ஆறில் இருந்து அறுபது வரை -- போனஸ் ரூபாய் 750 முதல் ரூபாய் 7000 வரை
அன்பார்ந்த தோழர்களே !
மத்திய அரசு ஊழியர்கள் பெற்றுவரும் ஒவ்வொரு பயன்களுக்கும் ஒரு வரலாறு உண்டு .நெடிய போராட்டம் உண்டு . .அரசே தானாக முன்வந்து கொடுத்ததாக எந்த வரலாறும் இல்லை .கொடுத்ததை எடுத்துக்கொண்ட காரியங்கள் அநேகமுண்டு .அந்த அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் /தபால் தந்தி ஊழியர்கள் போனஸ் பெற்ற வரலாறும் ஒரு மகத்தானது .
நமக்கு போனஸ் வேண்டும் என்ற கோரிக்கை 1972 யில் எழுந்தாலும் நிலையான அரசாங்கம் எதுவும் நமது கோரிக்கைகளை ஏற்றிடவில்லை 1973 யில் அமைக்கப்பட்ட போனஸ் ரிவியூ .கமிட்டிக்கு நமது NFPTE சம்மேளனம் சார்பாக 8.33 சதம் போனஸ் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மனுவினை கொடுத்தது .அதனை தொடர்ந்து 1973யில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் 14.06.1973 யில் JOINT PROTEST DAY கடைபிடிக்க முடிவெடுக்கப்பட்டது.பிறகு 19.11.1977யில் மீண்டும் நாடுதழுவிய இயக்கங்கள் நடைபெற்றன இந்நிலையில் பிரதமர் மொராஜி தேசாய் ராஜினாமாவை தொடர்ந்து திரு .சரண்சிங் பிரதமராக பொறுப்பேற்ற சூழலில் மாண்புமிகு சரண்சிங் தலைமையிலான காபந்து அரசு நீடிக்க இடது சாரிகள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று அரசுஊழியர்களுக்கு போனஸ் வழங்கவேண்டும் என்பதே ..அதனை ஏற்றுக்கொண்டு 1979 ம் ஆண்டு முதன்முதலாக ரயில்வே ஊழியர்க்ளுக்கு மட்டும் போனஸ் அறிவிக்கப்பட்து .அன்றும் நாம் புறக்கணிக்கப்பட்டோம் .நமது கோரிக்கைகளை வலியுறுத்தி 8.12.1979 அன்று நாடுமுழுவதும் மாபெரும் பேரணிகள் நடைபெற்றது .இறுதியாக 14.03.1980 அன்று அஞ்சல் வாரியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்பட்ட உடன்பாட்டினால் நமக்கு போனஸ் 15 நாட்கள் என உச்சவரம்பு ரூ .750 என நிர்ணயம் செய்யப்பட்டது .போனஸ் குறித்த உடன்பாட்டியில் அன்றைய நமது பொதுச்செயலர் தோழர் D.ஞானையா அவர்கள் கையெழுத்திட்டார் .அதிலிருந்து நமக்கு படிப்படியாக ஆண்டுதோறும் கீழ்கண்ட நாட்கள் 21-22-23-25-29-27-34/35-33-35-36-40-40-40-46-46-52-53-57-66(2202-2003)
பிறகு 2003 முதல் 60நாட்கள் இன்றுவரை போனஸ் என பெற்றுவருகிறோம் .
போனஸ் தொகை 750 யில் இருந்து 1600 ஆக மாறியது .1996 யில் 1600 யில் 2500ஆக உயர்ந்தது .ஆனால் போனஸ் பெறுவதற்கான உச்சவரம்பு மாற்றப்படவில்லை .இதனால் வெகுண்டெழுந்த ஊழியர்கள் அகிலஇந்திய சங்கங்களின் அறிவிப்பிற்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர் .அதில் நமது கோட்டத்தின் அன்றைய பங்கும் மகத்தானதுதலமட்ட போராட்டத்தின் விளைவாக இது அகிலஇந்திய போராட்டமாக மாறியது .இந்த உச்சவரம்பில் பாதிப்பில்லாத GDS ஊழியர்களும் நமக்காக போராடினார்கள் . இந்த உயர்வை பெறுவதற்கு நாம் 8 நாட்கள் வேலைநிறுத்தம் செய்திடவேண்டியதாகிவிட்டது இறுதியில் இலாகா ஊழியர்களுக்கு வேலைநிறுத்தநாட்கள் விடுப்பாக மாற்றப்பட்டது .GDS ஊழியர்களுக்கு மட்டும் ஊதியவெட்டு இருந்தது .இதனை கண்டித்து அன்றைய தமிழ்மாநிலச்சங்கம் (அண்ணன் பாலு மாநிலசெயலர் )மட்டும் தனியாக 30.12.1996 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்து வரலாற்று பதிவை பதிந்தது ..மீண்டும் 01.04.2006 முதல் 2500 ரூபாய் 3500 ஆனது .இது ED களுக்கு பொருந்தாது என்று அஞ்சல் வாரியம் சாதித்தது .உறுதிகுலையாத GDS ஊழியர்களின்போராட்டத்தினால் 3500உயர்வு GDS ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் இரண்டுஆண்டுகளுக்கு நிலுவையுடன் வழங்கிய அதிசயமும் நம் கண் முன்னால் நடந்தது . 2015 யில் ரூபாய் 3500 என்பது 7000 ஆனது .இந்த சூழலில் போனஸ் குறித்த முக்கிய கோரிக்கை ஒன்று காலத்தால் கரைந்துவிட்டதாக நாம் நினைக்கிறோம் .அதுதான் TO REMOVE THE CAP OF 60 DAYS என்பது .2002 முதல் 60 நாட்கள் போனஸ் பெற்று வருகிறோம் .போனஸ் கணக்கீடை மாற்றவேண்டும்.அதை சரியாக நாம் கண்காணித்தால் நிச்சயம் நமக்கு 60 நாட்கள் என்பது அதிகரிக்கும் . போனஸ் கணக்கீட்டிற்கு எதையெல்லாம் சேர்க்கவேண்டும் என நமது அகிலஇந்திய சங்கம் தொடர்ந்து வாதாடியது சில ஆண்டுகள் இந்த கோரிக்கை கோரிக்கை பட்டியலில் இடம்பெற்றது அழுத்தம் கொடுக்கப்பட்டது ஆனாலும் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் காலத்தால் கரைந்து போனது .அதன்பிறகு போனஸ் குறித்த நமது கோரிக்கைகள் வலுவிழந்துவிட்டன .ஆண்டொன்றுக்கு பொது வேலைநிறுத்தங்கள் செய்வது மட்டுமே போதும் என்றிராமல் இதுபோன்ற நமது துறைசார்ந்த கோரிக்கைகளில் நமது சங்கங்கள் முழுகவனம் செலுத்திடவேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு .நெல்லையின் வழிபாடு .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment