...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 29, 2020

தோழியர் P குமாரி   DY போஸ்ட்மாஸ்டர் & தலைவர் NFPE NELLAI மகிளா கமிட்டி அவர்களின் பணிநிறைவு விழா

அன்றைய அஞ்சல் துறையின் 
அடிமைகளின் மற்றொருபெயர் RTP 
இன்றைய ED களைவிட 
எந்த விதத்திலும்  உயர்ந்தவர் இல்லை என்ற 
உத்தரவத்தோடு பணிக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு 
வைத்த பட்டப்பெயர் தான் அது 

தினக்கூலிக்காக கையேந்திய 
தொழிலாளிகளில் கொஞ்சம் 
வசதியானவர்  இவர்கள் 
அந்த வரிசையில் 
அவதரித்த அங்காள அம்மன் தான் 
எங்கள் குமாரி 

வெண்கல குரலும் 
வெளிர் சிரிப்புகள் மட்டுமல்ல 
இவரின் அணிகலன்கள் 

வெறும் சிரிப்புகளை வைத்தே 
அடையாளம் காணப்பட்ட நாட்களில் 
அவரின் சிரிப்பில் அர்த்தம் இருந்தது 
அது அழகின் சிரிப்பை விட 
அர்த்தமுள்ளது 

RTP என்றால் பேசக்கூடாது 
அலுவலகத்தில் சுதந்திரமாக திரிய கூடாது 
நிரந்தரம் குறித்து கேட்க கூடாது 
கொடுப்பதை வாங்கி கொள் -என்ற 
கருப்பு சட்டத்திற்கு 
எதிராக போராடிய பேரியக்கத்தில் 
அப்பொழுதே பங்கேற்றவர் 

இந்த சூழலில் தான் -தென்காசியில் இருந்து 
தினமும் வந்துசென்றதில் ஏற்பட்ட தாமதத்திற்காக 
கோபப்பட்ட அதிகாரியின்  கொடுமையை எதிர்த்து 
கொள்கை  முழக்கம் உங்களுக்காக ஒலித்தது 

அதன் பின்புதான் 
உழைக்கும் பெண்களுக்காக -ஒரு இயக்கம் 
நெல்லையில் இருக்கிறதென்றால் அதன் பெயர் 
NFPE என பின்னாளில் பேசப்பட்டது 
இன்னாளிளும் பேசப்படுகிறது 


அடுத்து வந்த மருத்துவ விடுப்பு போராடத்திலும் 
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் 
ஆறுதல் சொல்ல சென்ற தலைவர்களுக்கோ பேரதிர்ச்சி 
அதே சிரிப்பு அதே உறுதி 
அதே துணிவு அதே அதிரவைக்கும் குரல் 

இந்த பின்னணியில் தான் 
NELLAI NFPE யின் மகிளா கமிட்டி தலைவர் 
மாநாடுகளில் எங்களுக்கான ஆதரவு 
போராட்ட காலங்களில் அபார பங்கேற்பு 


அ ச்சம் மடம் நாணம் தவிர்த்து -
மிச்சமிருந்த தயக்கத்தை தளர்த்தி 
தோழியர்களை ஓரணியில் திரட்டியவரே !
ஆண்டுக்கொருமுறை சங்கம் மாற சொல்லி 
வந்தவரை 
வந்தவழி வரை விரட்டியவரே !அவருக்கும் அவர் 
வந்த வழியின் வரலாற்றை புகட்டியவரே !

கோட்ட அலுவலகத்தில் பணியாற்றினாலும் 
தலைமை அஞ்சலகத்தில் இருந்தாலும் 
போராட்டதிற்கு  தலைமையேற்ற எங்கள் 
ஜான்சி ராணி -ராணி மங்கம்மாள்   நீ 

அன்றுவந்த சோதனை இன்றும் வந்தது 
நல்லெண்ணம் கொண்ட அதிகாரிகளால் 
நன்மையே வந்தது 
அச்சம் இல்லா அலட்சிய பார்வை 
இன்றும் நின்றது 

எவரெவர் ஓய்வு பெற்றாலும் வழக்கமாக 
சொல்லும் வார்த்தை வெற்றிடம் உண்டு என்று 
சத்தியமாக சொல்லுகிறோம் 
இங்கு வெற்றிடம் இல்லை
 வெற்றியின் இடம் பிறந்திருக்கிறது 
மகிளா கமிட்டி அல்ல -
மகளிர் ராணுவ பிரிவே -இங்கு 
மலர்ந்திருக்கிறது -வளர்ந்திருக்கிறது 

தோழியர்களை -இளந்தோழர்களை 
உற்சாக படுத்திய 
உருவாக்கிய எங்கள் குமாரியே 
உங்கள் பணி ஓய்வு காலங்கள் சிறக்க 
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் 
                                  நன்றி 
                                                             தோழமையுடன் 
                                                                SK ஜேக்கப் ராஜ் 
                                                                கோட்ட செயலர் 

















Sunday, May 24, 2020

                                  இனிய திருமண வாழ்த்துக்கள் 
இன்று 24.05.2020 மணவிழா  கானும் அன்புத்தோழியர் K .வள்ளிகாஞ்சனா  தபால்காரர் டவுண் அவர்களின் இல்லறம் சிறக்க NELLAI NFPE வாழ்த்துகிறது 
                                                               மணமக்கள் 
                                     K .மகாராஜா --K . வள்ளிகாஞ்சனா
நாள் 24.05.2020        இடம் உக்கிரன்கோட்டை சிவன்கோவில் 

Saturday, May 23, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                நெல்லை கோட்ட செய்திகள் 
*நேற்று சில நண்பர்களிடம் இருந்து ஓரிரு  செய்திகள் வந்தன .தபால்காரர் தோழர்களிடம் இன்று நீங்கள் யாரும் பட்டுவாடா செய்யவேண்டாம் தபால்களை கட்டிவையுங்கள் .IPPB கணக்கு தொடங்கினால் போதும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்க பட்டதாம் .உண்மையா ? பழையகாலங்களில் சில அதிகாரிகள் இப்படி சொன்னதுண்டு நீ OFFICE யை திறந்தாலும் சரி திறக்காவிட்டாலும் சரி உனக்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கை பிடி அப்புறம் கணக்கை முடி ........அன்று SB க்காக மல்லுக்கட்டியவர்கள் இன்று IPPB க்காக .................
*இன்றைய காலகட்டத்தில் ஊழியர்களுக்கு இலாகா அடையாளஅட்டை என்பது அவசியமானது .பல ஊழியர்கள் அடையாளஅட்டை வேண்டும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .சிலர் விண்ணப்பித்தாலும் அவைகள் நிர்வாகத்தால் திருப்பப்படுவதாக கூறுகிறார்கள் .ஆகவே கோட்ட நிர்வாகமே ஒரு மாதிரி அடையாளஅட்டையை வெளியிட்டால் ஊழியர்கள் அதன் அடிப்படையில் அடையாள அட்டை விண்ணப்பிக்க உதவியாக இருக்கும் .
*நேற்றைய கருப்பு அட்டை இயக்கத்தில் பங்கேற்ற தோழர்கள் /தோழியர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பல அலுவலகங்களில் இருந்து தங்களுக்கு பேட்ஜ் வரவில்லை என வருத்தப்பட்டார்கள் .இனி வருங்காலங்களில் இந்த குறைகள் முற்றிலும் களையப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூண்று நெல்லை 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Friday, May 22, 2020

  அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                             முக்கிய செய்திகள் 
*இந்த ஆண்டு சுழல் மாறுதளுக்கு  இதுவரை விண்ணப்பிக்க         முடியாதவர்களுக்குகாக காலஅவகாசம் 29.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .Tennure  முடிந்தவர்கள் மட்டுமன்றி முடியாதவர்களும்( LSG ) உட்பட  விண்ணப்பிக்கலாம் .ஒருவேளை அனைத்து விருப்ப விண்ணப்பங்களும் பரிசீலிக்கும் நிலை வந்தால் 
உங்கள் விருப்ப இடங்கள் கிடைக்கலாம் .
                               மாநில சங்கத்திற்கு நன்றி !நன்றி !
*முந்தைய LSG பதவியுயர்வில் வெளி கோட்டங்களுக்கு  ALLOTMENT செய்யப்பட்ட  6 ஊழியர்களுக்கு  நமது மாநில சங்கம் எடுத்த முயற்சியினால் மீண்டும் நமது கோட்டத்திற்கு RE -ALLOTMENT கிடைக்கப்பெற்றுள்ளனர் இந்த 
மறு ஒதுக்கீ ட்டை  பெற்றுத்தந்த .மாநில /மண்டல செயலர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
1.P.காந்திமதி S.கிருஷ்ணவேணி 3.T.அன்னம் 4.S.ராஜலட்சுமி 5.M.முத்துக்குமாரசாமி 6.M.செல்வி  இவர்களும் தங்களது விருப்ப இடங்களை தெரிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் 
                                       கருப்பு அட்டை இயக்கம் 
மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளன அறைகூவலின்படி இன்று நமது உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிட கேட்டுக்கொள்கிறோம் ..கருப்பு பேட்ஜ்  அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது .நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 

Thursday, May 21, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                   கண்களை விற்று சித்திரம் வாங்கினால் ................
                          மத்திய அரசின்  தனியார்மய /மக்கள் விரோத கொள்கை முடிவுகளை  எதிர்த்து மத்தியஅரசு ஊழியர்களின் கருப்பு அட்டை இயக்கம் -22.05.2020 --மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளன அறைகூவல் 
                        நமது நாட்டின் முக்கிய துறைகளான பாதுகாப்பு தளவாடங்கள் அனுசக்தி  சிவில் விமானபோக்குவரத்து நிலக்கரி மற்றும் கனிமவளங்கள்  உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் வசம் கொடுத்திட  மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது ..பேராபத்து நிலவும் இந்த காலகட்டத்திலும் அரசு அனைத்து நிறுவனங்களையும் மொத்த விலைக்கு விற்பதற்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு உயிர்காக்கும் போராட்ட காலத்தில்   கூட  உரிமையை காக்கும்  .போராட்டத்தில் நாம் பங்கேற்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது மேலும் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் என்ற பெயரில் .பல மாநிலங்களில் தொழிலாளர் உரிமைகள் முடக்கப்பட்டு வேலைநேரத்தை அதிகரித்தது ஊழியர்களின் பஞ்சபடியை 18 மாதங்களுக்கு நிறுத்திவைப்பு  பாதுகாப்பு துறையில் 74 சதம் வரை வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட ஊழியர் விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாளை நடைபெறும் கருப்பு அட்டை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுகிறோம் ..வழக்கம்போல் நாளை காலை உங்கள் அனைவருக்கும் கருப்பு பேட்ஜ் அனுப்பிவைக்கப்படும் .தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் நாளை ஒருநாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிட  கேட்டுக்கொள்கிறோம் .
உலக முதலாளிகளுக்கு, மனித வளத்தைச் சுரண்டும் வேட்டைகாடாக இந்தியா மாற்றப்படுகிறதா ? எங்கள் செல்வங்கள் மீண்டும் கொள்ளை பொருளாகிறதா ? என்ற கேள்வி தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இவைகளை அனுமதிக்கக் கூடாது என்பதே, தொழிலாளர் ஆதரவு இயக்கங்களின் நோக்கமாகும்.. எனவே தான் போராட்டம் தவிர்க்க முடியாததாக உள்ளது. போராட்டத்திற்குப் பின்னர் தான், தொழிலாளி மீது தொடுக்கப் படும் தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. , கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ என்பதை நினைவில் கொள்வது நல்லது.
நன்றி தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T .புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 
              



Wednesday, May 20, 2020

                                                     முக்கிய செய்திகள் 
சுழல் மாறுதலுக்கான புதிய உத்தரவை அஞ்சல் வாரியம் 19.05.2020 அன்று வெளியிட்டுள்ளது .
1.TENURE முடித்தவர்களுக்கு TRANSFER TA  வழங்காதபடி இடமாறுதல்களை வழங்கிடவேண்டும் 
2.SINGLE HAND  SPM மற்றும் DOUBTFUL INTEGRITY உள்ள SPM களை இடமாற்றம் செய்திடலாம் (NO TA/TP  )
3.ஏற்கனவே EXTENSION பெற்ற ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கலாம் (NO TA/TP  )
4.ஒரே ஸ்டேஷன் ஒரே வளாகதில் உள்ள ஊழியர்களுக்கும் இடமாறுதல் கொடுக்கலாம் (NO TA/TP  )
5.மேற்சொன்ன எந்த நிபந்தனைகளுக்குள்ளும் வராத ஊழியர்களுக்கு .TENURE 31.03.2021 வரை நீட்டிக்கப்படும் .(இது சில அதிகாரிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் )
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                   நேற்றைய (19.05.2020) செயற்குழு முடிவுகள் 
நேற்று நமது கோட்ட சங்க செயற்குழு கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .35 க்கும் மேற்பட்ட நமது உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .கூட்டத்தில் நமது சங்க அமைப்பு விதிகளின் படி கோட்ட மாநாடு 24 மாதத்திற்குள் கூடுதலாக (GRACE PERIOD 3 மாதம் எடுத்தாலும் 27 மாதத்திற்குள் நடத்திடவேண்டும் என்ற ஜனநாயக நெறிமுறைகளின் படி மாநாடு நடத்தவேண்டிய கட்டாயம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது .செயற்குழுவில் சிறப்புஅழைப்பாளராக அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் T .புஷ்பாகரன் அவர்களும் இந்த  ஆண்டில் புதிதாக நமது NFPE இயக்கத்தில் சேர்ந்திட்ட தோழர் P.சுப்பிரமணியன் SPM COURTS  அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள் ..முடிவில் கோட்ட உதவி பொருளாளர் தோழர் G.நெல்லையப்பன் அவர்கள் நன்றிகூறினார்கள் .
 செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் 
1.நமது நெல்லை கோட்ட மாநாடு (பொதுக்குழு )வருகிற 07.06..2020 ஞாயிறு அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலக வளாகத்தில் முற்றிலும் சமூகவிலகல் பின்பற்றப்பட்டு நடைபெறும் 
2.கொரானா  தொற்றுதலை  முன்னிட்டு நன்கொடை  ஏதும் பிரிக்கவேண்டாம் என்றும் மிக எளிமையாக பொதுக்குழுவை நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது 
3.பொதுக்குழுவிற்கு  உறுப்பினர்கள் வரும் போக்குவரத்து பொறுப்பை  கோட்ட சங்கமே ஏற்றுக்கொள்ளும் .அதற்காக வள்ளியூர் பகுதியில் தோழர் VS .கிருஷ்ணன் திசையன்விளை பகுதியில் தோழர் P.அர்ஜுனன் களக்காடு நாங்குநேரி பகுதியில் தோழர் சபரி மணிகண்டன் மாநகர பகுதியில் தோழர்கள் சாகுல் மற்றும் இளங்கோ ஆகியோர் உதவிசெய்வார்கள் 
3.வழக்கம்போல் வாழ்த்துரை சிறப்புரை கலைநிகழ்ச்சிகள் ஏதும் இந்த ஆண்டு கிடையாது 
4.MHA, DOPT, DOP உத்திரவுகளின்படி உரிய சுகாதார வசதிகள் செய்துதர ஒருகுழு அமைக்கப்படும் .. 
5.மத்திய உணவு பரிமாறப்பட்டது .அதை பார்சலாக கொடுக்கப்படும் .உணவு உபசரனைகள்   நமது மூத்த தோழர் S.சபாபதி PRI (P)அவர்கள் மேற்பார்வையில் நடைபெறும் 
6.செயற்குழுவில் கலந்துகொண்ட திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் திரு .கடற்கரையாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது 
6. பொதுக்குழு சிறக்க வழக்கம்போல் உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோருகிறோம் 
   நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, May 19, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                      அட்டையிடம் ரத்ததானம்  கேட்கலாமா ? கசாப்பு கடைக்காரனிடம்  காருண்யம் எதிர்பார்க்கலாமா ? 
  . ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணிக்கு அழைக்கும்        (IPPB ) கோட்ட  மற்றும் உபகோட்ட அதிகாரிகளின் நடவடிக்கையை ரத்துசெய்திட  வேண்டி மாநில நிர்வாகத்திற்கு நமது  மாநில சங்கம்  கடிதம் எழுதியுள்ளது .இதுகுறித்து மாநிலச்சங்க தகவல் இதோ !இன்று CPMG அவர்கள் வெளியில் சென்றிருந்ததால் DPS HQ அவர்களை சந்தித்து  ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் ஊழியர்களை வேலைக்கு வரச்சொல்லி IPPB கணக்குகளை துவங்க சொல்லி கட்டாயப்படுத்துவது இயக்குனரகத்தின் உத்தரவிற்கு எதிரானது என்று இயக்குனரகத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி விவாதித்தோம் மாநில நிர்வாகம் போடப்பட்ட உத்தரவை  நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினோம் DPS HQ அவர்கள் அதற்கான உத்தரவை  வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார்
*NFPE மாபொதுச்செயலர் தோழர் R N பராசர் அவர்கள் அஞ்சல்துறை செயலருக்கு IPPB அதிகாரிகளின் சர்வாதிகார அணுகுமுறைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். இந்த அணுகுமுறை தொடருமேயானால் நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்ட அறைகூவல் விடுக்க வேண்டிய கட்டாய ம் ஏற்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.நோய்த் தொற்று குறித்து அச்சத்தில் இருக்கும் தபால் ஊழியர்களை மேலும் துன்புறுத்த வேண்டாம் என்று  IPPB‌ அதிகாரிகள் மற்றும் அஞ்சல்துறை அதிகாரிகளுக்கு தாங்கள் அறிவுறுத்தல்கள் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த IPPB‌ அதிகாரிகள் மற்றும் அஞ்சல்துறை அதிகாரிகளின்  அணுகுமுறைகள் தொடர்ந்தால், நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்ட  நடவடிக்கைகளை தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவோம் என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்." என‌ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பா கரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு -நெல்லை 
                                     

Monday, May 18, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                        முக்கிய செய்திகள் 
*மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் Google Meet Web application மூலம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் .கோட்டங்கள் தங்களது கோட்டத்தின் சார்பாக பயிற்சிக்கு ஊழியர்களை பரிந்துரைக்கும் .அதன் அடிப்படையில் அந்த ஊழியர் தனது செல் அல்லது லேப்டாப் 
   உதவியுடன்      Google Meet Web application  என்கின்ற செயலியை பதிவிறக்கம் செய்து விட்டு பயிற்சியில் பங்கேற்கவேண்டும் .
 முதலாவதாக இன்று SB CLAIM குறித்த பயிற்சிகள் நடப்பதாகவும் அதற்காக ஒரு கோட்ட அலுவலக ஊழியர் NOMINATE செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது  .
*ஊரடங்கிற்கு இடையிலேயும் மத்திய அரசு தனது தனியார்மய கொள்கையை அனைத்துத்துறைகளிலும் அமுல்படுத்திட துடிக்கிறது .இது குறித்து மத்திய அரசுஊழியர்கள் மகா சம்மேளனம் விடுத்த அறிக்கையில் வருகிற 22.05.2020 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்திட அழைப்புவிடுத்துள்ளது .
*IPPB கணக்குகளை பிடிக்கச்சொல்லி நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடிகளை கண்டித்து நமது சம்மேளனம் 16.05.2020 அன்று நமது இலாகா முதல்வர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தலமட்ட அதிகாரிகள் IPPB AEPS என்கின்ற பெயரில் ஊழியர்களை துன்புறுத்தும் போக்கை கைவிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது ..
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு -நெல்லை 

Saturday, May 16, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                     முக்கிய செய்திகள் 
*நமது கோட்டத்திற்கு புதிய SSP ஆக M.S.பாலசுப்ரமணியன்( AD Tech  CO  )அவர்கள் பதவி உயர்வு பெற்று வருகிறார்கள் . தன்னுடைய பெரும்பாலான சேவையை மண்டல /மாநில நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றியவர் .இயக்குனரகத்திலும் பணியாற்றியிருக்கிறார் .ஒய்வு பெறுவதற்கு  சிலமாதங்களே இருக்கும் சூழலில் JTS குரூப் A பதவியுயர்வை பெற்றிருக்கிறார் ..அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
* நமது கோட்டத்தில் புதியதாக GDS TO போஸ்ட்மேன் ஆக தேர்ச்சிபெற்ற தோழியர்கள் R .பகவதி(அம்பை ) ,A .முத்துலட்சுமி(அம்பை)   K .வள்ளி காஞ்சனா (டவுன் )N .ராமதங்கம்
வீ .கே .புரம் ) R .செல்வ அருணா (நாங்குநேரி ) அனைவருக்கும் NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .அனைவரும் நமது பேரியக்கத்தின் உறுப்பினர்களாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ..தோழியர்கள் அனைவருக்கும் அவரவர் விருப்ப இடங்களில் பணியாற்றிட உத்தரவிட்ட  கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் SSP அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
*20லட்சம் கோடி மத்திய அரசால் பொருளாதார மேம்பாட்டிற்கு வழங்கப்படும் நிலையில் மத்தியஅரசு ஊழியர்களின் பஞ்சப்படியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எல்லா தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல்மூன்று 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 

Friday, May 15, 2020

     அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -மூன்றாம் பிரிவு 
                            திருநெல்வேலி கோட்ட கிளை 
                                    திருநெல்வேலி --627001
-----------------------------------------------------------------------------------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                           கோட்ட சங்க செயற்குழு 
நாள் --19.05..2020  செவ்வாய்   நேரம் மாலை 05.30 மணி 
இடம் -திருநெல்வேலி  தலைமை  அஞ்சலகம் 
தலைமை -தோழர் T .அழகுமுத்து (கோட்ட தலைவர் )
பொருள் --1.நெல்லை கோட்ட சங்க மாநாடு நடத்துவது சம்பந்தமாக 
                       2. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )

அன்பார்ந்த தோழர்களே !
                              நமது சங்க அமைப்பு விதிகளின் படி ஒவ்வொரு கோட்ட மாநாடும்  24 மாதங்களுக்குள் நடத்திடவேண்டும் .அப்படி இல்லையென்றால் GRACE PERIOD  மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டு நடத்திடவேண்டும் .நமது 44 வது மாநாடு 2018 ஏப்ரல் மாதம் நடந்தது .ஆகவே இந்த காலக்கட்டத்திற்குள் நமது மாநாட்டை நாம் அரசாங்க அறிவிப்பின் படி MHA அறிவுறுத்தலை கடைபிடித்து சமுக விலகலை மேற்கொண்டு  நடத்திட தங்களின் ஆலோசனைகளை வழங்கிட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் .
(செயற்குழு உறுப்பினர்களுக்கு தனியாக அனுப்பப்பட்டுள்ளது )
                   நமது NFPE இயக்கத்தின் பலமே நாம் கடைபிடிக்கும் ஜனநாயக வழிதான் .
                                 வாழ்க NFPE ! வெல்க ஊழியர்கள் ஒற்றுமை !
                                                 நன்றி 
                                                                        தோழமை வாழ்த்துக்களுடன் 
    13.05..2020  
நெல்லை                                                                      SK .ஜேக்கப் ராஜ் 
                                                                                           கோட்ட செயலர் 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                          தொழிலாளியை  வி(மி )ரட்டும் கொ ரானவை விட பேராபத்து -தொழிலாளர் சட்ட திருத்தும் 
  கொரானா எனும் சர்வதேச பரவலை எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில் மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைப்பதில் முனைப்பு காட்டிவருவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது ..நடப்பில் உள்ள 44  தொழிலாளர் சட்டங்களை வெறும் 4  சட்டங்களுக்குள் அடக்கிவிட அல்ல அல்ல ஒடுக்கிவிட  மத்தியஅரசு முனைகிறது ..இன்று நடப்பில் உள்ள ஒவ்வொரு நலச்சட்டத்துக்கும் ஒரு வரலாறு உண்டு .குறிப்பாக EPF (1952)ESI போனஸ்(1965) பணிக்கொடை (1972) தொழில் தகராறு சட்டம் (1967) ஈட்டுறுதி .குறைந்தபட்ச ஊதியம் தொழிற்சாலை நிலை ஆணைகள் தொழில் பழகுநர் சட்டம் என்று வகைப்படுத்தப்பட்ட சட்டங்களால் தொழிலார்கள் நலன் ஓரளவாவது பாதுகாக்கப்பட்டு வந்தது .நாளொன்றுக்கு 8 மணி நேரம் வாரத்திற்கு 48 மணி நேரவேலை என்பதனை மாற்றி 
நாளொன்றுக்கு 12 மணி நேரம் வாரத்திற்கு 72  மணி நேரவேலை என்கின்ற அடிப்படையில் தொழிலரலர் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன .முந்தைய ஆட்சிக்காலத்தை விட தற்சமயம் இதனை அமுல்படுத்திட அதீத ஆர்வம் காட்டப்படுகின்றன .
உபி மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் நல சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன .ம்.பி .மாநிலத்தில் 1000  நாட்களுக்கு இந்த சட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன .இவைகளை தொடர்ந்து குஜராத் அசாம் கர்நாடக திரிபுரா பஞ்சாப்  என எல்லா கட்சி ஆட்சிசெய்யும்  மாநிலங்களும்  இதே பாதையில் பயணிக்கின்றன .
                                இன்று சாதாரண மக்களின் வாழ்வே கேள்விக்குறியாக இருக்கின்ற இந்த சூழலை பயன்படுத்தி  ஆளும் அரசு தொழிலாளின் மீது தொடர் தாக்குதலை தொடர்ந்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது .இதனை உழைக்கும் வர்க்கம் மட்டுமல்ல உழைக்கும் வெகுஜன அமைப்புகளும் இனைந்து எதிர்த்து போரிடவேண்டும் ---
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல்மூன்று -
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Thursday, May 14, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                       முக்கிய செய்திகள் 
*நமது கோட்டத்தில் புதியதாக தபால்காரராக தேர்ச்சிபெற்று பயிற்சியில் இருக்கும் ஐந்து ஊழியர்களுக்குஅவர்களுக்கான பணி உத்தரவுகள் இன்று  வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 
* சுழற்சி முறையில் பணிக்கு வராத ஊழியர்களிடம் முதலில் விடுப்பு விண்ணப்பிக்கவும் இரண்டாம் முறையும் பணிக்கு வராத ஊழியர்களுக்கு விதி 16 யின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மும்பை மண்டல அதிகாரி உத்தரவிட்டுள்ளார் .
*அஞ்சல் துறையில் Group A and Group B (Gazetted) அதிகாரிகளின் இடமாறுதல்களை மறு உத்தரவு வரை நிறுத்திவைத்துள்ள நிலையில் மத்திய அரசன் Ministry of Housing and Urban Affairs  துறை நிர்வாக காரணங்களை தவிர இதர ஊழியர்க்ளுக்கு சுழல் மாறுதல் உத்தரவை ஏப்ரல் 2021 வரை நிறுத்திவைத்துள்ளது ..
*நாட்டில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும் அதனால் அஞ்சலகங்கள் தங்களது வேலைநேரத்தை வழக்கம்போல் செயல்படுத்தவும் கடலூர் கோட்ட அதிகாரி உத்தரவை பிறப்பித்துள்ளார் 
* நான்கு ஊழியர்களுக்கு கொரானா பாதிப்பினால் மூடப்பட்ட சென்னை திருவல்லிக்கேணி அஞ்சலக பட்டுவாடா மயிலாப்பூர் அஞ்சலகத்தில் வைத்து இயக்கப்படுவதாக சென்னை மண்டல அதிகாரி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் .
*பொருளாதார நெருக்கடி என்ற போர்வையில் தொழிற்சாலைகளுக்கு  வேலைநேரத்தை அதிகரிக்கும் உ.பி மற்றும் மத்திய பிரதேச அரசுக்கு  வெகுஜனமேடைகளின் கூட்டமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T .புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு -நெல்லை 

Wednesday, May 13, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                    கேரளா மாநிலத்தில் அஞ்சல் JCA (NFPE -FNPO) சார்பாக MHA  வழிகாட்டுதலின் படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்துதர வேண்டி 12.05.2020 அன்று ஒருநாள் PROTEST DAY கடைபிடிக்கப்பட்டது .
*பார்சல் இயக்குனரகம் அத்தியாவசிய பொருள்களை அனுப்பிட  மீண்டும் ஒரு வழிகாட்டுதலை 11.05.2020 அன்று வெளியிட்டுள்ளது 
*மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று மத்திய நிதியமைச்சக செய்திக்குறிப்பு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது .
*பல்வேறு துறைகளில் ஊரடங்கு காலத்தில் அலுவலகத்திற்கு வர இயலாத ஊழியர்களின் நிலை குறித்து பணிக்கு வரமுடியாத நாட்களை எவ்வாறு கணக்கிலெடுப்பது என்று உத்தரவுகளை பிறப்பித்துவருகிறது .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Tuesday, May 12, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                  நன்றி ! நன்றி ! நன்றி !
*ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் IPPB கணக்குகளை தொடங்க ஊழியர்களை  நிர்பந்திக்கும்  தமிழக அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து அஞ்சல் நான்கு தமிழ்மாநிலச்சங்கம் விடுத்த அழைப்பினை ஏற்று 11.05.2020 அன்று கருப்பு அட்டை இயக்கத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
*தோழியர் A .பசுமதி APM A/CS HSG II  திருநெல்வேலி HO அவர்கள் தனது சொந்த கோட்டமான சிவகங்கை கோட்டம் மானாமதுரை தலைமை அஞ்சலகத்திற்கு APM A/CS HSG II  ஆக விருப்ப இடமாறுதலில் சென்றார்கள் .நமது கோட்டத்தில் பணியாற்றிய இருவருடங்களில் நமது தொழிற்சங்க இயக்கத்திலும் குறிப்பாக மகிளா கமிட்டி  கன்வீனராக பொறுப்பேற்று மிக சிறப்பாக செயல்பட்டார்கள் அவர்களுக்கு நேற்று 11.05.2020 திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்கள் சார்பாக பிரிவு உபசாரவிழா நடைபெற்றது .தோழியரின் எஞ்சிய பணி காலங்கள் சிறப்புடன் அமைய நெல்லை NFPE வாழ்த்துகிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பாகரன் கோட்டசெயலர் அஞ்சல் நான்கு நெல்லை 
.

Monday, May 11, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                           கருப்பு அட்டை  அணிந்து பணியாற்றுவீர் !
   முறைசாரா தொழிலாளர்களுக்கு கொரானா நிதி வழங்கிட  மாநில அரசு அஞ்சல் துறையில் உள்ள IPPB கணக்கு மூலமமும் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட  முடிவெடுத்துள்ளது 
அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை .ஆனால் அதனடிப்படையில் நமது மாநில நிர்வாகம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் ஊழியர்களை பணியாற்றிட நிர்பந்திப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது .
நாளுக்குநாள் கொரானா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் அஞ்சல் ஊழியர்களை தொடர் நெருக்கடிக்கு  உள்ளாக்குவது ஏனோ தெரியவில்லை .
*.ஏற்கனவே கொரானா தொற்று பரவலை தடுக்க பயோமெட்ரிக் பணிகளை நிறுத்திவைத்திருக்கும் சூழலில் ..........
*முறையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி ஊழியர்களை வீடுவீடாக கணக்குபிடிக்க சொல்லுவது ........
*சமூக விலகல் என்பது முற்றிலும் மீறப்பட்டு இருக்கும் நிலையில் .......
*மற்ற துறைகளில் எல்லாம் ரோஸ்டர் முறையில் பணியாற்றிடும் போது நமது துறையில் மட்டும் ஞாயிறு /விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொலைபேசியிலும் வாட்ஸாப் மூலமும் நெருக்கடி கொடுப்பது ....
இவைகளை கண்டித்து தமிழக அஞ்சல் நான்கு சங்கம் விடுத்துள்ள கருப்பு சின்னம் அணிவித்தல் போராட்டத்தில் வழக்கம்போல நெல்லையில் அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சங்கங்கள் இணைந்து நடத்திட முடிவெடுத்துள்ளோம் .
         மற்ற கோட்டங்களை ஒப்பிடுகையில் நமது கோட்டத்தில் இந்த  தாக்கங்கள் குறைவாக இருந்தாலும் நமது ஒன்றுபட்ட எதிர்ப்பை மாநில நிர்வாகத்திற்கு காட்டவேண்டியது காலத்தின் கட்டாயம் .
            நமக்கு மட்டுமல்ல பல உபகோட்ட  அதிகாரிகளுக்கும் டார்ச்சர் தொடருகிறதாம் .IPPB கணக்கு தொடங்காத ஊழியர்களிடம் ஸ்டேட்மென்ட்  பெற்று அனுப்பவேண்டுமாம் .எந்த உபகோட்டங்களில் குறைவாக கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதோ அந்த ASP களுக்கு மேல்மட்டத்தில் இருந்து மேலும்  நெருக்கடிகள் ...
              இந்த அடிமை முறை நீங்கிட --இழிவு நிலை அகன்றிட  ஒன்றுபட்டு  போராடுவோம் ..
அனைவருக்கும் இன்று கருப்பு பேட்ஜ் அனுப்பப்பட்டுள்ளது .கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணியாற்றும் படி கேட்டுக்கொள்கிறோம் 
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
-T.புஷ்பாகரன்  கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Saturday, May 9, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                  கொரானா நோயினால் அஞ்சல் ஊழியர் மும்பையில் பலி --
  *மும்பை GPO வில் தபால்காரராக பணியாற்றிய தோழர் A.B.ஜெதி 
08.05.2020 அன்று கொரானா  தொற்றினால் பலியானார் .அதே GPO வில் பணியாற்றிய தோழியர் M.S.TALAWEDEKAR  எனும் எழுத்தர் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் 
*சென்னை திருவல்லிக்கேனி அஞ்சலக ஊழியருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து திருவல்லிக்கேனி அஞ்சலகம் மற்றும் அதன் வளாகத்திற்குள் செயல்படும் PSD மூடப்பட்டுள்ளது ..
                      இந்த பின்னணியில் அஞ்சல் வாரியம் அடுத்தடுத்த உத்தரவுகளை ஏவுகணை போல் ஊழியர்கள் மேல் பாய்ச்சுகிறது 
1.நமது  அஞ்சல் மாநில நிர்வாகம் பயோமெட்ரிக் முறையில் Aeps பணப்பரிவர்த்தனை செய்ய வற்புறுத்தி வருகிறது. ஆகவே மண்டல, கோட்ட நிர்வாகங்கள் Mela,
Mega mela  target அமைத்து தபால்காரர் ஊழியர்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது.
2.Operations at PostOffice Passport Sevak Kendra under Green & Orange Zone Districts shall resume functioning w.e.f 06th May 2020 ... MEA ()4-05-20)
          கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவோம் -தபால்காரர் சங்கம் வேண்டுகோள் 
   நாளுக்கு நாள் கொரானா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து நம்மை அச்சுறுத்தி வரும் வேளையில் ஊழியர்கள் அவர்தம் குடும்பங்கள், பொதுமக்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொள்ளாமல் இதுபோன்ற உத்தரவிட்டுள்ளதை அதை தமிழ்மாநில NFPE சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இலக்குகள் நிர்ணயித்து மேளாக்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யவேண்டுமென ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது உடனடியாக கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தி 09.05.2020,10.05.2020 &11.05.2020 ஆகிய நாட்களில் கருப்பு பட்டை அணிந்து பணத்தேவைக்கு கோரிக்கை விடுக்கும் பொதுமக்களுக்கு மட்டும் பரிவர்த்தனைகள்  செய்வது என தமிழ் மாநில அஞ்சல் நான்கின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
                    நமது கோட்டத்தில் வருகிற 11.05.2020 அன்று அனைத்து ஊழியர்களும்  கருப்பு பேட்ஜ்  அணிந்து பணியாற்றிடுவோம் இதற்கான பேட்ஜ்   உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் .
                                          நன்றி தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Friday, May 8, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                        மாநிலச்சங்கத்திற்கு மனமார்ந்த நன்றி !நன்றி !
ஏழாவது சம்பளக்குழுவின் அமுலாக்கத்திற்கு பின் (01.01.2016 முதல் 25.07.2016) MACP பதவிஉயர்வு பெற்றவர்கள் தங்கள் ஆண்டு உயர்வினை மாற்றிட   கொடுக்கப்பட்ட OPTION  மீதான ஆடிட் அலுவலகம் பிறப்பித்துள்ள ஆட்சேபனையை ரத்துசெய்திடவும் இதனால் பலகோட்டங்களில்  ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம்  என்ற நிலையை நீக்கிடவும் மீண்டும் CPMG அவர்களுக்கு இரண்டாம் முறையாக கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள மாநில செயலர் தோழர் .வீரமணி அவர்களுக்கும் அன்புத்தலைவர் அறிவுஜீவி KVS அவர்களுக்கும் மேலும் இந்த பிரச்சினை குறித்து மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நமது நெல்லை கோட்ட முன்னாள் செயலர் PSD திருநெல்வேலி மேனேஜர் தோழர் 
R .ஹரிஹரகிருஷ்ணன் அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
*நமது துறையில் உள்ள குரூப்   A மற்றும் குரூப் B (GAZETTED ) அதிகாரிகளுக்கும் இடமாறுதல் உத்தரவை அஞ்சல்வாரியம்  நிறுத்திவைத்துள்ளது ஏற்கனவே  குரூப் C  மற்றும் குரூப் B (NON -GAZETTED ) ஊழியர்க்ளுக்கும் சுழல் மாறுதல் உத்தரவுகள் மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .
*ஏற்கனவே பரவிக்கொண்டிருக்கும் கொரானா பீதிக்குஇடையில் அஞ்சல்துறையில் AEPS கான சிறப்பு முகாம்களை மூன்றுநாட்கள் (09
052020 முதல் 11.02.2020) சிறப்புமுகாம் நடத்திட அஞ்சல் வாரியம் பிறப்பித்த உத்தரவினை ரத்துசெய்திட  பல்வேறு தரப்பில் இருந்தும் மாநிலநிர்வாகத்தை வலியுறுத்திவருகிறார்கள் 
*நமது கோட்டத்தில் 24..03.2020 முதல் ஊழியர்களின் விடுப்பினை ஒழுங்கு படுத்திட  கோட்ட நிர்வாகம் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிற்து .ஆகவே விடுபட்ட ஊழியர்கள் முறையான விடுப்பு விண்ணப்பங்களை விரைந்து கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .50 வயதினை கடந்தவர்களுக்கு 04.04.2020 வரை மருத்துவ சான்றிதழ் இன்றி COMMUTED LEAVE விண்ணப்பிக்கலாம்  
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்[பாகரன் 
கோட்ட செயலர்கள் நெல்லை 




Tuesday, May 5, 2020

                                                         வருந்துகிறோம் 
நமது இயக்கத்தின் தீவிர பற்றாளர்  2008 யில் பணிஓய்வு பெற்றிட்ட 
தோழர் A .மைக்கேல் அவர்கள் (SPM முருகன்குறிச்சி )இன்று உடல்நல குறைவால் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் ..தோழரை இழந்துவிடும் குடும்பத்தினருக்கு NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது 

Monday, May 4, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                                              முக்கிய செய்திகள் 
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் அறைகூவலின் படி மே தினத்தை முன்னிட்டு DA  முடக்க எதிர்ப்பு நாளாக நாடெங்கிலும் 
கடைபிடிக்கப்பட்டது .ஜூலை 2021 வரை DA முடக்கம் என்பதினை சர்வசாதாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது .அதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அதனதன் விருப்பத்திற்கேற்ப அரசு ஊழியர்களை குறிவைத்தே பல சலுகைகளை நிறுத்திவைத்துள்ளது .ஏற்கனவே ஒருநாள் ஊதியத்தை பிரதம மந்திரி அவர்களின் நிவாரண நிதிக்கு ஊழியர்கள் நன்கொடை கொடுத்துள்ளனர் .மேலும் மேலும் பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் ஊழியர்களின் மேல் திணிக்காதீர்கள் என மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது .
* புதிய உறுப்பினர்களை சேர்த்திடுவதற்கான காலநீட்டிப்பு ஜூன் 2020 வரை கொடுக்கப்பட்டுள்ளது .விடுபட்டவர்கள் யாரேனும் இருப்பதாக தெரிந்தால்  கோட்ட சங்கத்தை அனுகும்படி கேட்டுக்கொள்கிறோம் .RULE 38 இன் கீழ் வந்தவர்கள் தங்களுக்கு யூனியன் சந்தா பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதனை உறுதிபடுத்திக்கொள்ளவும் .
*தமிழகத்தில் மீண்டும் ADHOC அடிப்படையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன .இந்த பயன்பாட்டை நமது பிரிவிற்கும் HSG I மற்றும் HSG II பதவிகளை நிரப்பிட மண்டல /மாநில நிர்வாகங்கள் முன்வருமா ?
*RULE 38 யின் இடமாறுதல்களை விரும்பும் தோழர்கள் ஜூன் மாதத்திற்குள் விண்ணப்பித்திடவேண்டும் (இலாகா மற்றும் GDS ஊழியர்கள் ) 
    நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் 
கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, May 2, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                    முக்கிய செய்திகள் 
                           * நமது கோட்டத்திற்கு புதிய  SSP ஆக திரு .S.குமார் (AD STAFF RO CHENNAI) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் .கடந்த சில வருடங்களாக ADHOC பதவி உயர்வுகள் தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஐந்து SP கள்  SSP ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர் ..
* நமது கோட்டத்தில் மீண்டும் 5 தோழர்கள் தபால்காரர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள் .
1.R .பகவதி 2.A .முத்துலட்சுமி 3.K .வள்ளிகாஞ்சனா  4.N .ராமலிங்கம் 
5.R .செல்வ அருணா 
               பதவி உயர்வு பெற்ற அனைவரையும்  NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது ..அவர்களுக்கான பயிற்சிகள் 04.08.2020 முதல்  16.05.2020 வரை நடைபெறுகிறது 
       *                          மேதின விழா கொடியேற்றம் 
                    மே  தினத்தை முன்னிட்டு நேற்று 01.05.2020 அன்று திருநெல்வேலி HO வில் மேதின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது .நமது அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் T.அழகுமுத்து அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்பித்தார்கள் .
 * பஞ்சப்படி முடக்கத்தை கண்டித்து நேற்று மத்திய அரசு ஊழியர்களின் சார்பாக நாடெங்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது .
               நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகாரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, May 1, 2020

     அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                              உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் 

 நேற்று    நமது  தோழர்கள் மாசனமுத்து தபால்காரர் நாங்குநேரி மற்றும் தோழர் SK .பாட்சா அவர்க்ளின் பணிநிறைவு விழா மிக சிறப்பாக நடைபெற்றது .பணிஓய்வு பெற்ற தோழர்களின் பணிஓய்வு காலங்கள் சிறப்புடன் அமைய மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்