அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
கருப்பு அட்டை அணிந்து பணியாற்றுவீர் !
முறைசாரா தொழிலாளர்களுக்கு கொரானா நிதி வழங்கிட மாநில அரசு அஞ்சல் துறையில் உள்ள IPPB கணக்கு மூலமமும் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட முடிவெடுத்துள்ளது
அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை .ஆனால் அதனடிப்படையில் நமது மாநில நிர்வாகம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் ஊழியர்களை பணியாற்றிட நிர்பந்திப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது .
நாளுக்குநாள் கொரானா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் அஞ்சல் ஊழியர்களை தொடர் நெருக்கடிக்கு உள்ளாக்குவது ஏனோ தெரியவில்லை .
*.ஏற்கனவே கொரானா தொற்று பரவலை தடுக்க பயோமெட்ரிக் பணிகளை நிறுத்திவைத்திருக்கும் சூழலில் ..........
*முறையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி ஊழியர்களை வீடுவீடாக கணக்குபிடிக்க சொல்லுவது ........
*சமூக விலகல் என்பது முற்றிலும் மீறப்பட்டு இருக்கும் நிலையில் .......
*மற்ற துறைகளில் எல்லாம் ரோஸ்டர் முறையில் பணியாற்றிடும் போது நமது துறையில் மட்டும் ஞாயிறு /விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொலைபேசியிலும் வாட்ஸாப் மூலமும் நெருக்கடி கொடுப்பது ....
இவைகளை கண்டித்து தமிழக அஞ்சல் நான்கு சங்கம் விடுத்துள்ள கருப்பு சின்னம் அணிவித்தல் போராட்டத்தில் வழக்கம்போல நெல்லையில் அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சங்கங்கள் இணைந்து நடத்திட முடிவெடுத்துள்ளோம் .
மற்ற கோட்டங்களை ஒப்பிடுகையில் நமது கோட்டத்தில் இந்த தாக்கங்கள் குறைவாக இருந்தாலும் நமது ஒன்றுபட்ட எதிர்ப்பை மாநில நிர்வாகத்திற்கு காட்டவேண்டியது காலத்தின் கட்டாயம் .
நமக்கு மட்டுமல்ல பல உபகோட்ட அதிகாரிகளுக்கும் டார்ச்சர் தொடருகிறதாம் .IPPB கணக்கு தொடங்காத ஊழியர்களிடம் ஸ்டேட்மென்ட் பெற்று அனுப்பவேண்டுமாம் .எந்த உபகோட்டங்களில் குறைவாக கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதோ அந்த ASP களுக்கு மேல்மட்டத்தில் இருந்து மேலும் நெருக்கடிகள் ...
இந்த அடிமை முறை நீங்கிட --இழிவு நிலை அகன்றிட ஒன்றுபட்டு போராடுவோம் ..
அனைவருக்கும் இன்று கருப்பு பேட்ஜ் அனுப்பப்பட்டுள்ளது .கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணியாற்றும் படி கேட்டுக்கொள்கிறோம்
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று
-T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு
0 comments:
Post a Comment