...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 31, 2019

இன்று பணிநிறைவு பெறுகின்ற அன்பு தோழர் ஆனந்தகண்மணி 
அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள் 
                                      பணிஓய்வு பாராட்டு விழா 
நாள் 31.10.2019     வியாழக்கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் -புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலை பள்ளி புஷ்பவனம் ரோடு பணகுடி 
                                  ஆனந்த கண்மணி -ஒரு 
                                  அமைதியின் அடையாளம் 
                                  அன்பின் பரிமாணம் 
                                  அனைவரிடமும் -இன்முகத்தோடு பழகி 
                                  அலுவலகத்தை  ஆனந்தத் தால் அலங்கரித்தவர் 
                                  எதிர்கண்ட சோதனைகளை 
                                  அச்சமின்றி  சந்தித்தவர் 
                                  சத்தமின்றி வென்றவர் 
                                   நமது இயக்கம் அறிவித்த அனைத்து 
                                   போராட்டத்திலும் பங்கேற்றவர் 
                                  தடைகளை தாண்டி நம்மோடு 
                                 தொடர்ந்து பணியாற்றியவர் 
அவர்களின் பணிஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                 
                                  
                                  

Wednesday, October 30, 2019

TRANSFER POLICY GUIDELINES CLARIFICATIONS

         Transfer policy guidelines –clarifications

Ministry of Communications, Department of Posts letter No. -12/1/2018-SPN-II dated 24th October, 2019.

I am directed to refer to Directorate’s communications number 141-141/2013-SPN-II dated 17.01.2019 vide which revised “Guide Lines for Transfer” was circulated to all Postal Circles. References were received from various Postal Circles/Service Associations pointing out some difficulties and seeking clarifications. The references have been examined and clarified as under:

Sl. No.
Issue raised
Clarifications
1.
Directorate’s instructions no. 141-260/91-SPB-II dated 21.01.1992 regarding intra-divisional transfer under Rule-38 from one Sub Division to another within the same divisions still applicable of not.
Transfer Policy Guidelines dated 17.01.2019 was issued in supersession of ll earlier guidelines in the matter. As such, instructions dated 21.01.1992 is not applicable as on date. Further , as per Para 3(B) (I) (ii), CPMG is the competent authority to approve intra-Circle transfer.
2.
Transfer under Rule-38 of Postal Assistant of Foreign Post to Postal Division shall be considered or not
As per the transfer policy guidelines, transfer from one distinct cadre to another is not allowed. Postal Assistant& Sorting Assistant in Foreign Post Office and Postal Assistant working in Postal Division/Posts Offices are two different cadres. Therefore, a Postal Assistant working in FPO cannot be transferred to Postal Divisions.
3.
Pending Rule-38 cases till 2018 will also be maintained in the Form-2 & Form-3 as per length of service of the official or as per date of receipt of these applications.
As clarified vide Directorates letter number X-12/1/2019-SPN-II dated 27.06.2019 at Sl No. 6, such applications shall be treated as to be received between 1st April to 30th June and shall be recorded in Form2 (Inward Register) & Form-3 (Outward Register) as per length of the service.
4.
The condition of 2 years or probation period should not be applied on GDS who are appointed as Postman.
The eligibility  condition of 2 year or probation period shall also be applied to Postman who were earlier GDS.
5.
Rotational Transfer  of PA (SBCO) within the clusters of the Region (inter cluster or intra cluster) may be approved by the DPS/PMG of the concerned Region.
Regional Head shall be the competent authority to approve rotational transfer of SBCO officials within a Region.
6.
Category of SC/ST/OBC candidates for the purpose of transfer under Rule-38 either one way or mutual exchange,
SC/ST/OBC candidates selected against UR vacancy may be treated as UR for the purpose of transfer only, whether by arrangement of mutual exchange or otherwise. For all other aspects, including promotions , such candidates will remain their status of reserved category and will get the benefit of reservation as applicable.

Yours faithfully,
            Sd/-
(Muthuraman C)
Assistant Director General(SPN)

Tuesday, October 29, 2019

                                            முக்கிய செய்திகள் 
PO & RMS Accountants Delhi Circle have filed OA 724 of 2019 for their representation of August 2018 onwards. Case Filed in January 2019 after exhausting all remedies available with the Department. Now after ten months hard practice, Department has filed the counter reply 
                                   ---------------------------

GPF Interest Rate 2019-20: 7.9% from October to December 2019

As per the Economic Affairs resolution issued on 21.10.2019, the General Provident Fund interest rate for the period from 1st October 2019 to 31st December 2019 will be 7.9%.
                                        -------------------------------------------------
அரசு மருத்துவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. .கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் 
                                     ---------------------------------------------
பிஎஸ்என்எல் ஊழியர்கள், அலுவலர்களின் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து  கடந்த காலங்களில் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களின்💪 நிர்ப்பந்தமே இந்த அமைச்சரவையின் சரியான திசையிலான  முடிவுகளுக்கு காரணம். தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.  💅.  பொதுத்துறை காக்க ஒருங்கிணைந்த போராட்டம் அவசியம் என உணரவைத்த பிஎஸ்என்எல் சங்கங்களுக்கு நன்றி.🌷
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, October 28, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                                   இந்த வார நிகழ்ச்சிகள் 
30.10.2019 அன்று தோழர் துளசிராமன்LSGPA நான்குனேரி அவர்களின் மகன் திருமணவிழா --பாளையம்கோட்டை 

30.10.2019   மாலை தோழர் மெர்வின் தபால்காரர் திருநெல்வேலி அவர்களின் திருமணவரவேற்பு விழா --பெருமாள்புரம் 

30.10.2019   மதியம் மறைந்த தோழர் ஞானசேகரன் PA நான்குனேரி அவர்களின் புதல்வன் திருமணவிழா --இடையன்குளம் 

31.10.2019 அன்று தோழர் R .ஆனந்த கண்மணி அவர்களின் பணிநிறைவு விழா -இடம் புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலை பள்ளி பணகுடி 
நமது தோழர்களின் அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைய நெல்லை NFPE வாழ்த்துகிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, October 26, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                     வெற்றிகரமாக நடைபெற்ற 32 வது அகிலஇந்திய மாநாடு 
 நமது சங்கத்தின் அகிலஇந்திய மாநாடு 20.10.2019 முதல் 23.10.2019 வரை நான்கு நாட்கள் ஹைதெராபாத் மாநகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது .நமது அகிலஇந்திய தலைவர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தலைமைதாங்கி சிறப்பாக நடத்தி காட்டினார்கள் .முதல்நாள் நடந்த நிகழ்ச்சியில் Shri P. K. Bishoi, Member (Personal) & Designated Secretary (Posts)  Shri Charls Lobo Chief PMG, Karnataka holding additional charge of Telangana Circle ஆகிய நமது துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .மாநாட்டின் இறுதிநாளில் நமது முன்னாள் பொதுச்செயலர் தோழர் KVS  அவர்களின் உரை சார்பாளர் /பார்வையாளர்களுக்கு சிறப்பான விருந்தாக இருந்தது.பொதுச்செயலர் தோழர் RN .பராசர் அவர்களின் எதார்த்த விளக்கமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்தது  நாடுமுழுவதிலும் இருந்து 711 சார்பாளர்களும் இரண்டாயிரத்திற்கு மேலான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர் .
                     மீண்டும் தமிழகத்தின் ஆதிக்கம் தொடர்ந்தது 
 பழைய நாட்களை போலவே இந்த மாநாட்டிலும் நம் தமிழகத்தின் பங்கு சிறப்பாக இருந்தது .தமிழகத்தில் மட்டுமே 120 சார்பாளர்கள் பங்கேற்றனர் .நிர்வாகிகள் பட்டியலிலும் நமது மாநிலத்திற்கு மூன்று முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன .
தலைவராக தோழர் N .சுப்பிரமணியம் (திருப்பூர் )
பொதுச்செயலராக தோழர் RN .பராசர் (உத்தரபிரதேசம் )
நிதிச்செயலராக தோழர் பல்விந்தர் சிங் (டெல்லி )
உதவி பொதுச்செயலராக தோழர் A .வீரமணி (அண்ணாசாலை )
அமைப்பு செயலராக தோழர் AM .சேகர் (உதக மண்டலம் )ஆகியோர் தேர்வுசெய்ய பட்டர்கள் .
மகிளா கமிட்டி நிர்வாகிகளாக தமிழகத்தில் இருந்து மூன்று தோழியர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் .தோழியர் A.வளர்மதி (கோவை ) J.ரேணுகா (திருவாரூர் ) M.சாந்தி (கோவை ) 
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, October 17, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                அகிலஇந்திய மாநாட்டிற்கு செல்கின்ற ஊழியர்களுக்கு நாம் விண்ணப்பித்தபடி அனைவருக்கும் விடுப்பு வழங்கிய கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்று மாலையே அனைவருக்கும் Relief  arrangement கொடுக்கப்பட்டுவிட்டது .கடைசிநேர பதட்டத்தை தவிர்க்க உங்கள் Relief  arrangement யை 
இன்றே உறுதி படுத்திக்கொள்ளுங்கள் .
              *18.10.2019 முதல் 25.10.2019 வரை கோட்ட செயலராக தோழர் 
V..சரவணன் அவர்கள் பணியாற்றுவார்கள் .அதற்கான கடிதத்தை கோட்ட அலுவலகத்திற்கு நேற்று கொடுக்கப்பட்டுள்ளது .
              * அஞ்சல் துறையில் வரும் ஆண்டுகளில் 17 கோடியாக உள்ள சேமிப்பு கணக்குகளை 25 கோடியாக உயர்த்தவும் 130 கோடி மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் இன்சூரன்ஸ் என்பது வெறும் 3 கோடி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் நமது துறை அமைச்சர் மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்கள் .
            *மிக நீண்ட முயற்சிகளுக்கு பிறகு MMS வேனுக்கு 4 புதிய டயர்கள் வாங்க மண்டல அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வந்துள்ளது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, October 16, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                              33வது அகிலஇந்திய மாநாடு 
நமது சங்கத்தின் 33 வது அகிலஇந்திய மாநாடு வருகிற 20.10.2019 முதல் 22.10.2019 வரை தெலுங்கானா தலைநகர் ஹைதெராபாத் பெருநகரில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து 25 தோழர்கள் கலந்துகொள்கிறோம் .இந்த இடைப்பட்ட காலத்தில் கோட்ட செயலராக நமது கோட்ட சங்கத்தின் உதவி செயலர் தோழர் V.சரவணன் PA பாளையம்கோட்டை அவர்கள் பணியாற்றுவார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .



Monday, October 14, 2019

அன்பிற்குரிய மாநில செயலர்  தோழர் வீரமணி அவர்களுக்கு 
வணக்கம் அஞ்சல் முழக்கம் (செப்டம்பர் -அக்டோபர் ) இன்று கிடைக்கப்பெற்றேன் .நீதிகேட்டு வீதியில் என்ற பகுதியில் திருநெல்வேலி கோட்ட சங்கம் நடத்திய போராட்டம் குறித்து பதிவிட்டமைக்கு நன்றி .மேலும் தமிழகமெங்கும் டார்கெட் என்ற பெயரில் தினந்தோறும் மேளா குறிப்பாக தென்மண்டலத்தில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது .அது குறித்தும் நமது கோட்ட /கிளை செயலர்களிடம் தகவல்களை பெற்று அடுத்த இதழில்  செய்திகள் வெளியிட கேட்டுக்கொள்கிறேன் .இந்த மாதம் 20 ம் தேதி அண்ணன் பாலு அவர்களின் நான்காமாண்டு நினைவு நாள் .அதையும் குறிப்பிட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் .நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பாக 15.10.2019 அன்று நடைபெறும் தர்ணா போராட்டம் வெல்லட்டும் 
 10 அம்ச கோரிக்கைகள் வெல்லட்டும் .
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப்பெறு என்ற மகத்தான கோரிக்கை முதன்மை கோரிக்கையாக முன்னெடுக்கப்பட்டு செல்லும் போராட்டங்கள் வெல்லட்டும் !வெல்லட்டும் !






Saturday, October 12, 2019

                                                     முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 
போஸ்ட்மாஸ்டர் கிரேடு பொது பிரிவோடு இணைக்கப்பட்டு அதற்கான வரைவு சீனியாரிட்டி பட்டியல் வெளியி டப்பட்டுள்ளது .
LSG யை பொறுத்தவரை தமிழகத்தில் 2126 பேர் ஒருங்கிணைந்த LSG ஊழியர்கள் ஆவார்கள் .இதில் LSG யில் ஆறு வருடத்தை நெருங்கியவர்கள் 150 குள் இருப்பார்கள் .HSG II வந்தால் மிக குறைந்தஅளவே HSG II பதவிஉயர்வு பெறுவார்கள் .அதேபோல் HSG I யில் 70 பேரும் HSG II வில் 69 பேரும் மட்டுமே இருக்கிறார்கள் .LSG பட்டியல் தற்போது வெளிவந்தால் கிட்டத்தட்ட 800 ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் .அதில் பதவி உயர்வு எத்தனை பேர் ஏற்கிறார்களோ அந்த அளவிற்கு LGO காலியிடங்கள் கூடும் .பருவ மழைக்கு ஏங்கும் மானாவாரி நிலம் போல அஞ்சல் ஊழியர்கள் நிலை இன்று பரிதாபமாக உள்ளது .ONE TIME அடிப்படையில் HSG II &HSG I பதவிகள் நிரப்பப்பட்டாலொழிய இந்த பதவி யர்வுகள் ஊழியர்களுக்கு காகித பூக்களாக மட்டுமே இருக்கும் .பதவி உயர்வுகள் எப்பொழுது வரும் என ஏங்கிய நாட்கள் போக இன்று ஏன் வருகிறது என ஏக்க பெருமூச்சோடு ஊழியர்கள் .
                                                    PSD-CSD இணைகிறது 
ஒரு போஸ்டல் சர்கிளுக்கு ஒரு PSD போதும் என்ற அடிப்படையில் அஞ்சல் வாரியம் ஒரு திட்ட வரைவை 01.10.2019 அன்று கொடுத்துள்ளது ..மேலும் இந்த இணைப்பினால் உருவாகும் பதவிகளை  அடையாளப்படுத்தி 18.10.2019 குள் தெரிவிக்கவும் தாக்கீது வந்துள்ளது .அதன்படி தமிழகத்தில் PSD எஸ்டாபிளிஷ்மென்ட் என்பது கண்காணிப்பாளர் -1 மேனேஜர் -1 உதவி மேனேஜர்- 4 LSG -7 OA -20 MTS-15 என மொத்தம் 48 பதவிகளோடு முடிகிறது .தற்சமயம் 101 பதவிகள் உள்ளன .
ஒரே PSD--ஒரே மேனேஜர் ==ஒரே .................
                            காம்பினேஷன் அலவன்ஸ் 
  காம்பினேஷன் அலவன்ஸ் குறித்து நமது கோட்ட அலுவலகத்தில் இருந்து நேற்று மீண்டும் 2015 ஆண்டில் வந்த உத்தரவை அனுப்பியுள்ளார்கள் .தபால்காரர் தோழர்கள் அன்றன்று அதற்கான தொகையை பெற்றுக்கொள்ள மீண்டும் நினைவூட்ட படுகிறார்கள் .இதுவரை வாங்காதவர்கள் இன்றுமுதல் கேட்டு பெற்றுக்கொள்ளவும் 
  நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
  

Friday, October 11, 2019

போனஸ் வழங்கப்படுவதில் உள்ள காலதாமதத்தை கண்டித்து நேற்று 10.10.2019 இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி RMS அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஒரு நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மோடு இணைந்து RMS ஊழியர்கள் இயக்கங்களில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது .ஒன்றுபட்ட இயக்கங்கள் நெல்லையில் தொடர வாழ்த்துகிறோம் -நெல்லை NFPE 


                                                முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
                 நேற்று 10.10.2019 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .இதன் மீதான தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன .
1.தோழர் வெண்ணிக்குமார் payfixation தொடர்பாக அவருடைய service book இன்று பாளையம்கோட்டை HO விற்கு அனுப்பப்பட்டு மறுநிர்ணயம் செய்யப்படும் .
2.திருநெல்வேலி PSDக்கு  இரண்டு OA பதவிகள் விருப்பமனுக்கள் கோரப்பட்டு நிரப்பப்படும் .
3.LGO தேர்வுக்கான VACANCY கணக்கெடுப்பில் PSD நம்மோடு இணைந்ததை தொடர்ந்து அங்குள்ள PA VACANCY களை இந்த ஆண்டு PA VACANCY யில் சேர்த்திட மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும் 
4.தோழர் துளசிராமன் அவர்களின் விடுப்பு முடிந்தவுடன் நான்குனேரியில் பணியாற்றிட அனுமதிக்கப்படுவார் .
5.தெற்குகருங்குளத்திற்கு கூடுதலாக ஒரு நபர் டெபுடேஷன் அனுப்பப்படுவார் .மூன்றடைப்பிற்கு SPM  PA  எப்பொழுது தேவை என கேட்கும்பொழுது அவருடைய வேண்டுகோளின்படி DEPUTATION கொடுக்கப்படும் 
6.நாலுமுக்கு மற்றும் மாஞ்சோலை அலுவலகங்களுக்கு குடியிருப்பை தற்காலிகமாக ரத்துசெய்துவிட்டு அவர்களுக்கு HRA வழங்கப்படும் 
7.திருநெல்வேலி தலைமை அஞ்சலக வளாகத்திற்குள் தேங்கும் மழைநீர் பிரச்சினையை தீர்க்க புதிய கொட்டேஷன் வாங்கி அனுப்ப ஏற்றுக்கொள்ளப்பட்டது 
8.மானுர் அஞ்சலகத்திற்கு புதிய பிரிண்டர் உடனே DIVERT செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது 
9.இட்டமொழி அஞ்சலத்திற்கு CASH OFFICE மற்றும் மெயில் OFFICE வள்ளியூருக்கு பதிலாக திசையன்விளைக்கு மாற்ற பரிசீலிக்கப்படும் 
10.மூலைக்கரைப்பட்டி பாஸ்புக் பிரிண்டர் புதிதாக சப்ளை செய்யப்படும் 
11.களக்காடு SO விற்கு பிராட்பாண்ட் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் 
12.கீழநத்தம் மற்றும் மூலைக்கரைப்பட்டி அலுவலகங்களுக்கு கட்டிட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன .
13.CGHS மூலம்  திருநெல்வேலிக்கு அங்கீகரிக்கப்பட்ட  மருத்துவமனை பட்டியலை உடனே வெளியிட மண்டலஅலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் .குறிப்பாக அகர்வால் ஷிபா மருத்துவமனைகள் இதில் அடங்கும் 
14.MACP பதவி உயர்வு வேலைகள் துரிதப்படுத்தப்படும் .சீனியாரிட்டி பாதிப்புள்ள தோழியர் ராஜலட்சுமி அவர்களின் பெயர் இதில் சேர்க்கப்படும் 
15.பெருமாள்புரம் அலுவலக பராமரிப்பு பணிகள் குறித்து ஏற்கனவே மண்டல நிர்வாகத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது 
                                               தபால் காரர் பிரச்சினைகள் 
1.வள்ளியூர் அலுவலகத்திற்கு ஒரு கேஷ்ஓவர்சியர் பதவி வழங்கப்படும் .
2.விரிவாக்க பகுதியான பணகுடி மற்றும் தாலுகா  தலைமை யிடமான    ராதாபுரம்  அலுவலகங்களுக்கு புதிய கணக்கு  எடுக்கப்பட்டு JUSTIFICATION  இருக்கும் பட்சத்தில்  கூடுதல் தபால்காரர் வழங்கப்படும் 
3.COMBINATION DUTY அலவன்ஸ்  உடனுக்குடன் வழங்க  உத்தரவிடப்படும் .இதுவரை வாங்காத அலுவலகங்களுக்கு பின்னர் சரிபார்த்து வழங்கப்படும் .ஆகவே COMBINED DUTY போட்டால் அன்றே ரூபாய் 94 க்கு மணிரசிது போட்டு வாங்கிக்கொள்ளவும் .யாராவது மறுத்தால் கோட்ட செயலருக்கு உடனே தெரிவிக்கவும் 
4.விடுமுறை நாட்களுக்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு  இன்சென்டிவ் கிடைக்க சம்பந்தப்பட்ட SPM மூலம் கோட்ட அலுவலகத்திற்கு பணியாற்றிய ஊழியர்களின் விவரங்களை அனுப்பச்சொல்லவும் .தானாக ஒருநாளும் வராது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, October 10, 2019

                                     09.10.2019 ஆர்ப்பாட்ட காட்சிகள் 




அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                      போனஸ் போராட்டம் தொடர்கிறது -போராட்டம் ஓய்வதில்லை 
நமது மத்திய சங்க அறைகூவலின் படி போனஸ் உத்தரவு வரும்வரை தினமும் ஆர்ப்பாட்டம் என்ற அடிப்படையில் நேற்று 09.10.2019 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
  இன்று 10.10.2019 அன்று மாலை 05.30 மணிக்கு திருநெல்வேலி RMS அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அதிலும் தாங்கள் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன் .
                                                    மாநில சங்க செய்திகள் 
 LSG அடுத்த பட்டியல் விரைவில் வரவிருப்பதாக நமது மாநில செயலர் தோழர் A.வீரமணி அவர்கள் தெரிவித்தார்கள் .ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் தயாரிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் சுமார் 250 பேருக்கு LSG பதவி உயர்வுகள் வர வாய்ப்பிருக்கிறது .இதில் எத்தனை தோழர்கள் LSG பதவி உயர்வை ஏற்கிறார்களோ அத்தனை இடங்கள் LGO தேர்வுக்கான காலியிடங்களில் சேர்க்கப்படும் என்பது முக்கியமானது 
                                          கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி 
                     நெல்லை கோட்ட  மாதாந்திர பேட்டி 10.10.2019 இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் தோழர்கள் ஜேக்கப் ராஜ் -வண்ணமுத்து தியாகராஜபாண்டியன் அஞ்சல் மூன்றின் சார்பாகவும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் பாட்சா -கந்தசெல்வன் -தங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .அஞ்சல் மூன்றின் சார்பாக விவாதத்திற்கு கொடுக்கப்பட்ட பிரச்சினைகள் கீழே தரப்பட்டுள்ளன .
நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                                                                           NFPE
  ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C            TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 03.10.2019
To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
            Sub:    Subjects for monthly meeting -reg
                                                *****
              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1. Request to implement the orders of RO Madurai letter dated 24.07.2019 and DO Tirunelveli letter dated 19.08.2019 immediately. C/O Sri.G.Thulasiraman

2. Request to provide an additional hand atleast for 15 days to the following offices 1.Mundradaippu 2.T.Karunkulam

3. Request to take action to dequarterize Vijayanarayanam SO.

4. Request Supply of bed-scanner to Tirunelveli HO.

5. Request to take action to unclog the rain water at Tirunelveli HO by raising the ground level.

6. Request Supply of cash counting machine to Gangaikondan SO.

7. Request to take action for the maintenance of SPM quarters of Perumalpuram SO.

8. The ceiling above the Postmen seats are found damaged - c/o Perumalpuram SO. It is requested to rectify the same on priority basis.


9. Request replacement of printer for Manur SO

10. Request to take remedial action to set right the water scarcity problem at Manur SO.

11. Request replacement of printer for Anuvijay Township SO.

12. Request to change the cash office & Mail ofice for Ittamozhi SO from Vallioor to Tisayanvilai.

13. Request shifting of Kizhanatham SO to a proper and secures building.

14. Request to fill up the post of OA/Stenographer to which recently volunteers have been called for.

15. Request to set right the faulty pass book printer at Mulaikkaraipatti SO.

16. Request shifting of PO building, Mulaikkaraipatti to a better and secured building.

17. Request Supply of new 5 chairs to Nanguneri

18. Request early pay fixation - c/o Shri Vennikumar then postman who made representation for re-fixation of his pay as per 5th CPC and drawal of arrears.

19. Request reassement of vacancies on consequent promotion of officials to LSG cadre and inclusion of PSD Tirunelveli with Tirunelveli Division and include for LDCE for PA cadre.

20. Request to call for volunteers among the staff of Tirunelveli for deputation to PSD Tirunelveli.

21.Request to early supply of UPS and batteries to Mukkudal SO

22.Request supply of one new system to Kadayam SO.

23.Request to increase 1Mbps speed for broadband at Kalakadu SO

24.After conversion of postal dispensary in to CGHS Wellness Centre , the following facilities availed already were curtailed/closed which may be restored immediately for the welfare of our staff members.

 (a) Furnishing empanelled list of Hospitals in Tirunelveli
(b) Delay in supply of local purchasing medicines
(c) Lab –Technician post   



                      The following officials will attend the meeting.

 1   Shri  S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Tirunelveli HO
       2.  Shri  C.Vannamuthu SPM Viraragavapuram    
       3.  Shri  R.V.ThiyagarajapandiyanBr.Sec  &SPM Kilambur

             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]

Wednesday, October 9, 2019

போனஸ் -பஞ்சப்படி அறிவிப்பில் உள்ள காலதாமத்தை கண்டித்து மத்திய சங்க அறைகூவல் படி ஆர்ப்பாட்டம் 
                 இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 
நாள் 09.10.2009 நேரம் மதியம் 1.00 மணி 
இடம் திருநெல்வேலி தலைமைஅஞ்சலகம் 
-----------------------------------------------------------------------------------------------------------------
நாளை 10.10.2019 அன்று மாலை 6.00 மணிக்கு பாளையம்கோட்டையில் ஆர்ப்பாட்டம் 
---------------------------------------------------------------------------------------------------------------------
ஆர்ப்பாட்டம் வெற்றிபெற அனைவரும் வருக !
போராட்ட வாழ்த்துக்களுடன் 
கூட்டு போராட்ட குழு --நெல்லை 

                 ஆறில் இருந்து அறுபது வரை -- போனஸ் ரூபாய் 750 முதல் ரூபாய் 7000 வரை 
அன்பார்ந்த தோழர்களே !
மத்திய அரசு ஊழியர்கள் பெற்றுவரும் ஒவ்வொரு பயன்களுக்கும் ஒரு வரலாறு உண்டு .நெடிய போராட்டம் உண்டு . .அரசே தானாக முன்வந்து கொடுத்ததாக எந்த வரலாறும் இல்லை .கொடுத்ததை எடுத்துக்கொண்ட காரியங்கள் அநேகமுண்டு .அந்த அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் /தபால் தந்தி ஊழியர்கள் போனஸ் பெற்ற வரலாறும் ஒரு மகத்தானது .
               நமக்கு போனஸ் வேண்டும் என்ற கோரிக்கை 1972 யில் எழுந்தாலும் நிலையான அரசாங்கம் எதுவும் நமது கோரிக்கைகளை ஏற்றிடவில்லை 1973 யில் அமைக்கப்பட்ட போனஸ் ரிவியூ .கமிட்டிக்கு நமது NFPTE சம்மேளனம் சார்பாக 8.33 சதம் போனஸ் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மனுவினை கொடுத்தது .அதனை தொடர்ந்து 1973யில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் 14.06.1973 யில் JOINT PROTEST DAY கடைபிடிக்க முடிவெடுக்கப்பட்டது.பிறகு 19.11.1977யில் மீண்டும் நாடுதழுவிய இயக்கங்கள் நடைபெற்றன இந்நிலையில் பிரதமர் மொராஜி தேசாய் ராஜினாமாவை தொடர்ந்து திரு .சரண்சிங்  பிரதமராக பொறுப்பேற்ற சூழலில்   மாண்புமிகு சரண்சிங் தலைமையிலான காபந்து அரசு நீடிக்க இடது சாரிகள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று அரசுஊழியர்களுக்கு போனஸ் வழங்கவேண்டும் என்பதே ..அதனை ஏற்றுக்கொண்டு 1979 ம் ஆண்டு முதன்முதலாக ரயில்வே ஊழியர்க்ளுக்கு மட்டும் போனஸ் அறிவிக்கப்பட்து .அன்றும் நாம் புறக்கணிக்கப்பட்டோம் .நமது கோரிக்கைகளை வலியுறுத்தி 8.12.1979 அன்று நாடுமுழுவதும் மாபெரும் பேரணிகள் நடைபெற்றது .இறுதியாக 14.03.1980 அன்று அஞ்சல் வாரியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்பட்ட உடன்பாட்டினால் நமக்கு போனஸ் 15 நாட்கள் என உச்சவரம்பு ரூ .750 என நிர்ணயம் செய்யப்பட்டது .போனஸ் குறித்த உடன்பாட்டியில் அன்றைய நமது பொதுச்செயலர் தோழர் D.ஞானையா அவர்கள் கையெழுத்திட்டார் .அதிலிருந்து நமக்கு படிப்படியாக ஆண்டுதோறும் கீழ்கண்ட நாட்கள்  21-22-23-25-29-27-34/35-33-35-36-40-40-40-46-46-52-53-57-66(2202-2003)
பிறகு 2003 முதல் 60நாட்கள் இன்றுவரை போனஸ் என பெற்றுவருகிறோம் .
போனஸ் தொகை 750 யில் இருந்து 1600 ஆக மாறியது .1996 யில் 1600 யில் 2500ஆக உயர்ந்தது .ஆனால் போனஸ் பெறுவதற்கான உச்சவரம்பு மாற்றப்படவில்லை .இதனால் வெகுண்டெழுந்த ஊழியர்கள் அகிலஇந்திய சங்கங்களின் அறிவிப்பிற்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர் .அதில் நமது கோட்டத்தின் அன்றைய பங்கும் மகத்தானதுதலமட்ட போராட்டத்தின் விளைவாக இது அகிலஇந்திய போராட்டமாக மாறியது  .இந்த உச்சவரம்பில் பாதிப்பில்லாத GDS ஊழியர்களும் நமக்காக போராடினார்கள் . இந்த உயர்வை பெறுவதற்கு நாம் 8 நாட்கள் வேலைநிறுத்தம் செய்திடவேண்டியதாகிவிட்டது இறுதியில் இலாகா ஊழியர்களுக்கு வேலைநிறுத்தநாட்கள் விடுப்பாக மாற்றப்பட்டது .GDS ஊழியர்களுக்கு மட்டும் ஊதியவெட்டு இருந்தது .இதனை கண்டித்து அன்றைய தமிழ்மாநிலச்சங்கம் (அண்ணன் பாலு மாநிலசெயலர் )மட்டும் தனியாக 30.12.1996 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்து வரலாற்று பதிவை பதிந்தது ..மீண்டும் 01.04.2006 முதல் 2500 ரூபாய் 3500 ஆனது .இது ED களுக்கு பொருந்தாது என்று அஞ்சல் வாரியம் சாதித்தது .உறுதிகுலையாத GDS ஊழியர்களின்போராட்டத்தினால் 3500உயர்வு  GDS ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் இரண்டுஆண்டுகளுக்கு நிலுவையுடன் வழங்கிய அதிசயமும் நம் கண் முன்னால் நடந்தது . 2015 யில் ரூபாய் 3500  என்பது 7000 ஆனது .இந்த சூழலில் போனஸ் குறித்த முக்கிய கோரிக்கை ஒன்று காலத்தால் கரைந்துவிட்டதாக நாம் நினைக்கிறோம் .அதுதான் TO REMOVE THE CAP OF  60 DAYS என்பது .2002 முதல் 60 நாட்கள் போனஸ் பெற்று வருகிறோம் .போனஸ் கணக்கீடை மாற்றவேண்டும்.அதை சரியாக நாம் கண்காணித்தால் நிச்சயம் நமக்கு 60 நாட்கள் என்பது அதிகரிக்கும் . போனஸ் கணக்கீட்டிற்கு எதையெல்லாம் சேர்க்கவேண்டும் என நமது அகிலஇந்திய சங்கம் தொடர்ந்து வாதாடியது சில ஆண்டுகள் இந்த கோரிக்கை கோரிக்கை பட்டியலில் இடம்பெற்றது அழுத்தம் கொடுக்கப்பட்டது ஆனாலும் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் காலத்தால் கரைந்து போனது  .அதன்பிறகு போனஸ் குறித்த நமது கோரிக்கைகள் வலுவிழந்துவிட்டன .ஆண்டொன்றுக்கு பொது வேலைநிறுத்தங்கள் செய்வது மட்டுமே போதும் என்றிராமல் இதுபோன்ற நமது துறைசார்ந்த கோரிக்கைகளில் நமது சங்கங்கள் முழுகவனம் செலுத்திடவேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு .நெல்லையின் வழிபாடு .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, October 5, 2019

அன்பார்ந்த தோழர்களே !
   போனஸ் குறித்து நேற்று மாலை RMS நான்காம் பிரிவின் பொதுச்செயலர் தோழர் சுரேஷ் அவர்கள் டெல்லியில் அனுப்பியிருந்த குறுந்செய்தியை தவிர வேறு எந்த அகிலஇந்திய சங்கமும் இதுகுறித்து செய்திகள் வெளியிடவில்லை .இரண்டு நாட்களாக நிதிஅமைச்சத்தில் இருந்த கோப்புகள் நேற்று கையெழுத்தாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன  .
R 4 பொதுச்செயலர் தோழர் சுரேஷ் அவர்களின் பதிவு ..உங்கள் பார்வைக்கு Dear Comrades finance ministry cleared the file bonus for Postal employees 60 days today evening.
-------------------------------------------------------------------------------
அஞ்சல் ஆய்வாளர்கள் தேர்வு நவம்பர் 16 மற்றும் 17 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 07.10.2019 பட்டுவாடா பணி 08.10.2019 தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 
 17-04-2019 பணி செய்ததற்கு எந்தவிதமான காம்பென்சேஷன் நமக்கு கிடைக்காதது குறித்து தோழர்களின் ஆதங்கங்கள் குறித்து கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
கமலேஷ் சந்திர கமிட்டி பரிந்துரை அடிப்படையில் GDS ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவித்தொகை/மருத்துவ காப்பீடு திட்டம் விரைவில் அமலாக்கம் செய்யப்படலாம். அதற்கான பணிகள் நடந்து வருவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மாத மாதாந்திர பேட்டியில் கலந்துகொள்ளும் தோழர்கள் 
அஞ்சல் மூன்று --தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் -C.வண்ணமுத்து &RV.தியாகராஜ பாண்டியன் 
அஞ்சல் நான்கு -தோழர்கள் SK .பாட்சா -பணகுடி கந்த செல்வன் &V.தங்கராஜ் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



Friday, October 4, 2019

அன்பார்ந்த தோழர்களே !
               மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நேற்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை .சில மாநில தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு DA உயர்வு உள்ளிட்ட கோப்புகள் சென்றுள்ளதாக தெரிகிறது .இதுகுறித்து புதுடெல்லியில் இருந்து வந்த தகவல் உங்கள் பார்வைக்கு தரப்படுகிறது .
Due to election announcement in some states, the DA file has to be cleared by Election Commission. Now the has since been done . Soon it will be declared...
-------------------------------------------------------------------------------
RTP வழக்கு சம்பந்தமாக முன்னாள் மாநிலசெயலர் தோழர் V.பார்த்திபன் CPMG அவர்களை சந்தித்து கோரிக்கைமனுவினை கொடுத்து விரைந்துநடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள் .அதனை தொடர்ந்து அனைத்து மாநிலசெயலர்களிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்ககேட்டுக்கொள்ளப்பட்டது .
Ex-RTPs met our respected Chief PMG 
A delegation  consisting of Com.V.Parthiban, Com.L.Sundaramurthy, ( Chennai City Central Dn ), Com.R.Ramesh, (Chennai GPO) Com.P.Mohan, (Ch.City North Dn ), Com. G.Ramesh Kumar, (Anna Road ), Com. Sudha Murugesan, ( Ch. City South Dn ), Ex.RTPs met our beloved Chief PMG today and handed over a Memorandum requesting implementation of Chennai CAT and High Court Judgment on regularisation of  RTP services and consequential benefits. We had also requested extension of the benefits to similarly placed officials in the Circle.
The Chief PMG gave a patient hearing and was positive in his approach. He informed that action is being taken on the judgment and decision will be taken in consultation with Directorate.
We thanked the Chief PMG for giving us an audience and for  sympathetic consideration of the RTP issue.    
V.Parthiban
L.Sundaramurthy.
-------------------------------------------------------------------------------------------------------------------------
NELLAI NFPE -NELLAI NFPE -NELLAI NFPE -NELLAI NFPE -NELLAI NFPE --

Thursday, October 3, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                              32 வது அகிலஇந்திய மாநாடு 
நமது அகிலஇந்திய சங்கத்தின் 32 வது அகிலஇந்திய மாநாடு தெலுங்கானா மாநிலம் ஹைதெராபாத் மாநகரில் வருகிற 20.10.2019 முதல் 22.10.2019 வரை நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து 25 தோழர்கள் கலந்துகொள்கிறார்கள் .(நெல்லை 15 அம்பை 10)
நெல்லைதோழர்களுக்கான பயனவிவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன .மாற்றியமைக்கப்பட்ட புதிய ரயில்வே அட்டவணை .
நெல்லையில் இருந்து புறப்படும்நாள் 18.10.2019வெள்ளிகிழமை நெல்லை எக்ஸ்பிரஸ் 19.45 
மதுரை -ஹைதெராபாத் 19.10.2019 அதிகாலை 01.00 மணி 
ஹைதெராபாத் -நெல்லை 23.10.2019 மாலை 4 மணி 
சார்பாளர் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 2500 .
விடுப்பு விண்ணப்பிக்கின்ற தோழர்கள் இன்றே விண்ணப்பிக்கவும் .18.10.2019 முதல் 25.10.2019 மொத்தம் 8 நாட்கள் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
நமது துறையின் புதிய செயலராக 

Shri .Pradipta Kumar Bisoi அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் .அவர்கள் வருகிற 31.10.2019 முதல் இந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்கள் .

------------------------------------------------------------------------------------------------------------------
போனஸ் -இதற்குள் நாம் வாங்கியிருக்கவேண்டும் .மேல்மட்ட தலைவர்கள் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் தராமல் இருப்பது வருத்தமே !
33 வருடம் சேவை முடிந்தால் ஓய்வு என்பது குறித்தும் எந்த வித சலசலப்போ சத்தமோ இல்லாமல் இருப்பது ஏனோ ?
              தானாய் எல்லாம் மாறும் என்பது .....................?
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, October 1, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                       திருநெல்வேலி PSD நமது கோட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது 
                            அஞ்சல் துறையின் சமீபத்திய கொள்கைமுடிவின் படி PSD/CSD அந்தந்த அஞ்சல் கோட்டங்களின் ESTABLISHMENT உடன் இணைக்கப்படும் என்ற அடிப்படையில் நமது திருநெல்வேலி PSD நமது திருநெல்வேலி கோட்டத்தோடு இணைக்கப்படுகிறது .அதற்கான அறிவிப்பு நேற்று மாலை வந்துவிட்டது .அதன்படி இருக்கின்ற ஊழியர்கள் அந்தந்த கோட்டத்திற்கு அனுப்பப்படுகிறார்கள் .TENURE முடிக்காத ஊழியர்கள் அவர்களின் விருப்பப்படி இங்கு  TENURE  முடியும் வரை தொடரலாம் .
1.நெல்லைக்கும் -நெல்லை  PSD க்கும் இருந்த தடுப்பு சுவர் விலகியது 
1987  க்கு முன்பாக OA PSD பதவிகள் நமது கோட்ட ஊழியர்களால் நிரப்பப்பட்டுவந்தது .பிறகு HOME டிவிசன் ஊழியர்கள் PSD க்கு அனுப்பக்கூடாது NEIGHBORING  கோட்ட ஊழியர்களுக்கே வாய்ப்பு என்ற உத்தரவினால் நமக்கும் PSD க்கும் தொடர்பு இல்லாமல் போனது நமது அண்டை கோட்டங்களுக்கோ PSD ஒரு வேடந்தாங்கலாக இருந்தது என்பதும் உண்மை ..இன்று மீண்டும் அந்த  வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது 
2. எழுத்தர் /MTS பதவிகள் உயருகிறது 
PSD இணைப்பால் நமது கோட்டத்திற்கு கூடுதலாக 11 எழுத்தர் பதவிகளும் ( HSG I-2 )  13 MTS பதவிகளும் கிடைக்கிறது .அதில் உள்ள VACANT பதவிகளை இந்தாண்டு LGO VACANCYயில்  சேர்த்திட நாம் முயற்சிகளை மேற்கொள்ளுவோம் .அதேபோல் இருக்கின்ற மீதமுள்ள 8 OA பதவிகளுக்கு DEPUTATION  மூலம் நிரப்புவதை விருப்பமனுக்கள் கோரப்பட்டு சீனியாரிட்டி அடைப்படையில் நிரப்பிடவும் நாம் இந்த மாத மாதாந்திர பேட்டியில் வலியுறுத்துவோம் .
---------------------------------
அடுத்து மிகநீண்ட கால கோரிக்கையான TBOP /BCR பதவியர்விற்கு பயிற்சிக்காலத்தை சேர்த்திடவேண்டும் என்ற கோரிக்கையில் இங்கு DPC முடிந்து RO சென்ற கோப்புகள் திருப்பப்பட்டு கோட்ட அதிகாரியே இந்த உத்தரவை வழங்கலாம் என்று வந்துள்ளது ..ஆகவே விரைவில் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் .
------------------------------------
மாதாந்திர பேட்டியில் ஏதேனும் சேர்க்கவேண்டுமானால் இன்று மாலைக்குள் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை