை தொகையினை விரைந்து வழங்கிய நெல்லை -பாளை கணக்கு பிரிவில் பணியாற்றும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE இன் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் ஊழியர் நலன் சார்ந்த சேவைகள் .
தோழமையுடன்
                                      SK .ஜேக்கப் ராஜ்  --SK .பாட்சா கோட்ட செயலர்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------
                                        
                                         
         
அநீதி 

0 comments:

Post a Comment