அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
கோவிட் -19 பெருந்தொற்றின் காலத்தில் பணிக்கு வராத நாட்களை ஒழுங்குபடுத்துவது சம்பந்தமாக குறிப்பாக எந்தெந்த நாட்களுக்கு ஊழியர்களின் ஆப்சென்ட் நாட்களை பணியாகவும் /விடுப்பாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும் என அஞ்சல் வாரியம் 24.05.2021 அன்று வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் ஆணை ..
a ) தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என குறிப்பிடும் பொழுது ---கோவிட் பாசிட்டிவ் உள்ளவர்களுடன் தொடர்பில் இருத்தல் அதாவது அலுவலக பணியின் போதோ அல்லது பணி சம்பந்தமான பயணம், இடமாறுதலின் போது ,டெபுடேஷன் செல்லும் போது அல்லது அவர்கள் வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த போது (இதற்கான பரிந்துரையை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் பெற்றிருக்க வேண்டும் )
b ) மத்திய /மாநில அரசுகள் தடைவிதித்த பகுதிகளில் குடியிருப்பவர்கள் /நோய் தொற்று உள்ள பகுதி என அறிவிக்கப்பட்ட இடத்தில இருப்பவர்கள் ,போக்குவரத்து தடைப்பட்டிருபது அல்லது விடுப்பு ,LTC என அனுமதி பெற்று சென்றவர்கள் மீண்டும் தங்கள் தலைமை இடங்களுக்கு திரும்பமுடியாத நிலை
C /வீட்டில் இருந்து பணியாற்றிய நாட்கள் என இந்த மூன்று (a ,b ,c ) பிரிவில் வருகிறவர்களுக்கு அவர்களுடைய ஆப்சென்ட் நாட்கள் பணி நாட்களாக கருதப்படும் .
d) ஊழியர்கள் விடுப்பு /LTC முடிந்தபின் தனிமைப்படுத்துதல் /என சொல்லப்படும் நாட்கள்
e)தனிமைப்படுத்தியதாக சொல்லப்படும் நாட்கள் ,தடைசெய்யப்பட்ட பகுதிக்கு பயணம் செய்தபின்பு, .அனுமதி இன்றி தலைமையிடத்தை விட்டு சென்று ஆப்சென்ட் ஆன நாட்கள்
f )கோவிட் பாசிட்டிவால் ஆப்சென்ட் ஆன நாட்கள் என இந்த மூன்று (d ,e,f ) பிரிவில் வருகிறவர்களுக்கு அவர்களுடைய ஆப்சென்ட் நாட்கள் விடுப்பு விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு விடுப்பாக மாற்றப்படும்
இந்த அடிப்படையில் விடுப்பு வழங்கும் அதிகாரி சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்துவிட்டு விடுப்பு வழங்கலாம் .ஒருவேளை விடுப்பு மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் அதற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிக்கு மேல் முறையீடு செய்யலாம் ..அவ்வாறு மேல்முறையிடு செய்யப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரி 15 நாட்களுக்குள் முடிவெடுக்கவேண்டும்
இந்த உத்தரவு முதலாம் ஊரடங்கு பிறப்பித்த 24.03.2020 முதல் மறு உத்தரவு வரும் வரை பொருந்தும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment