...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 11, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                       நன்றி !நன்றி ! நன்றி ! 

மிக நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தோழர்கள் C .சங்கர் மற்றும் S. கோமதிநாயகம்  அவர்களது LTC பில்லை (ஜம்மு -காஷ் மீர் ) சாங்ஷன் செய்திட்ட நமது மதிப்பிற்குரிய SSP  .L .துரைசாமி அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ASP (OD) திரு TS .ரகுநாத் அவர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..சென்ற மாதம் நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் இந்த பிரச்சினையை மீண்டும் விவாதிக்கப்பட்டு நமது கண்காணிப்பாளர் அவர்களால் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கப்படும் என்ற உறுதி தரப்பட்டதையும் நன்றியோடு நினைவு கூறுகிறோம் .

*அஞ்சல் நான்கின் தமிழ் மாநில மாநாடு --தமிழக அஞ்சல் நான்கின் மாநில மாநாடு வருகிற 25.02.2021 மற்றும் 26.02.2021 ஆகிய இரண்டு தினங்கள் சென்னையில் நடைபெறுகிறது .அதற்கான நன்கொடை புத்தகங்கள் மாநில சங்கத்தின் மூலம் வந்துள்ளது .விருப்பமுள்ள தோழர்கள் தலா ரூபாய் 100 நன்கொடை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment