...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 5, 2017

அந்தநாள் ஞாபகம் – கடிதங்கள்! 
(அஞ்சல் ஊழியர்களுக்கு சமர்ப்பணம்...)



தபாலும் தந்தியும்
தடைகள் இன்றி 
தழுவிய காலம் அது!
ஊதா நிற காகிதத்தில் 
உள்ளத்தை அனுப்பிய
உலகம் அது!
காக்கி நிற உடையில்
கடிதம் சுமந்து வரும்
கண்கண்ட தெய்வம் -
தபால்காரர்!
வீட்டுக்கு அழையா
விருந்தாளியாய்...
வீட்டில் ஒருவராய்...
விரும்பியே கடிதத் தகவல்
விற்பவராய் ...
தபால்காரர்!
படிப்பற்ற பாமரனுக்கும்
பக்குவமாய் படித்துக்காட்டும்
பண்பும் பணிவும்
பாசத்தை பரிசாக்கும்!
கோடையிலும் குளிரிலும்
கொட்டும் மழையிலும்
கொணர்ந்த செய்தி
கொடுக்காமல் சென்றதில்லை
காக்கியாரின் கடமை !
மிதிவண்டி பயணம்
மிக தூரமெனினும்
கடிதம் காட்டும் முகவரியில்
மிதிவண்டி நிற்பது
கடமையின் உச்சம்!
கடிதமில்லை மிச்சம்!
பொங்கல் வாழ்த்தினை
பிரபலங்கள் பிம்பம் ஏந்திய  
அட்டைகள் கூறும்!
பிறப்பின் எதிர்சொல்லை
பெரும்பாலும் உச்சரிப்பது
தந்திகள்!
வீட்டு மூலையில்
வளைந்த கம்பியில்
வரிசையாய் கோர்த்த
கடிதக் கற்றை
(“)அன்புள்ள(”) வார்த்தைகளை
சுமந்து நிற்கும்!
முகவரி கோடுகள் வரை
முந்தி நிற்கும் கடிதவரிகள்
முழுமை பெற இடம் தேடி
மூச்சு திணறி ஒளியும்!
 “நலம்.நலமறிய ஆவல்.” இல்
  நனையும் மனது
மற்றவை நேரில்...” கண்டு
  மகிழ்ச்சியுறும்!
Thanks to :  பா.வெ. ,  sbvenkat2008@gmail.com

4 comments:

  1. Supper kavithai.I will go back
    35 years.we wait the history return.people still wait for those days.once again thanks.
    Convey greetings to pa.'ve
    Your s ponnuraj
    eX edda/mc karaiyirppu
    6/10/2017

    ReplyDelete
  2. அந்த நாள் ஞாபகம் வந்தது அன்பு உள்ள ங்களை கொள்ளை கொண்டது

    ReplyDelete
  3. அந்த நாள் ஞாபகம் வந்தது அன்பு உள்ள ங்களை கொள்ளை கொண்டது

    ReplyDelete
  4. அந்த நாள் ஞாபகம் வந்தது அன்பு உள்ள ங்களை கொள்ளை கொண்டது

    ReplyDelete