அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நித்தம் நித்தம் தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்துக்கொண்டு வந்தாலும் இன்னும் கடமை தவறா அதிகாரிகள் தாங்கள் வந்துபோகும் அலுவகத்திற்கு மட்டும் (அனைத்து நிர்வாக அலுவகத்திற்கு ) ரோஸ்டர் முறையை அமுல்படுத்தியுள்ளார்கள் .சென்னை மண்டலத்தில் இரண்டு கோட்டத்தில் சென்னை தெற்கு ,சென்னை வடக்கு கோட்டங்களில் ரோஸ்டர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய செய்திகள் தெரிவிக்கின்றன .
நமது கோட்டத்தில் கூட மாஸ்க் SANITIZER மற்றும் FACE SHIELD இவைகளை வாங்குவதற்கு 28.04.2021 தேதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் பல அலுவலகங்களில் இதை நடைமுறைப்படுத்தவில்லை என்பதையும் மொத்தமாக JEM மூலம் பெற்றுத்தர ஏற்படும் காலதாமதத்தை கருத்தில்கொண்டு உடனடியாக அனுமதி அளித்திடவேண்டும் என்று நாம் நேற்று தொடர்ச்சியாக கடிதங்கள் வாட்ஸாப் மூலம் வேண்டுகோள் விடுத்ததின் பலனாக நேற்று பாதுகாப்பு அம்சங்களை வாங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .மேலும் சென்ற ஆண்டில் வாங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர் தனது செயலை இழந்துவிட்டதாக (4000 வரை ஸ்கேன் பண்ண முடியுமாம் ) இருந்தால் புதிய தெர்மல் ஸ்கேனர் மீண்டும் அனைத்து அலுவலகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் .
அத்தியாவசிய சேவை எனும் பெருமை ஒருபக்கம்---உயிர்காக்கும் அடிப்படை வசதிகளை கூட செய்துதர தாமதிக்கும் நிர்வாக செயல்பாடு மறு பக்கம் ---உதாரணமாக அனைத்து கவுண்டர் சேவையை மதியத்திற்குள் நிறுத்திவிட CPMG அவர்களின் உத்தரவை மீறி பாளையம்கோட்டை BPC இரவு 8 மணி வரை தொடரும் கொடுமை -இதுகுறித்து மாநிலச்சங்கத்திற்கு நாம் தகவல் கொடுத்துள்ளோம் .
மாற்ற கோரிக்கைகளில் தான் நிர்வாகம் நிர்வாக தாமதத்தை செய்யலாமே தவிர ஒரு பேரிடர் காலம் கொத்துக்கொத்தாய் மரணங்கள் இவைகளை கருத்தில்கொண்டாவது நமது இலாகா முதலவர் அவர்கள் தெரிவித்த கருத்தின் படி சேவை முக்கியம் அதைப்போல ஊழியர்களின் உயிர் முக்கியம் என்பதை மாநில /மண்டல /கோட்ட அதிகாரிகள் உணர்ந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment