...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 4, 2017

                           ---------- புதிய கோரிக்கைகள் ....
மழை நின்றாலும் 
தூவானம் விடுவதில்லை 
எத்தனை முறை -இயக்குனரகம் 
விளக்கங்கள் தந்தாலும் 
விடுமுறை நாட்களில் பயிற்சிகளை 
அறிவிப்பது ஏன் ?

எத்தனை முறை அதை நிறுத்தினாலும் 
மீண்டும் தலை தூக்குவது ஏன் ?
எத்தனை முறை 
மாநில சங்கத்திடம் முறையிடுவது ?
மாநிலச்சங்கமும் சளைக்காமல் 
நமக்காக எத்தனை முறை 
நிர்வாகத்தோடு மல்லுக்கு நிற்பது ?

ஆட்சிகள் மாறினாலும் -சில 
அற்ப காரியங்கள் அரங்கேறத்தான் செய்கிறது 
மன அழுத்தங்களில் இருந்து 
இப்போ தான் மீண்டிருக்கிறான் அஞ்சல் ஊழியன் 
மீண்டும் அவன் முதுகில் பாரங்கள் 
முகம் முழுவதும் கோரங்கள் 

அஞ்சல் ஊழியன் என்ன பொதி சுமக்காவா வந்தான் ?
மீண்டும் மீண்டும் டார்கெட் -
அப்பொழுதெல்லாம் மார்ச் 
வந்தால் தான் மேளா வரும் -
மேலிருந்து புது புது கேள்வி வரும் 
இப்பொழுதோ ஆண்டுமுழுவதும் மேளாகள் 
நித்தம் நித்தம் பத்து கட்டளைகள்

ஊதிய குழு -பதவியுயர்வு 
தனியார் மயம் -காலி இடங்கள் 
இவைமட்டுமல்ல நம் கோரிக்கை 
பணி செய்யும் இடத்தில்  நிம்மதி 
அரட்டல் -உருட்டல் இல்லாத நிர்வாகம் -
கெஞ்சாமல் கிடைக்க வேண்டும் விடுப்பு -எவருக்கும் 
அஞ்சாமல்  வாழும் அலுவலக  வாழ்க்கை -என்ற 
புதிய கோரிக்கைகளை ஏந்தியும் 
போராட புறப்படுவோம் 


                        --------------------------------SK .ஜேக்கப் ராஜ் -----------------------------------

0 comments:

Post a Comment