...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 19, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                          உன்னை சொல்லி குற்றமில்லை --என்னை சொல்லி குற்றமில்லை ..............

  கொரானா இரண்டாம் தாக்குதலின் முதல் பலியாக நமது கோட்டத்தில் தோழர் சிராஜுதீன் டாக்சேவாக் திருநெல்வேலி மேற்கு அஞ்சலகம் அவர்களும் பெட்டைக்குளம் SPM தோழியர் அவர்களும் நேற்று (18.05.2021)அடுத்தடுத்து பலியானார்கள் என்ற துயரச்செய்தியோடு உங்களை சந்திக்கிறேன் .இதற்கிடையில் பல தோழர்களுக்கு விடுப்பை நீட்டிக்ககூடாது உடனே பணிக்கு வாருங்கள்   என கோட்ட அலுவலக உத்தரவுகள் ஒருபுறம்.

 .   *சென்றைய  பரவலின் போது (மார்ச் 2020  )பாதிப்புகள் குறைவு பாதுகாப்புகள் அதிகம் .நமது மாநிலசங்கம்  CPMG அவர்களுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி ஊழியர்கள் நன்மை அடைகின்ற வகையில் பல உத்தரவுகளை பெற்றுத்தந்தது .சென்றமுறை பிரதமரே அறிவித்த 21 நாட்கள் முதல் ஊரடங்கு ..அதில் அஞ்சல்துறை அத்தியாவசியத்துறை என்று பிரகடனப்படுத்தப்பட்ட தருணங்கள் ..சுழற்சிமுறையில் பணி .பணி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லலாம் 50 வயது தாண்டியவர்கள் சர்க்கரை நோயாளிகள் மாற்று திறனாளிகள் என ஊழியர்களை வகைப்படுத்தி விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை பெற்றோம் .பணிக்கு வரமுடியாத ஊழியர்களுக்கு எந்தவகையிலும் ஊதியம் பிடித்தம் செய்திடலாகாது பின்னர் தகுதியுள்ள விடுப்பாக மாற்றிக்கொள்ளலாம் என்கிறவரை சென்றது ..

    ஆனால் இரண்டாவது அலையான இந்தக்காலகட்டத்தில் பாதிப்புகள் அதிகம் -பாதுகாப்புகள் குறைவு --ஒருஅலுவகத்தில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்ப்பட்டால் அந்த அலுவலகத்தை மூடக்கூடாது உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் அலுவகத்தில் கிருமிநாசினி தெளித்துவிட்டு பணியாற்ற சொன்னது விடுப்புகள் வழங்குவதில் கடினமான நிர்வாக நிலை  இவைகளை குறித்து இந்தமுறையும் மீண்டும் மீண்டும் நமது மாநிலச்சங்கம் தலையிட்டு ரோஸ்டர் உள்ளிட்ட சலுகைகளை பெற்றுத்தந்தும்  தமிழகத்தில் குறிப்பாக  கோவை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோட்ட அதிகாரிகளுக்கு நமது தொழிற்சங்கங்கள் எடுத்த போராட்ட  முடிவுகளுக்கு பிறகுதான்  CPMG உத்தரவுகள் அமுலாக்கபட்டுள்ளது .

     *இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டும் பணியில் உள்ள தோழர்களில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரானாவிற்கு பலியாகியுள்ளனர் ..பெயர்மட்டும் நமக்கு கொரானா வாரியர்ஸ் ஆனால் முன்கள பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் எந்த சலுகையும் நமக்கு மறுக்கப்பட்டுவருகிறது .வங்கிகளில் வேலைநேரத்தை குறைத்து படிப்படியாக ஒருநாள் விட்டு ஒருநாள் வேலை என மாற்றப்பட்டுள்ளது ..ஆனால் அதைவிட மக்கள் அதிகமாக கூடும்  அஞ்சல் துறையில் ரோஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது அனைத்து ஊழியர்க்ளுக்கும் முழுமையாக சென்றடையவில்லை குறிப்பாக தபால்காரர்கள் மற்றும் MTS ஊழியர்களுக்கு ரோஸ்டர் எந்தவகையிலும் பலனில்லாத ஒன்றாகிவிட்டது .

  *இந்த சூழலில் நமது கோட்டத்தில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதை போல ஊழியர்களின் விடுப்பு வழங்கும் விசயத்தில் நிர்வாகம் நடந்து கொள்வது வருந்தத்தக்கது .அதே போல் விடுப்பு விண்ணப்பிக்கின்ற ஊழியர்களும் சாதாரண நாட்களில் விண்ணப்பிக்கும் நாட்களை போல் அல்லாமல் SAP மூலம் விண்ணப்பித்துவிட்டு உண்மையான மருத்துவகாரணங்களை விரிவாக கடிதம் மூலமாகவும் தெரிவிக்கவேண்டும் .கூடுமானவரை மருத்துவ சான்றிதழுடன் விடுப்பை விண்ணப்பிக்ககேட்டுக்கொள்கிறோம் .அருகாமையில் உள்ள அலுவகத்தில் பணியாற்றிட நிர்வாகம் கையை விரித்துவிட்டது ..ஆகவே இந்தப்பேரிடர் காலத்தில் ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம் .பணிக்கு வரும் ஊழியர்களுக்கு மனரீதியான உறுதி அவசியம் .இதைக்கருத்தில்கொண்டுதான் நாங்களும் தொடர்ந்து கோட்ட அலுவகத்திற்கு தினமும் சென்று நமது ஊழியர்க்ளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை (டெபுடேஷன் விடுப்பு ) செய்திட அதிகாரிகளை சந்தித்துவருகிறோம் .ஆகவே அச்சமின்றி பணியாற்றுங்கள் .சிறுகாய்ச்சல் என்றாலும் உடனடியாக விடுப்பை விண்ணப்பிக்க  தயங்காதீர்கள் .தோழியர் பார்வதி மூன்றுநாட்களாக காய்ச்சலுடன் பணி செய்ததன் விளைவு இன்று அவர் நம்மோடு இல்லை .....தோழமையுடன் SKJ 

NFPE

             ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                  TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-ORG / dated at Palayankottai- 627002 the 18.05.2021

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir 

It is nevertheless to say that during this Covid 19 Pandemic, several staff are facing body ailments either tested Covid 19 positive or having symptoms as pointed by ICMR. In this connection, rigid stand in granting leave will add fuel to the fire only. When an unprecedented lock down is imposed and lakhs of people are being affected by this epidemic, refusing leave is nothing but an inhuman approach. We can cite some example like the case of Smt Meenakshi SPM Alwarkurichi and Shri V Hariramakrishnan Accountant Tirunelveli HO and so on. Further, today Smt Parvathi SPM Pettaikulan lost her life. Whether the administration will take these into account?

Hence, this union humbly request our SSPOs to grant leave by taking a lenient view to ensure that our staff should not a victim of this cruel Covid-19.

                                            Awaiting favourable reply

                         Yours faithfully 

[S.K.JACOBRAJ]

 




1 comment:

  1. My deepest condolence to our comrade sirajudeen-and spm-pettaikulm-s.o.Please take care all of our staff's health.

    ReplyDelete