...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 21, 2017

நெல்லையில் நடைபெற்ற அண்ணன் பாலு அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் -புதிய பென்ஷன் குறித்த சிறப்பு விவாதங்கள் 
அஞ்சாநெஞ்சன் அண்னன் பாலு அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் தலைமையில் 20.10.2017 அன்று பாளையம்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது .அண்ணன் பாலு அவர்களின் திருஉருவ படத்திற்கு நமது மூத்த தோழர் N .கண்ணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார் .தோழர் C .வண்ணமுத்து அவர்கள் அண்ணனின் நினைவுகளை பகிர்ந்தார் .அதன் பின் புதிய பென்ஷன் குறித்த விவாதங்கள் நடைபெற்றது .தோழர் பூபாளன் அவர்கள் விவாதத்தை தொடங்கிவைத்தார் .அவரை தொடர்ந்து தோழர்கள் ருக்மணி கணேசன்அமைப்பாளர் G.சிவகுமார் தோழர் பாலகுருசாமி  நெல்லை மகிளா கமிட்டி உறுப்பினர் தோழியர் முத்துப்பேச்சி ஆகியோர் NPS குறித்து விவாதித்தனர் .இளைய தோழர்களின் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் NPS திட்டத்தை பிரித்து மேய்ந்தனர் .இறுதியாக கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன .
1.எதிர்வரும் மாநில மாநாட்டில் NPS குறித்த முக்கிய விவாதங்களை இளைய தோழர்களின் பங்களிப்போடு நடத்திடவும் -அதற்கான தனியாக ஒரு அமர்வை நடத்தவும் மாநிலசெயலரிடம் அனுமதி கோருவது 
2.NPS குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி என்னவானது -அதனையுடைய அறிக்கையை உடனடியாக வெளியிடக்கோரி அகிலஇந்திய அளவில் இயக்கங்களை நடத்த மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தை வலியுறுத்துவது 
3.மாநில -மத்திய சங்கங்களுக்கு NPS குறித்த புதிய கோரிக்கைமனுவை வடித்தெடுக்க ஒரு குழுஅமைப்பது (தோழர் பூபாளன் -சிவகுமார் -முத்துப்பேச்சி மேலும் ஆர்வம் உள்ள தோழர்கள் இணைந்து கொள்ளலாம் )
4.வருகிற 2018 ஜனவரியில் நெல்லையில் புதிய பென்ஷன் குறித்த மாபெரும் ஒருநாள் கருத்தரங்கம் நடத்துவது என்றும் -அதில் அகிலஇந்திய தலைவர்களை கலந்துகொள்ள வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது .
5.23.10.2017 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முழுஅளவில் தோழர்கள் பங்கேற்பது என்றும் -முகவர்கள் அனைவரையும் ஆர்ப்பாட்டத்தில் அழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது 
6.GDS கமிட்டி குறித்த இன்றைய நிலையும் விரிவாக விளக்கி பேசப்பட்டது .
  இறுதியாக மாநில மாநாட்டில் நமது பங்கு குறித்து தோழர் அழகுமுத்து அவர்களும் -இறுதியாக அஞ்சல் நான்கின் கோட்ட உதவி செயலர் தோழர் புஷ்பாக ரன் அவர்கள் உரையாற்றியபின் அஞ்சல் நான்கின் மாநில உதவி செயலரும் நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட செயலருமான தோழர் SK .பாட்சா அவர்கள் நன்றிகூற பொதுக்குழு முடிவுற்றது .பொதுக்குழுவில் சுமார் 100 கும்மேற்பட்ட   தோழர்கள் ஆர்வமோடு கலந்துகொண்டு சிறப்பித்தது -குறிப்பாக தோழியர்கள் இளைய தோழர்கள் படையெடுத்து கருத்துக்களை பரிமாறியது எங்களுக்கு புதிய எழுச்சியையும் -நம்பிக்கையையும் கொடுத்துள்ளது .நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 








1 comment:

  1. 100 participants itself focused the function was very supportive towards Graceful attitude of the members to Annan The Great Balu

    ReplyDelete