...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 11, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                   கோவிட் பரவலை தடுத்திட மாநில அரசு வருகிற 24.05.2021 வரை பிறப்பித்துள்ள ஊரடங்கின் காரணமாக  நமது மாநில அஞ்சல் நிர்வாகமும் 20.05.2021 வரை கடைபிடிக்கவேண்டிய சில நடைமுறைகளை வழங்கியுள்ளது .அதை கூட சில கோட்ட அதிகாரிகள் முழுமையாக பின்பற்றிட தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது  .முதலாவது நிர்வாக அலுவகத்தில் தொடங்கி பெரிய அலுவலகங்கள் வரை 50 சத ஊழியர்களை பணியாற்றிட அனுமதித்தால் போதும் என ரோஸ்டர் அனுமதிக்கப்பட்டது .இதர அலுவலகங்களில் வேலைநேரம் குறைக்கப்பட்டுள்ளது .ஆனால் பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் தபால்காரர் MTS ஊழியர்கள் குறித்து நிர்வாகம் கவலைப்பட்டதாக தெரியவில்லை .முற்றிலுமாக பேருந்து வசதிகள் தடைபட்ட போதிலும் அருகில் உள்ள அலுவலகங்களில் ஊழியர்களை பணியாற்றிட இதுவரை அனுமதி கிடைத்திடவில்லை .மேலும் பாதுகாப்பு அம்சங்களை வழங்கிடவும் நிர்வாகம் முழு அளவில் முன் வந்ததாக தெரியவில்லை .ஆகவே நிர்வாகம் அஞ்சல் துறையில் பணியாற்றுகின்ற பொதுமக்களுடன் நேரடி தொடர்புடைய தபால்காரர் மற்றும் GDS ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்களுக்கும் கூடுமானவரை ரோஸ்டர் முறையை அமுல்படுத்திடவேண்டும் .OUTSIDER களை பணிசெய்ய அழைப்பதால் கூடுதல் செலவாகும் என நினைக்கின்ற நிர்வாகத்திற்கு ஒரு நினைவூட்டல் --தபால்காரர்களும் மனிதர்களே --GDS ஊழியர்களும் மனிதர்களே !

தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் P-3 நெல்லை 

0 comments:

Post a Comment