...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 6, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                    நமது மாநிலச்சங்கத்தின்  தொடர் முயற்சியால் மாநில நிர்வாகம் நேற்று அஞ்சலகங்களில் ரோஸ்டர் மற்றும் ரோஸ்டர் சாத்தியமில்லாத அலுவலகங்களில் வேலைநேரத்தை 4 மணி நேரமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது .இதனை தொடர்ந்து மண்டல அலுவலகம் அதன்பின்பு கோட்ட அலுவலகம் முறையான உத்தரவுகளை பிறப்பித்தவுடன் ரோஸ்டர் அமுலாகும் .நேற்றே இதர மண்டலங்களில் ரோஸ்டர் அமுலாக்கப்பட்டுவிட்டது .இது மத்திய மண்டலம் மாயவரம் கோட்ட உத்தரவு 

Dear All..

நாளைமுதல் அனைத்து SO க்களுக்கும்...

09 மணிமுதல் 01 மணி வரை மட்டுமே அலுவலக நேரம்.

BO வேலை நேரம் 10 to 12 hrs..

வேலை முடித்தவர்கள் பதுகாப்பு கருதி உடன் வீட்டுக்கு செல்லலாம்.

BO உள்ள அலுவலகங்கள் BO bag வந்தவுடன் வேலை முடிந்து செல்லலாம்.

HO வில் ROSTER அமல் படுத்தப்படுகிறது,

ஒருநாள் விட்டு ஒருநாள் பணி புரிய உத்தரவு இடபடுகிறது.

போஸ்ட்மேன்  staff தங்கள் return ஐ கொடுத்து விட்டுச்செல்லலாம்.

Th is order will be in force up to 20.05.2021 or until further orders whichever is earlier...

By

SPOs., Mayiladuthurai-609001

                           ஒருஅலுவகலத்தில் ஊழியருக்கு கொரானா வந்தாலும் அலுவலகத்தை கிருமிநாசினி தெளித்து பராமரிப்பதும் அந்த அலுவலகத்தை மூடாவா அல்லது செயல்பட அனுமதிப்பதா என்பதை மாவட்ட மாநகராட்சி ஆணையர் /சுகாதார அலுவலர் பரிந்துரையின் பேரில் மட்டுமே இனி நடக்கும் என கடந்த 29.04.2021 தேதியிட்ட மண்டல அலுவலக உத்தரவு இருக்கிறது .ஆகவே இனி அந்தந்த போஸ்ட்மாஸ்டர்களே மேற்குறிப்பிட்ட கிருமிநாசினி தெளித்து பராமரிப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் .நேற்று கூட திருநெல்வேலி தலைமைஅஞ்சலகத்தில் ஒரே வாரத்தில் மூன்று ஊழியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து நிர்வாகத்திடம் திருநெல்வேலி அஞ்சலகத்தை குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது மூடினால் என்ன நாம் கேட்டபோது மேற்சொன்ன பதிவினை தந்தார்கள் .மேலும் அவ்வாறு மூடப்படும் அலுவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் கோவிட் பரிசோதனை எடுத்தபின்னேரே பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என நமது கோட்டத்தில்  கூடுதல் பொறுப்பேற்றுள்ள SSP அவர்கள் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்கள் .

                          மேலும்  அலுவலகத்தில் சமூகஇடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுப்பது  ,வருகின்ற வாடிக்கையாளர்களை ஒரே இடத்தில் குவியாமல் டோக்கன் கொடுப்பது ,முகவர்களுக்கு தனி நேரம் ஒதுக்குவது என எல்லாமே அந்தந்த போஸ்ட்மாஸ்டர் பொறுப்பு என நிர்வாகம் தெளிவாக கூறிவிட்டது .நேற்றுகூட பல இடங்களில் ஒரு வங்கி உட்பட பல நிறுவனங்களுக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தால் சமூகஇடைவெளி கடைபிடிக்கவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..

   விழித்து   கொண்டோரெல்லாம்  பிழைத்து கொண்டார் --இங்கே குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் ????????  

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment