...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, May 8, 2021

                                 மலிவு விலையில் மரணங்கள் 

* வணக்கங்களும் வாழ்த்துக்களும் 

நின்றுபோய் -இன்று 

வருத்தங்களும் அனுதாபங்களுமாய் 

தொடங்குகிறது ஒவ்வொரு  பொழுதும் .


*உறவில் ஒன்று -உடன் பணிபுரியும் 

இடத்தில் ஒன்றென்று என அழுதே 

முடிகிறது அன்றைய  கணக்கும் . 


*அப்போதெல்லாம்

எப்போதாவது ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு 

ஒதுங்கி நின்று வழிவிடுவோம்

இப்போதென்னவோ

வழி நெடுகஆம்புலன்ஸ்

வலியோடு நாம் 


*முந்தைய நாட்களில்

எப்போதாவது எங்கேயாவது

சாவு செய்தி வரும்--நேரில் சென்று 

துஷ்டி கேட்காமல் இருந்தால் தூக்கம் கூட வராது


*இப்போதென்னவோ

வருவதெல்லாம் துக்க செய்திதான்

இறப்பு செய்திகளை கேட்டும் கூட 

இதயத்தை இறக்கி வைத்துவிட்டு 

 இரங்கல் செய்திகளை பதிவிட்டு வருகிறோம் 


*மலிவு விலையில் உயிர்கள் 

வாங்கமுடியா நிலையில் உடல்கள் 

பிழைப்பதற்கும் வழியில்லை 

புதைப்பதற்கும் வகையில்லை 

சடங்கோ சம்பிரத்தையோ இல்லை -

 இறுதிச்சடங்கு கூட காணொளியில் தான் 


எல்லா பிராத்தனைகளும் ஏறெடுக்க பட்டாலும் 

எந்த கடவுளும் இறங்கி வந்ததாக தெரியவில்லை 

எல்லா காடுகளையும் களவாடிவிட்டு 

காற்றுக்கு கடவுளிடம் கையேந்தி நிற்பது என்ன ?

இனியாவது விதைத்துவிட்டு செல்வோம் 

யாராவது மிச்சம் இருந்தால் தண்ணீராவது ஊற்றட்டும் --SKJ 






1 comment:

  1. Sir is water also supplied by our pm and fm sm we expected watet also from delhi govt not in a tamil nadu

    ReplyDelete