...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 3, 2017

                                 தோழர் ஏழுமலை பணிநிறைவு 
(தருமபுரி கோட்டத்தில் பல்லாண்டுகளாக கோட்ட செயலராக --தலைவராக வலம்வந்த தோழர் ஏழுமலை அவர்கள் 03.10.2017 அன்று தன் விருப்ப ஓய்வில் செல்கிறார் அவர்களுக்கு பேரவையின் சார்பாக வாழ்த்துக்கள் )

தருமபுரி தந்திட்ட மற்றுமொரு தன்னிகரில்லா தலைவன் 
தான் ஏற்றிருந்த கொள்கையில் சறுக்காத தோழன் 
நிர்வாகத்திற்கு எரிமலை -எங்களுக்கும் 
இயக்கத்திற்கும் கிடைத்த பனிமலை 
 இளையவர்களை  பொறுப்பினில் 
ஏற்றி அழகுபார்த்த அழகுமலை  
எங்கள் ஏழுமலை வாழ்க !

சோர்ந்து பார்த்ததில்லை --அடுத்தவரை 
சார்ந்து வாழ்ந்ததில்லை 
சமரசம் இல்லா  கொள்கை உண்டு 
சாமரம் வீச தெரியாத சரித்திரம் உண்டு 

அதிகாரிகளிடம் வாதிடும் போதும் 
அயலாரிடம் மோதிடும் போதும் 
எத்தனை தெளிவு -எத்தனை உறுதி 

CSI அமுலாக்கத்திற்கு நீதான் முதல் பலி 
பட்டியல் நீளும் முன் காணவேண்டும் புது வழி 

நீ கோட்ட செயலராய் மிளிர்ந்த நாட்கள் 
தமிழகத்தில் தருமபுரி  ஒளிர்ந்த நாட்கள் 
தலைமை பொறுப்பை ஏற்றபிறகுதான் 
தடையின்றி இளைஞர்களை தவழ விட்டாய் 

நீ சுயமரியாதைக்காரன் 
ஒருநாள் விடுப்புக்கும் -எவர் 
காலையும் பிடிக்கவேண்டாம் என 
தன் விருப்ப ஓய்வை 
தானாகவே தரித்து கொண்டாய் 
உன் முடிவு நிர்வாகத்திற்கு எச்சரிக்கையாகவும் 
எங்களுக்கு எரிச்சலாகவும் இருக்கத்தான் செய்கிறது 
உன் முடிவை மாற்ற உன்னாலே முடியாது 
எனக்கு தெரியும் --
வாழ்க அண்ணன் ஏழுமலை --உன் வேள்வியில் 
எங்கள் நெஞ்சுள் பிறக்கும் புது எரிமலை 
                        ------------தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --------------------------




0 comments:

Post a Comment