...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 28, 2018

                          தோழர் சேர்முக பாண்டியன் முதுநிலை கணக்கு அதிகாரி (Senior Accounts Officer) அவர்கள் , புது டில்லி CCA முன்னாள் கோட்ட செயலர் மானாமதுரை அவர்களுக்கு பணி ஓய்வு வாழ்த்துக்கள் 28.02.2018 


சேர்முக பாண்டியன் எனும் -கொள்கையின் 
நேர்முக பாண்டியனே !
சீர்மிகு சிவகங்கையில் அஞ்சல் இயக்கங்களை 
போர் முகத்தில் வளர்த்தவனே !

பதவி உயர்வு வந்தால் 
பழசெல்லாம் பறந்துபோகும் என்ற 
பதத்தை பொய்யாக்கி -அதே 
பழக்கத்தை பாதுகாத்துவரும் 
அதிசய தோழனே !
ஒப்பற்ற தலைவர்கள் 
OP குப்தா -பிரேம் -ஞானையா 
வழிவந்தவனே --
ஒற்றுமை எனும் தீபம் காக்கவே 
புதிய தலைமுறைக்கும் சிவகங்கையில் 
வழி கட்டுபாவனே ! 
மதுரை மண்டல அலுவலகத்தில் 
கொந்தளிப்பு காலங்களில் கணக்கு அதிகாரி நீ -
RO க்கு வந்துசெல்லும் தொழிற்சங்க நிர்வாகிகளை 
ஆரத்தழுவி வரவேற்றது அன்று நீ மட்டும் தான் 
 அலுவல் நிமித்தமாய் கோட்டங்களுக்கு செல்லும் போதும்  
நிர்வாகிகளின் இடம் தேடி 
தோழமை விசாரிக்கும் உயர் குணம் உனக்குண்டு 
இயக்கமும் -இலக்கியமும் உனக்கு 
இரண்டு கண்கள் 
இரண்டிலும் ஆழமாய் 
வேரூன்றி நிற்கிறாய் 
பணம் கேட்டால் கடனாக தரும் 
நண்பர்கள் உண்டு -ஆனால் 
வச்சிருக்கும் புத்தகத்தை கடனாக தர 
பல நண்பர்கள் தயங்குவார்கள் 
புத்தகத்தை அனுப்பி -மீண்டும் 
பத்திரமாய் பெற்றுக்கொள்ளும் 
பழக்கமும் இன்னும் உண்டு 
தோற்றத்திலும் கம்பீரம் -தொழிற்சங்கம் 
தோற்பதில்லை என்பதே உன் மந்திரம் 
சுறுசுறுப்பிற்கும் பஞ்சமில்லை -ஒருநாளும் 
இறுமாப்போடு பேசியதில்லை 
நீங்களும் அண்ணன் செல்வராஜும் 
இரட்டை குழல் துப்பாக்கிகள் தான் 
அன்றைய மானாமதுரை-அதிகாரிகளிடம் 
அடிபணியாமல் வளர்ந்ததற்கு 
நீங்கள் சிந்திய  தியாகங்கள் தான் 
உன் அடையாளமாய் 
பாரதியை வைத்திருந்தாய் --
இலக்கிய உலகின் வித்தகர்களையும் 
நெருக்கத்திலே பெற்றிருந்தாய் 
பணிஓய்வு நாட்கள் சிறக்கவும் -
இனி வரும் நாட்கள் மீண்டும் சிலிர்க்கவும் 
விட்டுப்போன பணிகளை 
செப்பனிடு ! சீர்படுத்து !
வாழ்க !என வாழ்த்தி மகிழ்கிறேன் 
  தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 












0 comments:

Post a Comment